தமிழ் வேந்தர்களும் குறு நில மன்னர்களும் ஆண்ட போது, புலவர்கட்கு நல்ல மதிப்பு இருந்தது. தகுதியான நேரத்தில் மன்னனைக் காணவும், பேசவும் ஒரு பாடல் மூலம் அவனுக்கு அறிவுரை புகட்டி நல்வழியில் உய்க்கவும் புலவருக்கு ஓர் எழுதப்படாத அதிகாரம் இருந்ததென்றால் அஃது மிகையன்று.
இப்படிச் செயல்படும் புலவருக்கென்று புறப்பொருள் இலக்கணம் பாடாண் திணையில் ஒரு துறையை அமைத்தது. அத்துறைக்கு ஓம்படை என்று பெயராம். ஓம்படையில் புலவன் நேராக அறிவுரை கூறி அரசன் மனத்தைப் புண் படுத்தாமல், "மன்னா, இத்தகைய சூழலில் நீ இப்படிச் செய்வதுதான் இயல்பு " என்று அழகாக எடுத்துரைப்பார். அவன் அதை உணர்ந்து கொள்வான்.
இதனை: " இன்னது செய்தல் இயல்பென இறைவன்
முன்னின்றறிவன் மொழிதொடர்ந்தன்று" என்கிறது புறப்பொருள் இலக்கணம்.
ஓம்படை ஓம்பு + அடை. ஓம்புதல் = காத்தல்; அடை = அடைவித்தல்.
காக்கும் நன்மையின் பக்கமாக மன்னனை ஒப்புவித்தல் என்பதாம்
மன்னன் + கு = மன்னற்கு , மன்னனுக்கு ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக