புதன், 24 செப்டம்பர், 2014

பாடாண் திணையில், துறை: பொலிவுமங்கலம்.

மன்னர் பிரானுக்கு அழகிதாய் ஆண்மகவு தோன்றி, அரசியும் அவரும் ஆனந்தக் கூத்தாடுதலில் ஆழ்ந்துகிடக்கின்றனர். அரண்மனை புகுந்த அருந்தமிழ்ப் புலவர்,  அனைவரும் போற்றிப்பாடிக்கொண்டிருப்பதை அறிந்துகொள்கிறார்.  அரண்மனையே பொலிந்து காணப்படுகின்றது. மங்கலமே எங்கும் தங்குகின்றது. புலவரும் பாடுகிறார்.

இது என்ன திணை?  என்ன துறை?

இதுவே பாடாண் திணையில்,  துறை: பொலிவுமங்கலம்.

மிக்கப் பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்களே, புறப்பொருள் இலக்கணியர்?!

வெல்வேந்தன் உள்மகிழப்
பாலன்பிறப்பப் பலர்புகழ்ந்தன்று.இது கொளு.

நீங்கள் இப்போது அந்தக்காலத்துக்குப் போய்விட்டீர்கள். மன்னன் கரிகாலனின் அரண்மனையில், அவனுக்குப் பிறந்த குழவியைப் புகழ்ந்து பாடுகிறீர்கள். பொலிவுமங்கலத் துறையில் பாடாண் திணையில் ஒரு பாடல் புனைகிறீர்கள். மன்னன் கரிகாலன் கேட்கிறான். பாடி மகிழுங்கள். அனுப்பிவைத்தால், இங்கு வெளியிடுவோமே.

You may use the comments feature,

கருத்துகள் இல்லை: