செவ்வாய், 19 டிசம்பர், 2017

இந்தியத் தற்காப்புப் படைகள்



தற்காப்புத் தொடர்பானஇந்தியாவின் நாடாளுமன்றக் குழு எழுபது ஆண்டுகட்குப் பின் இப்போதுதான் திடீரென்று விழித்தெழுந்து முப்படைகளிலும் பலவிதத் தட்டுப்பாடுகள் நிலவுதலைப் பறைசாற்றி யுள்ளது.
இன்னும் கொஞ்ச காலத்தில் வானூர்திப் படையின் பல விமானங்கள் பழையனவாகிப் பயன்படுத்த இயலாமல் போய்விடும்.
தற்போதைய நிலையில் போர்மூண்டால் இரு முனைகளிலும் சண்டைசெய்ய 45 வானூர்திப் படையணிகள் வேண்டுமாம். இப்போது 33 படையணிகள் மட்டுமே உள்ளனவாம். இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் வெகுவாகக் குறைந்துவிடுமாம்.
மற்ற தரைப்படை கடற்படைகளிலும் குறைவுகள் பலவுள்ளனவாம்.
தற்காப்பு பற்றி இந்தியமக்கள் அவ்வளவாகக் கவலைகொள்வதில்லை. அதனால் கவனிப்பாரற்ற துறைகளில் தற்காப்பும் ஒன்று.  மந்திரி என்ன செய்கிறார், படைத்தலைவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று அவர்களில் யாரும் கேட்பதில்லை.  எந்த நடிகர் மந்திரி வேலைக்கு வரவிருக்கிறார் என்பதில் அக்கறையுள்ளவர்கள் மக்கள்.
மேலும் அரசின் சலுகைகளைப் பெற பல்வேறு சாதிகளின் போராட்டம் சில மாநிலங்களிலாவது மிக்கத் தீவிரமாகிவருகிறது. சலுகை வரம்புகள் ஐம்பது விழுக்கட்டுக்கு மேலாகிவிடக்கூடாது என்பது இப்போதுள்ள உச்ச வரம்பு என்று தெரிகிறது.
முழுமையாக எல்லாமும் சலுகைமுறையில் ஒழுகிப் போய்விட்டால் பொருளியலும் பாதிக்கப்படலாம்.
இந்தியாவைப்பற்றிய இந்தத் தாளிகைக் கட்டுரை இவற்றை விளக்கமாகத் தெரிவிக்கிறது. படித்து அறிந்துகொள்ளுங்கள்.



Government draws Parliamentary panel fire on military modernisation




கருத்துகள் இல்லை: