பல்கலைக் கழகத்தில் படித்ததையே சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு படிப்பாளி என்று
சொல்லலாம். ஒருவேளை அவனுடைய நினைவாற்றலைப்
போற்றிப் புகழலாம். இவைதவிர அவனைச் சிந்தனைச்
சிற்பி என்று கூறிவிடமுடியாது. புதியவற்றைக் கண்டுபிடித்து அறிவுறுத்துவோனைச் சிந்தனாயாளன்
என்று தூக்கிப் போசலாம். அஃது பொருந்துவதாக
இருக்கும். நிற்க,
காந்தி என்ற பெயர் தமிழர்களுக்கும் இயற்பெயராய் அமைந்திருக்கலாம்.
ஆனால் இராகுல் காந்திக்கு இருப்பதைப் போல் அது குடிப்பெயராய் எங்கும் தமிழ்நாட்டில்
அமைந்திருப்பதாகத் தெரியவில்லை.
அம்மனுக்குக் “காந்திமதி” என்ற பெயரிருப்பினும் இந்தக் “காந்தி”
என்ற சொல் வட இந்தியாவில் வழங்கும் காந்தியுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.
கந்தம் என்பது வாசனை என்று பொருள்படும் சொல். “௳டல்
பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம் “ என்று ஓளவையாரின் பாடலில் வருகிறது என்பதை நீங்கள்
நினைவு கூரலாம். தாழம்பூ பெரிய மடல்களை உடையது; மகிழம்பூவோ சிறியது; இருந்தாலும்
மகிழம்பூவில் உள்ள வாசனை தாழையில் இல்லை என்பது ஔவையின் இனிய அறிவுறுத்தல் ஆகும்.
கந்தம் என்பது மணம்.
வாசனை. கந்தம் + இ = காந்தி ஆகிறது. இப்புணர்ச்சியில்
அம் விகுதி கெட்டு, கந்த + இ என்று நின்று, ககரம் நீண்டு, காந்த + இ, என்றாகி, அப்புறம் த-விலுள்ள அகரமும் கெட்டு, காந்த்+ இ எனத்
தோன்றி, காந்தி ஆகிறது. இது வாசனையுள்ள பெண்
என்று பொருள் சொல்ல வழிதருகிறது. கந்தி என்பது வாசனைப் பொருளைக் குறிப்பதால், கந்தி
> காந்தி வாசனைப்பொருள் என்று கூறுதல் கூடும்.
ஆனால் இந்தப் பொருளில் தமிழில் இச்சொல் (காந்தி ) போதரவில்லை என்று தெரிகிறது. இருப்பின் நேயர்கள் தொடர்பு கொள்ளலாம். பின்னூட்டம் செய்க.
வட இந்திய ஆய்வாளர்கள்
காந்தி என்பது வாசனைப்பொருள் விற்பனையாளன்
என்று பொருள்படும் என்று கூறுகின்றனர். இராகுல்
காந்தியின் தந்தை பெரோஸ் குடும்பத்தினர் வாசனைப்பொருள் விற்றனர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டதென்றும்
குஜராத்தி மொழியிலுள்ள காந்தி என்ற சொல்லின் இது வேறுபட்டதென்றும் கூறுகின்றனர்.
கந்தல், காந்துதல், கந்தை, காந்தம் எனப் பற்பல சொற்கள் இருக்கின்றன
என்றாலும் இவை இராகுலுக்குக் காந்திப் பெயர் நோக்கில் தொடர்பற்றவை. இவற்றைப் பின்னொருகால் ஆய்வுசெய்யலாம்.
---------------------------
அடிக்குறிப்புகள்:
Situation in Western India:-
---------------------------
அடிக்குறிப்புகள்:
Situation in Western India:-
Two of their subcastes are Gandhi and Soni which
are also occupational descriptives of perfume-sellers and goldsmiths
("Suniyaras" in Punjabi) respectively. Intermarriage between Bhatias and
Aroras is not uncommon .
A widely spread petty shop-keeping community. They were mostly denied recruitment in the Royal British Indian Army.
Further reading: Dr Buchanan and Lewis Rice (19th c.)
இறுதியாகப் பார்வை செய்த நாள்: 5.12.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக