வியாழன், 11 செப்டம்பர், 2014

பிரேமையில் யாவும் மறந்தேன்.


இது பல இனிய பாடல்கள் தந்த பழம்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாட்டின் தலைப்பு  . இது.பாட்டுக்கு நல்ல வரி; இப்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, வேலைக்குப் போவதையும் துறந்துவிட்டுத் திரிந்தால், இக்காலத்தில் நிலை நிற்க முடியாது. பெண்களின் உழைப்பில் குடும்பங்கள் பல வாழ்கின்றன.

பிரேமை என்பது தான் என்ன? இதை விளக்கும் கதைகள், கட்டுரைகள்,  காவியங்கள், ஓவியங்கள் பலப்பல. பிரேமையை விளக்குதல் எம் நோக்கமன்று.

மனிதன் குகைகளில் வாழ்ந்த தொல்பழங்காலத்தில், ஒரு குகையில் உள்ள பெண்ணை அதே குகையில் வாழ்ந்த அவள் குடும்பத்தார், அடுத்த குகைக்காரர்கள் வந்து தூக்கிக் கொண்டுசென்று விடாதபடி பார்த்துக்கொண்டனர். அதாவது அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தனர். 


குடும்பம் கொடுத்துவந்த காவலை. வந்து அவளை விரும்பியவனும் இப்போது கொடுத்து அவளை மேலும் காத்தான்.  அவள் வேறு எங்கும் சென்றுவிடாதபடி
காப்பதும் வேறுயாரும் தூக்கிச்சென்றுவிடாதபடி காப்பதும் என இவை யாவும் பிறவும் செய்வான், ஆகவே. கா (காவல்) என்ற கருத்திலிருந்து  கா > காதல்; கா > காம் > காமம் என்பவை எல்லாம் அமைந்து வழங்கின.
பிரேமையில் மற்றவற்றை மறந்துதானே ஆகவேண்டும்?

பிரேமை என்பதென்ன?  ஏம் என்பது காவல். பாதுகாப்பு என்று பொருள்தரும்.
ஏமம் என்பதும் அதுவே. அம் விகுதி பெற்றது.  ஏமை என்பது, ஏம்+ ஐ சேர்ந்த சொல்.  ஐ ஒரு விகுதி. பிற குகையிலிருந்து வந்து அவளைக் காத்தலால், பிற காவல் ஆகும் அது.  பிற+ ஏமை = பிர + ஏமை ‍= பிரேமை.
பிற என்பதைப் பிர என்று திரித்தல், ஒருதிறனே ஆகும்.

சில சொற்கள் தம் ரகர றகர வேறுபாட்டை இழந்துவிடும், அதுவும் சொல்லாக்கத்தில்,  உண்மை.
 கருப்பு ‍ கறுப்பு.
 காரல் ‍ காறல்.
 தருவாய் ‍ தறுவாய்.

இவற்றில் ரகர றகர வேறுபாடின்மை அறிக.

பிரேமை என்பது தமிழ் மூலத்தில் அமைந்தது. தமிழ் மூலங்கள் பிற மொழிகளில் சொல்லாக்கத்திற்குப் பயன்பட்டுள்ளன .

பிரேமை  என்ற சொல்லை  இருக்கு வேதத்தில்  தேடிப்பாருங்க்கள்

குறிப்பு:  கவர்தலும் காத்தலுடன்  .தொடர்புடையதே .மற்றும் காதல் தன்வினை வடிவிலும் காத்தல்  பிறவினை வடிவிலும் இருத்தலைக் காணலாம்..

கருத்துகள் இல்லை: