இனி பாதுகை என்னும் சொல்லைக் காண்போம், இச்சொல் இப்போது பொதுப்புழக்கத்தில் இல்லை.
கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறவள், வெளியில் கிடக்கும் செருப்புக் கடலில் தன்னுடையதைத் தேடும்போது, "செருப்பை எங்கு போட்டேன் என்று தெரியவில்லை" என்கிறாள். "பாதுகையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்பதில்லை. ஆனால் இராமர் பற்றிக் கூறுகையில், " பாதுகையே துணையாகும்" என்கிறோம். சிலவிடங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடிகிறது.
பாதுகை என்பதில் முன் நிற்பது பாதம் என்பது, பாதம் காலணியை உகக்கிறது.
அதாவது காலணியை அணிய விரும்புகிறது, அணிகிறது.
பாத(ம்) + உக + ஐ = பாத் + உக + ஐ = பாத் + உக் + ஐ = பாதுகை.
மகர ஒற்று, அகர ஈறு, மீண்டும் அகர ஈறு முதலிய கெட்டன.
ஐ விகுதி .
பாதமென்பது கால் தரையில் பதியும் பகுதி என்பது. பதி + அம் = பாதம், எனின் முதல் நிலை திரிந்தது அம் விகுதி பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக