திங்கள், 22 செப்டம்பர், 2014

பாடாண் திணை

 (  இந்த இடுகை சில முறை கள்ள  நுழைவர்களால்  மற்றும்  மென்பொருள்களால் தாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எழுத்துக்களையே மாற்றியுள்ளனர் என்று அறிகிறோம்.  கவனமாக வாசிக்கவும்.  சில வாக்கியங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம்.)


வாகைத்திணை என்பது யாது என்று சிறிது கண்டோம். இப்போது பாடாண் திணை என்பது யாது என்று அறிதல் பொருத்தமானது.

முன்னர் நான் இங்கு விளக்கமெழுதிய சில பாடல்களுக்குத் திணை குறித்துள்ளேன். அவற்றுள் பாடாண் திணையுமொன்று.

பாடாண் என்பது பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாறு என்று சொல்லப்படும். பாடு + ஆண் என்பது பாடாண் ஆயிற்று.அன்மொழித் தொகை.

"ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்து  உரைத்தன்று "

என்பது பாடாணுக்கு அளிக்கப்படும் விளக்கம்.

ஒளி ‍  -புகழ். ஆற்றல் ‍ ஒன்றை இயற்று திறன். ஓம்பா ஈகை ‍ எதையும் ஒளிக்காமல் அறம் செய்தல்.  அளி ‍: இரக்கம்.

பாடாண் திணையில் இவையும் இவை போல்வனவும்  பாடுபொருளாய் வருமென்று அறிக. இதில் துறைகள் பலவாகும்.

மறுபார்வை நாள்:  31.12.2017 

 தொடர்புடைய   மற்ற  இடுகைகள்:


















வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக், கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ, உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ, மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே, இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு, புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,














































 
மறுபார்வை செய்யப்படும்.



கருத்துகள் இல்லை: