அயலோரும் அங்குவந்து தங்கிடுவர் என்ற
அச்சத்திற்கு என்செய்வோம் நம்தமிழர் நாட்டில்?
புயலூரும் முகில்மழையோ பகலோன்மற் றுள்ள
புதைமணலும் ஆறுகளும் தரும்பாது காப்பு
நயமாரும் பொருளல்ல நாடிவந்தார் தம்மை
நன்றாகக் கடிப்பதற்குக் கொசுப்படைகள் உண்டே!
இயவாரும் இவைகொண்டு பயங்காட்டு போதும்
எதிர்நின்ற எப்படையும் ஓடிவிடும் காணே!
இயவு = ஊர், காடு, வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக