வெள்ளி, 22 டிசம்பர், 2017

காஒசிகன் கௌசிகன் (முனிவர் பெயர்)


காட்டில் தவமியற்றி அரிச்சந்திரனையும் எதிர்கொண்டவர் விசுவாமித்திரர். விசுவாமித்திரர் என்பது காரணப்பெயர்.  விசுவம் = உலகம்; மித்திர எனில் நண்பர். ஆக, உலகநண்பன் இந்த முனி.

இவருக்கு இன்னொரு  பெயரும் உளது. அது கௌசிக முனி என்பர்.
கௌசிகமுனி காட்டில் தவமியற்றி வருந்தியவர். அரிச்சந்திரன் வேறு வந்து தொல்லைதந்து அவர்தம் வருத்தத்தை மிகுத்துவிட்டான். இப்போது இந்தக் கதையை ஒட்டிக் கௌசிக என்ற பெயரைத் தமிழைக் கொண்டு ஆராய்வோம்.

கா = காடு.
ஒசி(தல்) = வருந்து(தல்.)
கு = இடைச் சொல். வேற்றுமை உருபாகவும் வரும். கு என்பதன் பொருள் சென்றுசேர்தல்.
அன் -   ஆண்பால் விகுதி.  இது பிறமொழிகளில் அ~ என்று குறுகும்.
காஒசிக(ன்)  என்பது காவுசிக என்று வரும் : இது மேலும் குறுகி கௌசிக ஆகும்.

பொருள்: காட்டில் வருந்தியோன்.

அரிச்சந்திரன் வருத்தமூட்டினான். காட்டுச் சூழ்நிலைகளும் வருத்தமூட்டுபவை.

தமிழ்ச்சொற்களின் பொருளால் கதை பிறந்ததா அல்லது கதையின் காரணமாகச் சொல் அமைந்ததா என்பது ஆய்வுக்குரியது.

ஏனை ஆய்வாளர்கள் குஷ் என்பதனடி கௌசிகன் எனும் பெயர் தோன்றிற்று என்பர்.  ஜான் காரெட் என்னும் ஆய்வாளர் (1871) நடு ஆசியாவிலுள்ள குஷ் என்ற இடப்பெயரிலிருந்து பெயர் அமைந்ததாகக் கருதுவார்.
அந்த இடத்துக்கும் கௌசிக முனியின் பெயருக்கும் உள்ள ஒலியொற்றுமையைக் காட்டி, இவர் அங்கிருந்து வந்தவர் என்று கருதுவார்.  வேறு ஆதாரம் யாதுமில்லை. 

ஆரியர் என்பது ஓர் இனப்பெயர் அன்று.

கருத்துகள் இல்லை: