செவ்வாய், 23 செப்டம்பர், 2014

The original source of word "red"?

இப்போது சொற்கள் சிலவற்றைச் சிந்திப்போம்:

*(அர்) > அரத்தினம்>  ரத்தினம்> இரத்தினம்.
*(அர்) > அரத்தை.
*(அர்) > அரத்தம்>  ரத்தம். இரத்தம்.
*(அர்) > அரன்  (செம்மை, செந்நிறக் கடவுள், சிவ> சிவன்)
(அர்) > அரசநாபி  (red aconite)

மேற்குறித்தவை யாவும் செம்மைப் பொருள் உடையன.

(அர்) > (அரத்து ) > ரத் > red. (English)  (அர் + அத்து )   



அர் என்பது சிவப்பு  நிறம் குறிக்கும் ஒரு தமிழ் அடிச்சொல். 
------------------------------------------------------------------------------------
*This has been pointed out by other etymologists


அது > அத்து    .இது  என்பது இத்து என்று மலாய் மொழியில் திரியும்.
இது -  it.

The original source of  word "red"

Sanskrit rudhira.     எ ன்ற சொல் லும்   நன்கு ஆராய்தற்குரியது.


இதெல்லாம்  கடினமான  வேலைதான்.   ஒரு  அறுத்த விலங்கு  உருவிலிருந்து  வெளிப்படுவது    அரத்தம்.  இது  அறுத்தல் என்ற சொல்லுடன்  தொடர்பு உள்ளது,     விலங்கை  அறுத்தவுடன் வெளிப்படுவது  அரத்தம்.  அறு+ அத்து  + அம் .> அறத்தம் >  அரத்தம் > ரத்தம் >  இரத்தம்   ரகரம் றகரமாகவும்  பின்னது  முன்னதாகவும்  மாறும்  வசதி  உடையவை     அறுத்து   வெளிவருவது சிவப்பு நிறத்தது ஆதலின், அரத்தம் என்பதற்குச் சிவப்பு என்ற பொருளும் ஏற்பட்டது.

அப்படியானால் மறம் என்பதை ஏன் மரம் எனல் கூடாது? திட்டவட்டமான பொருள் திண்மை பெற்றபின்பு இவற்றை மாற்றி மாற்றி எழுதினால் பொருள் விளங்காமல் போய்விடும், மிகப் பழங்காலத்தில் இவை ஒன்றுக்கு மற்றொன்று வந்திருக்கலாம். அது அந்தக் காலத்துக்குச் சரி. சொல்லாய்வு என்பது பழயதை ஆய்வ்து என்று அறிதல்வேண்டும். கருப்பு கறுப்பு போன்றவை பாதிக்கப்படாமல் இன்றும் உலவுகின்றன, ற என்பதே இரு ர (ரர) இணைந்த எழுத்தென்பதைக் கவனிக்கவும்.
 .


ருத்திரா என்ற சமஸ்கிருதமும் "அறுத்திர்ரா" ( அறுத்திருடா) என்ற அறுப்புக்கொட்டகைச் சொல்லின் மருஉவே என்று உணர்க.

கருத்துகள் இல்லை: