வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சங்கம்

சென்ற இடுகையில், "த்து" என்பது "ச்சு" ஆவதைக் கவனித்தோம்.

தகரம்  சகரமாவது, சொல்லில் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரலாம்.

இதைப் பாருங்கள்.

அப்பன் > அத்தன் > அச்சன்.

இங்கு மொழி இடையில் "த்த" என்பது "ச்ச" ஆயிற்று. இங்கு மொழி என்றது சொல்லை.

மொழி முதலிலிலும் இத்திரிபு வரும்.

சங்கப்புலவர்கள் மதுரை சென்று புலவர் கூட்டத்தில் கலந்துகொண்டு, கவி பாடி அரசனிடம் பரிசில் பெற்றனர். அப்போது அவர்கள் அங்கு தங்கி
 அரசன் அளித்த உணவை உண்டு மகிழ்ந்து, அவையிலும் பங்கு பற்றினர். உடனே திரும்பிவிட அப்போது வானவூர்திகள் ஏது?  மகிழுந்துகளும் இல.
ஆகவே தங்குதற் கருத்திலிருந்தே சங்கம் என்ற சொல் உருவாகிற்று.

தங்கு > சங்கு. 
இது ஊர்ந்திடும் ஒரு சிற்றுயிரி தங்கி வாழும் கூடு குறித்தது.

தங்கு > சங்கு > சங்கம் :  சங்கு.

சங்கு > சங்கம் = புலவர்கள் தங்கிக் கவிபாடிய இடம், புலவர் கூட்டம்.

சமைத்தல் என்பது தமிழே. இதன் அடிச்சொல்  சம் என்பது.  சம்> சமை.

அமை > சமை. சமைத்தலாவது, உண்பொருள்களைக் கூட்டி ஆக்குதல்.

சம் > சம்+கு > சங்கு > சங்கம்.

அம் > தம் > சம்.

தம் > தம்+கு > தங்கு.

உயிர் முதலானது, உயிர்மெய் முதலாகத் திரிதல், பெருவரவு ஆகும்.

இப்போது விரித்துரைக்காது இவற்றை மட்டும் அறிந்தின்புறுவோம்

This has been explained before to some extent..  

கருத்துகள் இல்லை: