பின்புலக் கருத்துக்கள் :
அக்கிரகாரம். - சொல்லாமைப்பு
அஃகுதல் : குறைவு. சுருக்கம்.
இரு +அகம் இரகம். : இருக்கும் வீடு
ஆரம் : சுற்று, ஒரு மாலை போல சுற்றான இடம்.
அஃகு+ இரு + அக + ஆரம் = அஃகிரகாரம் ; அக்கிரகாரம்.
குறைவான குடி இருக்கும் வீடுகள் அமைந்த சுற்றிடம்
இவர்கள் முழு நேரம் பூசாரிகள் ஆனதால் ஓரிடத்தில் இருந்தனர்.
இச்சொல் சமஸ்கிருதத்துக்கு உரியதென்ப. இது தமிழ்ச்சொல் என்று நிலைநாட்டுவதற்காக இதை எழுதவில்லை. இச்சொல்லில் தமிழ் மூலங்கள் உண்டா என்று கண்டறிய முற்படுவதே நோக்கமாகும்.
இந்தச் சமயத் தொண்டர்களின் குடியிருப்புகள் அமைக்கப்பட்ட காலை
பெரும்பாலும் திருமணமாகாத பூசாரிகளே அமர்த்தப்பட்டதுபோல் தெரிகிறது. அவர்கள் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் உள்ள இடங்களே அமைக்கப்பட்டன. இவை சிறிய இடங்களென்று தெரிகிறது. ஆனால் பூசாரிகள் எல்லாம் ஒரு வட்டத்துக்குள் அடக்கப்பட்டனர். அப்போதிருந்த பாதுகாப்புகள் மேம்பாடு அடையாமையும், மக்களுடன் சேர்ந்து வாழப் பிறர் ஒத்துக்கொள்ளாமையும் காரணங்களாகவிருக்கலாம். சொல் அமைந்த காலம் ஆய்வுக்குரியது என்றாலும் ஆய்வதற்குரிய சான்றுகள் மிகக் குறைவே எனலாம்.
அஃகுதல் : குறைவு. சுருக்கம்.
இரு +அகம் இரகம். : இருக்கும் வீடு
ஆரம் : சுற்று, ஒரு மாலை போல சுற்றான இடம்.
அஃகு+ இரு + அக + ஆரம் = அஃகிரகாரம் ; அக்கிரகாரம்.
குறைவான குடி இருக்கும் வீடுகள் அமைந்த சுற்றிடம்
இதை அக்ர agricola என்ற இலத்தீன் மொழிச் சொல்லுடன் தொடர்பு படுத்தி
உழவு செய்தோர் எனலாம். இவர்கள் உழவில் ஈடுபட்ட தகவல் ஏதும் இல்லை.
அங்கு + இரு + கு + ஆரம் = அங்கிரகாரம், அங்கு அல்லது கோயிலுக்கு அருகில் அமைந்த குடியிருப்பு. புணர்ச்சியில், அங்கு என்பது அக்கு என வந்தது, இரும்பு + பாதை > இருப்புப்பாதை என்பது போலும் வலித்தல் விகாரம். கு என்ற சேர்விடக் குறிப்பு உருபு இங்கு இடைநிலையாக வந்தது. ஆரம் _ கோயிலைச் சுற்றி அமைந்த குடியிருப்பு. இவ்வாறு சில வகைகளில் விளக்கம் பெறவல்ல சொல் இதுவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக