புதன், 24 செப்டம்பர், 2014

பாடாண்திணை, துறை: குழந்தைபால் கொண்ட காமம்

பாடாண்திணை, துறை: குழந்தைபால் கொண்ட காமம்

புலவன் தன் பாடலில் ஒரு சிறு குழந்தையின் மேல் பருவமங்கை (வளமங்கை) காமம் மேலிட்டு நின்றதாகப் பாடுவது:  "குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி" என்று பாடாண் திணையில் ஒரு துறையாக அடக்கப்பெறும். இது வேடிக்கையாய் இருக்கலாம். இத்துறை ஒரு சரியான இனிய துறைதான். எப்படி?

இதனைத் தொல்காப்பியனார் "குழவி மருங்கினும் கிழவது ஆகும்" என்கிறார்.

இதற்கு என்ன உதாரணம் தரலாம்?

கண்ணன் வளர்ந்து பெரிய ஆண்மகனாகி விட்டான். என்றாலும் அங்கு வந்த கோபியருள் ஒருத்தி, கண்ணனை அள்ளிக் கொஞ்சியதாகவும், முத்தங்கள் பதித்ததாகவும், இறுகப் பற்றி இனிய மொழிகள் புகன்றதாகவும் புலவர் பாடுவாகில், புலவர் தன் கவிதையில் காலத்தால் பல்லாண்டுகள் பின்னே போய்விட்டார்; கற்பனையில் மிதக்கின்றார்; உண்மையாகக் கண்ணனிடம் அப்பெண் காமவயப்பட்டு மென்மைப்பட்டாள் என்பதன்று. கவியின் கற்பனைதான். அவர் சொல்லவந்தது வேறு. கண்ணன் கடவுள். கோபி பற்றாளி; அம்மாத்திரத்தில் அது இறை நலம் விழை பற்றின் வெளிப்பாடுதான். உண்மையை மட்டுமே உரைத்தால் அது ஓவியத் தன்மை அற்ற வெறும் வரிகள் ஆகிவுடுமே! கவிதைக்குக் கற்பனை வேண்டுமே!

ஆகவே பெரிய கண்ணனை சிறிய குழவியாக்கி, புலவர் விழைந்த சேட்டைகளைச் செந்தமிழ்ச் சீர்சால் அசைகளாக்கி,  கவி கேட்டோர் நெஞ்சங்களை வருடுகிறார். But in bakti, this may yet be differently interpreted.

இனி, அரசனுக்கும் பிறருக்கும் இது பொருந்தும். அரசனைச் சின்னப்பிள்ளை ஆக்கிவிட வேண்டியதுதான்.

பாடாண் திணை என்பது "புறப்புறம்" எனப்படும்.  This thinai is among the ones that is on the outer skirts of  actual "puRam".  It is puRam because the hero is a king and the so-called lover is a subject who is depicted as one in love with him but in truth, there is no love, but just liking, admiration and intense loyalty./ devotion. These kinds of poem say something but mean something else.

கருத்துகள் இல்லை: