வெள்ளி, 15 டிசம்பர், 2017

நிவாரணம் எங்கே? இதோ....





நிவாரணம் என்ற சொல்லை ஆய்வுசெய்க.
ஒரு துன்பமோ அல்லது துயரோ:
நி   =  நீங்கி;
வார் =  வருகின்ற;

அணம் :  இது ஒரு விகுதி.  பெரும்பாலும் அண்மைப் பொருள் தருவது.     அண் > அண்முதல்;  அண் - அண்மை.  இப்பொருளை இழந்து  வெறும் சொல்லிறுதியாகவும் வரும்.  பட்டு என்பது ஒரு சிற்றூரையும் குறிக்கும்.  அதற்கு அண்மிப் பெரிதாய் இலங்குவது பட்டணம்.  பல பட்டுக்கள் அண்மி நிற்கும் ஒரு சிறுநகரம் பட்டணம்.

கட்டணம்:  ஒருவன் சென்று அல்லது அண்மிக் கட்டும் தொகை.  அணிமைப்பொருள் தேய்ந்துவிட்டதெனினும் ஒப்புக.
வார் என்பது வரு என்பதன் திரிபு.  வரு> வாராய்! வரு > வாரார் ( எதிர்மறை).  வரு> வாரும், வாருங்கள்.

இந்த வார் என்ற சொல் நிவாரணம் என்பதில் பயன் கண்டுள்ளது.
நிவாரணம்: ஒரு துயர் அல்லது இடர், நீங்குவதற்கான; அல்லது கோணல் நிமிர்வதற்கான நிலை.

ஒரு கம்பியை நிமிர்த்தினால் நீங்குவதும் நிமிர்வதும் ஒன்றென்பது விளங்கும்.  பின்  வளைந்த நிலையிலிருந்து  நீங்கி முன் இருந்த நிலைக்குச் செல்கிறது கம்பி.  ஆக அது நிமிர்ந்துவிட்ட்து.

நி. நீ எல்லாம் ஒன்றுதான்.

சொற்களின் அடிப்படைகளைக் கண்டுகொண்டால்
தமிழ் எளிது; இனிது.





கருத்துகள் இல்லை: