ஆசிரியன் என்பது தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கிவரும் தமிழ்ச்சொல்.
இது பற்றுக்கோடு (ஆதரவு) என்று பொருள்தருஞ் சொல்லாம் “ஆசு” என்பதனடிப் பிறந்தது. ஆசு + இரு + ய் + அர் = ஆசிரியர் எனவரும். இரு என்பது இரி என்று தமிழின் இனமொழிகளில் வழங்குவதும் எண்ணற்குரித்தாம்.
நம்பூதிரி என்ற பிற்காலச் சொல்லிலும் இரு என்பது இரி என்று திரிந்து பதிந்துள்ளது. நம்+ புது+ இரி : இது நம்மிடத்துப்
புதிதாக வந்து வேலைபார்ப்பவர் அல்லது தங்குகிறவர் என்று பொருள்தரும். வேறு சொற்களிலும்
இரு என்பது இரி என்று திரிவதுண்டு. புது என்பது பூது என்று திரிதலை பூதம்( புது+அம்) , ஐம்பூதம்(புதிதாய்த் தோன்றுவது) எனக் காண்க).
மாதிரி =
மா + து + இரி; மா= அளவு ; து = உடையது; இரி = இருத்தல். அதாவது ஓர் அளவு உடையாதாய் இருக்கும் பொருள். திரி என்பது திரி : திரிக்கப்பட்டது என்றும் கொளலாகும். இவற்றை எம்
பழைய இடுகைகளில் காண்க.
ஆசு என்பது விளக்கப்பட்டுள்ளது. ஆங்குக் காண்க.
இனி ஆசிரியன் என்பது ஆசான் என்ற வடிவிலும் வழங்கும். ஆசு+ ஆன்.
ஆன் என்பது ஆண்பால் விகுதி.
இனி ஆரியன் என்ற சொல்லும் ஆசிரியன் என்ற சொல்லுடன் வைத்து ஆயத்தக்கது.
ஆசிரியன் என்பதில் சியை எடுத்துவிட்டால் இடைக்குறையாகி ஆரியன் என்று ஆகிவிடும்.
இதன் பொருள் ஆசிரியன் என்பதே. இது ஆரியன் என்ற சொல்லின் வேறானது. இடைக்குறைச்சொல்.
மேலும் வாசிக்க:
ஆரியன்:
http://sivamaalaa.blogspot.com/2015/05/devaneyap-pavanar-and-word-aryan.html
ஆரியன்:
http://sivamaalaa.blogspot.com/2015/05/devaneyap-pavanar-and-word-aryan.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக