கஞ்சாவைக் குறிக்கும் சில தமிழ்ச் சொற்களைப்
பார்த்தோம். கஞ்சா என்ற சொல்லின் அமைப்பைக் காண்போம்.
கஞ்சா என்பது செடியில் கிடைப்பதாயினும்,
அது தமிழருக்கு வந்து சேர்ந்தது காஞ்ச நாராகத்தான். இதைப் பெரும்பாலும் புகைத்தனர்.
இவர்களிற் பலர் நல்ல பணவசதியுள்ளவர்கள். அந்தக்காலத்தில் சாமியார்கள் சிலரும் புகைத்ததாகத்
தெரிகிறது. சட்டங்கள் கடுமையாக இல்லாத காலமது.
இதனைப் புகைக்காமல் வேறு வழிகளிலும்
நுகர்ந்தனர்.
இவற்றை விரித்து எழுதியோர் உரைகளைப்
பார்த்து மேலும் அறிக.
காஞ்ச நார் > காஞ்ச > கஞ்சா
திரிந்த சொல்லாம்.
காஞ்ச என்பது பேச்சுவழக்கு. எழுத்தில் இது “காய்ந்த” என்ற எச்சவினையாகும்.
மந்திர மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும்
கஞ்சாவிற்கும் தொடர்பில்லை. இது ஆலயப்பொருளுமன்று.
இது தமிழில் அமைந்து பின் பிறமொழிகட்கும் பரவிற்று.
இந்தி வழியாக ஆங்கிலத்தில் பரவிற்று. இச்சொல் இந்தியிலிருந்து சமஸ்கிருதம் மேவிற்று. பழைய சமஸ்கிருத அகராதிகளில் கஞ்சாப் பெயர்கள் கிட்டவில்லை.
பல பிறமொழிப் பெயர்களும் இங்குக் கிடைக்கும்:
https://en.wikipedia.org/wiki/List_of_names_for_cannabis
-----------------------------------------------------------
தமிழில் வினை பெயராகும்போது நெடில் குறிலாகும். அன்றியும் வினைமுற்றாகுங்கால் நெடில் குறுகும். பல்வகை எடுத்துக்காட்டுகள்:
காண் > கண். வினை பெயராகும்போது குறுகிற்று. இது விகுதி ஏற்கவில்லை.
சா> சாவு > சாவு+அம் = சவம். சாவு என்பது இன்னொரு விகுதி பெற்றுக் குறுகிற்று.
வா> வருவாய் , வா> வாராயோ. காண் > கண்டனர். வா> வந்தது.
குறில் நெடிலாவது; செய் > சேவை.
மிகுதி > மீதி. பகுதி > பாதி. செய்>செய்தி>சேதி.
குறிலாதல்:
காய் > காய்ச்சு.
காய் > காய்ஞ்சி > கஞ்சி.
நெஞ்சில் ஈரமில்லான் கருமி:
காய் > காய்ஞ்சன் > கஞ்சன்.
வாயினால் அன்பொழுகப் பேசுவது வாஞ்சை.
வாய் > வாய்ஞ்சை > வாஞ்சை. இங்கு குறுகவில்லை. யகர ஒற்று மறைந்தது,
கள் என்ற அடியிலிருந்தே காளி என்ற சொல் பிறந்தது. கள் என்பதற்குக் கருப்பு என்றும் பொருளுள்ளது. இது நெடிலாக்கம். கள் என்பதிலிருந்து கள்ளர் என்ற குலப்பெயர் தோன்றியதென்பார் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் என்னும் தமிழ்ப்பேராசிரியரும் மணிமேகலைக் காப்பிய உரையாசிரியரும். இங்குச் சொல் திரிபின்றி இயல்பானது.

சமித்து, சிலுகை, கோளா
(கஞ்சா உருண்டை), கோரக்கர்மூலி, ஏகவுண்டை,
மதயந்தி, பங்கியடித்தல், பூங்கஞ்சா என்பனவும் சில பெயர்கள். கோழிமலத்தில் கஞ்சாச் செடிகள் ந ன் கு வளருமென்பர். இது கோழிக்காரமெனப்படும்.
-----------------------------------------------------------
தமிழில் வினை பெயராகும்போது நெடில் குறிலாகும். அன்றியும் வினைமுற்றாகுங்கால் நெடில் குறுகும். பல்வகை எடுத்துக்காட்டுகள்:
காண் > கண். வினை பெயராகும்போது குறுகிற்று. இது விகுதி ஏற்கவில்லை.
சா> சாவு > சாவு+அம் = சவம். சாவு என்பது இன்னொரு விகுதி பெற்றுக் குறுகிற்று.
வா> வருவாய் , வா> வாராயோ. காண் > கண்டனர். வா> வந்தது.
குறில் நெடிலாவது; செய் > சேவை.
மிகுதி > மீதி. பகுதி > பாதி. செய்>செய்தி>சேதி.
குறிலாதல்:
காய் > காய்ச்சு.
காய் > காய்ஞ்சி > கஞ்சி.
நெஞ்சில் ஈரமில்லான் கருமி:
காய் > காய்ஞ்சன் > கஞ்சன்.
வாயினால் அன்பொழுகப் பேசுவது வாஞ்சை.
வாய் > வாய்ஞ்சை > வாஞ்சை. இங்கு குறுகவில்லை. யகர ஒற்று மறைந்தது,
கள் என்ற அடியிலிருந்தே காளி என்ற சொல் பிறந்தது. கள் என்பதற்குக் கருப்பு என்றும் பொருளுள்ளது. இது நெடிலாக்கம். கள் என்பதிலிருந்து கள்ளர் என்ற குலப்பெயர் தோன்றியதென்பார் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் என்னும் தமிழ்ப்பேராசிரியரும் மணிமேகலைக் காப்பிய உரையாசிரியரும். இங்குச் சொல் திரிபின்றி இயல்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக