சனி, 16 டிசம்பர், 2017

இங்கு ஏன் இத்தனை பிழைகள்?



எதைச்செய்வது என்`கின்ற கேள்வி என்னுள் எழுந்தது. செய்வதற்குப் பல உள்ளன. ஆனால் அதற்கான அறிவும் வேண்டும். 

எடுத்துக்காட்டாக, “என்`கின்ற” என்ற யானெழுதும் சொல்லின் என் என்ற ஈரெழுத்துக்களை அடுத்து ஏன் ஒரு மேற்புள்ளி இருக்கிறது என்று கேட்கலாம். இதிலுள்ள இடர் என்னவென்றால்: அந்தப் புள்ளியை வைக்காவிட்டால் அந்தச் சொல் “எங்கின்ற” என்று தானே மாறிக்கொள்கின்றது. அதனைத் திருத்தி மேலேற்றினாலும் அது என் கணினியை விட்டு நீங்கிய பின் இணையத்தில் மாறிக்கொள்கிறது என்று நினைக்கின்றேன். அது பிழையாகிவிடுகிறது. 

இதை கணினி நிபுணர்தான் சரிசெய்ய முடியும். இதற்கு இந்தச் செயலியின் அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கத் தெரிந்திருக்கவேண்டும்.  அது எனக்குத் தெரியாது. மாற்றியமைக்கும் சட்டப்படியான அதிகாரம் எனக்குள்ளதா என்று தெரியவில்லை.  இந்தச் செயலியின் அமைப்பாளர்களுக்கே அந்த அதிகாரமிருப்பதாக நினைக்கிறேன்.  

தற்போதுள்ள சூழ்நிலையில் இடுகையை அடிக்கடி சரிபார்த்தாலும், பதிவிறக்கம் செய்யச் செலவு கூடிவிடுகிறது. செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருத்தல் முன்மையான தேவையாதலின் இப்போது யான் செய்யமுடிந்தது என்`கிறது என்ற சொல்லில் ஒரு மேற்புள்ளி யிடுவதே ஆகும்.


சிலவேளைகளில் இந்த்த் தமிழ்ச் செயலி தேவைக்கதிகமான புள்ளிகளை இட்டுவைக்கிறது. புள்ளிகளை நீக்கப் பலமுறை இடுகையைப் பதிவிறக்கம் செய்து திருத்தவேண்டியுள்ளது. இந்தப் பாகியின் முதல் வாக்கியத்தில் வரும் சொற்களில் சில தேவைக்கதிமான புள்ளிகள் உள்ளன அல்லவா? கண்டு முகம் சுளித்தல் தவிர்க்கவும்.  ஒன்றுவிட்டு எழுத்துக்களில் புள்ளியிட்டால் வரிசையாக மூன்றெழுத்துக்களில் புள்ளிகள் வந்துவிடுகின்றன. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காக நான் இந்த இடுகையில் திருத்தமெதுவும் செய்யாது வெளியிடுகிறேன்.

எத்தனை புள்ளியிடுவது என்று இவளுக்குத் தெரியவில்லையா என்று ஏசிவிடாமல் அன்புடன் இடுகைகளை வாசித்து உள்ள இடர்களை நீங்கள் புரிந்துணர்வுடன் அணுகுவீர்கள் என்று யான் நம்புகிறேன்  

உள்ள கட்டிடர்களைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். கட்டிடர் என்பது கட்டிப்போட்ட்துபோன்ற தொல்லைதரும் இடர்.
இந்தச் செயலி எப்படியெல்லாம் புள்ளிபோடுகிறது பார்த்தீர்களா?

வேறு செயலிகளைப் பயன்படுத்தலாமே என்பீர்கள். வேறு செயலிகளில் ஏற்படும் இடர்களை விளக்க இன்னோர் இடுகை தேவைப்படும். புள்ளிகள் இட்டாலும் எழுதியது திடீரென்று காணாமல் போய்விடுகிற தொந்தரவு இல்லை.  ஒருமுறை எழுதிக்கொண்டிருந்தது மறைந்துவிட்டால், பிணிவாய்ப் பட்டதுபோன்ற ஒரு நிலையில் வீழ்ந்துவிட நேருமே. 

வெளியார் கள்ளக் கடவுமூலம் உள்புகுந்து பிழைகளை உண்டாக்குவதையும் கவனிக்கவேண்டியுள்ளது.

இடரில்லா உலகு செவ்வாய்க் கோளில் அன்றோ இருக்கிறது.......
  

கருத்துகள் இல்லை: