வித்துவான் என்ற சொல்.
வித்துதல் என்பது வினைச்சொல்.
கல்வி என்ற சொல் “கல்லுதல்” என்ற வினையினின்று
எழுதல் போல் வித்தை என்ற சொல் வித்துதல் என்பதினின்றும் தோன்றுகிறது. பூமியைத் தோண்டி விதைப்பதுதான் வித்துதல். ( விதைத்தல் )
என்போம். மண் தோண்டி விதைத்தல், கற்பித்தலுக்கு ஒப்பானது ஆகும்.
வித்து + ஐ = வித்தை.
வித்து + அன் = வித்துவன் > வித்துவான்.
அன் விகுதியும் ஆன் விகுதியும் ஒன்றே.
செய்வன், செய்வான் இரண்டும் ஒருபொருளன ஆதல்போல்.
வித்து+ அகம் + அன் = வித்தகன். பணிவுப்பன்மை: வித்தகர்.
அக(ம்)+ அன் > அக+( அ)ன் > அகன்.
இத்தகைய சொல்லமைப்பில் மகர ஒற்றும்
ஓர் அகரமும் தேவையற்றவை.
அகவர் என்பது சூதர், புகழ்வோர் என்று
பொருள்தரும்
சொல்.
இனி. விதை> வித்தை எனினுமாம். தொடர்புடைய வினைச்சொல்: விதைத்தல்.
வித்துவன், வித்துவான் என்பது வித்வான் என்றும் துகரம் கெடப் பிறமொழிகளில் உளைப்புறும்.
கல்வியானது விதைபோலும் மனிதனுள் விதைக்கப்படுகிறது. வித்து என்பது பிறமொழியில் வித் என்றாகி அறிந்தவை என்றும் பொருள்தரும். இச்சொல் இங்ஙனம் பரப்பாட்சி செலுத்துவது பண்டைத் தமிழின் விரிந்த பயன்பாட்டினைத் தெளிவுறுத்தும்.
வேதமென்பது தமிழ்ச்சொல். அது வேய்தல் என்பதன் அடிப் பிறந்த சொல்.
வேய்தலாவது ஆக்குதல், அமைத்தல், கூரை அமைத்தல் முதலியன. வேதமென்ற இன்னொரு சொல் சமஸ்கிருதத்தில் உள்ளது. அது ஒலியொற்றுமை உடைய இன்னொரு சொல் ஆகும். அதை வித் என்பதினின்றும் பிறந்ததென்பர். "பேக்கட்" என்ற ஆங்கிலமும் பைக்கட்டு (பை+கட்டு) என்ற தமிழ்ச்சொல்லும் ஒலியொற்றுமை உடையன, அதுபோல. இன்னோர் எடுத்துக்காட்டு: காலண்டர் (ஆங்கிலம்), காலகண்டர் (தமிழ்). காலகண்டர் எனின் காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஏடு என்பதாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக