பாடாண் திணை என்பதன் தன்மையை ஓரளவு அறிந்தோம். துறைகள் இத்திணையில் பலவாகும்.
ஒன்றிரண்டைப் புரிந்துகொள்வோம்.
1. ஒரு புலவர் அரசன் பிறந்த நாளைப் பாடுகிறார். பாடாண் திணை. ஆனால் துறை யாது? இதன் துறை நாண்மங்கலம் என்பது.
2. ஓர் அரசன், புலவர்க்கு தானும் மகிழ்வு எய்திப் புலவரும் போற்றும் வண்ணம் பரிசில் அளிக்கின்றான். அதன்பின் புலவர் சின்னாட்கள் தங்கியிருக்கிறார் நல்ல உரையாடலும் விருந்தும் நடக்கின்றது. புலவருக்கு ஊர் ஞாபகம் வந்துவிடுகின்றது. விடை கொடுங்கள் என, அரசர் ஏன் இந்த விரைவு என்கிறார்.
மேலும் இரண்டுமூன்று நாடகள் ஓடவே, புலவர்: நான் போகவே வேண்டும். இல்லையென்றால், என் உறவினர் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். எதோ ஒருபகை நாட்டினுள் அடியெடுத்து வைத்தது போல ஆகிவிடும் என்கிறார்.
அப்புறம் மேளதாளத்துடன் ஊருக்குச் செல்ல இசைவு கிட்டுகின்றது.
ஒரு பாடல் இப்படி வருமானால், அது என்ன துறை. ?
அதுதான் "பரிசில் நிலை" என்னும் துறை.
இப்படி 48 துறைகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக