நீ என்பது முன்னிலை ஒருமைச் சொல் என்பர் இலக்கணியர். அதாவது முன்னிற்கும் ஒரு நபரைக்1 குறிக்கும்.
நீ என்பது ஓர் அடிச்சொல்லுமாகும். அங்ஙனம் வருங்கால்
அது நீக்கப்பொருளை அடிப்படைக் கருத்தாகத் தருவது. முன்னிலை ஒருவனை நீ என்னும் போதும் அதுவும் நீக்கப்பொருளே. தன்னின் நீங்கிய பிறன் முன்னிற்போன் என்ற பொருளையது
தரும்.
அடிச்சொல்லாய் அது விகுதி
(மிகுதி) பெற்று நீளும்.
நீ > நீங்கு >
நீங்குதல்.
நீ> நீங்கு >
நீக்குதல். (பிறவினை).
நாற்றமான பொருள் தன்னின் நீக்கமடையும்.
நீ > நீச்சு.
( சு என்பது விகுதி). பொருள்: நாற்றம்.
நீ > நீச்சு >
நீச்சம் ( விலக்கத்தக்கது. நாற்றம்பிடித்தது
).
நீச்சம் > நீசம் > நீசன். இழிவானவன்.
நீசமடைதல்: கோள் வலுவிழந்து, செயலிழந்து போதல்.
“கிரகம் நீசமடைந்த்து
“ என்பர்.
நீரால் நீங்கிச் செல்லுதல்
நீச்சல்.
நீ > நீந்து > நீந்துதல்.
நீந்து > நீந்தல்
> நீச்சல்.
நீந்து > நீச்சு
( நீந்துதல்).
(இது நீந்து :> நீத்து > நீச்சு எனவரும். த> ச திரிபு). இடைவடிவம் தவிர்க்கப்பட்டது)
நீஞ்சு > நீஞ்சுதல். நீஞ்சு > நீச்சு.
நீ > நீத்தல். ( உயிர் நீத்தல் முதலியவை)
நீ என்ற சொல் பல சொற்களுக்கு அடியாக உள்ளது. சில இங்குச் சொல்லப்பட்டன.
1 நபர் <
நண்பர் இடைக்குறை. இடைக்குறைந்தபின்
ஆள் என்ற பொருளில் வழங்குகிறது.
Edited 8.12.2017.
An irrelevant paragraph found herein has been deleted.
An irrelevant paragraph found herein has been deleted.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக