தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா
டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல்
செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும்
யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த்
தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம்
செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்
வாங்கிப் பார்க்க!
மணிக்குடத்துள் யாவினையும் திணிக்கினது
போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும்
யாவும் உண்மை
அரும்பொருள்:
ஆக்கும் செய்தி - வெளியிடும் செய்தி;
திரக்கிடினும் - தேடினாலும்;
யாண்டும் - எங்கேயும்
உடைப்பன சேர்த்து ஆக்கம் - பிரிந்தவற்றைச் சேர்த்து அமைத்தல்;
கடுகி = விரைந்து;
திணிக்கின் = உள் வைத்தால்;
பன்மை - பலவும் இருத்தல்
மனமகழ்க்கும் - மனம் அகழ்க்கும்; மனத்தைத் தோண்டும்;
செயும் - செய்யும்.
அரும்பொருள்:
ஆக்கும் செய்தி - வெளியிடும் செய்தி;
திரக்கிடினும் - தேடினாலும்;
யாண்டும் - எங்கேயும்
உடைப்பன சேர்த்து ஆக்கம் - பிரிந்தவற்றைச் சேர்த்து அமைத்தல்;
கடுகி = விரைந்து;
திணிக்கின் = உள் வைத்தால்;
பன்மை - பலவும் இருத்தல்
மனமகழ்க்கும் - மனம் அகழ்க்கும்; மனத்தைத் தோண்டும்;
செயும் - செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக