சனி, 20 செப்டம்பர், 2014

குள் >.etc..... and குளிகைகாலம் ‍‍

குள் என்ற அடிச்சொல் குட்டை, குள்ளை (குள்ளையன், குள்ளைச்சி) என்று நீளக் குறைவைக் குறிக்கும் சொற்கள் பலவற்றைப் பிறப்பித்துள்ளமை முன் இடுகைகளில் கண்டோம். அதனால் குள் என்பதற்குக் குட்டைத்தன்மை ஒன்றே பொருளெனல் கூடாது. வேறு பொருள்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக:

குள் > குளிர், குளிர்தல், குளிர்ச்சி.
குள் > குளியல், குளித்தல்.
குள் > குளு > குளுகுளு ,  குளுமை.

குள் > குளம்.

குளிகைகாலம் ‍‍ ‍

குளித்தல் என்பது மாந்தன் மீண்டும் மீண்டும், நாள்தோறும்,  அல்லது காலை மாலை செய்ய வேண்டிய செயலாகின்றது. உடல் வெப்பமடையும் போது அதனைக் குளிர்விக்க வியர்வை முதலியவை அடிக்கடி தோன்றுகிறது.  அதனால் மறு நிகழ்வுக்கு "குளி" என்பதிலிருந்து குளிகை என்ற சொல்லை ஆக்கியுள்ளனர்.
நற்காரியங்கள் மீண்டும் மீண்டும் வரவேண்டும். குளித்துத் தூய்மை செய்துகொள்ளல் போல. உடலைக் குளிர்வித்துக்கொள்ளவும் வேண்டும்.
அப்போது தட்பவெப்பம் சமன்படும்.

மேலும் குள் என்பது குட்டையையும் குறிக்கும். குளிகன் என்னும் கோள் தோன்றி  ஒன்றரை மணி நேரமே நீடிப்பதால், இது குறுகிய நற்காலமும் ஆகும். மீண்டும் மீண்டும் நடக்கவேண்டிய நற்செயல்கள் நடத்துதற்குரிய காலமாம்.

குளிகை என்பது மிகவும் அருமையாக அமைந்த சொல்லாம்.

கருத்துகள் இல்லை: