வெள்ளி, 18 ஜூலை, 2014

The Sivan at Kedar Nath

ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார் நாதநகர்

ஓதி எங்க‌ணும் பரந்த ஒளிச்சிவம்
விடார் மூதறிஞர்;

யாது பொங்கிமந் தாகினிப் புனல்கரை
அடாக் கீழுதலால்

மோதிச் சாய்கவே முனைந்தே  அரன்அடி
தொடார் அமைந்திலரே.

=================================================================

குறிப்புகள்:

அமை கல்  =  ஆதி சங்கரப் பெருமானின் ஆவி/ உடல் உள்ளமைந்த கல், நினைவுக் கட்டடம்;

கெடார் நாத நகர் = கெடார் நாத் கோயில் உள்ள இடம். நகர் என்றது உயர்வு நவிற்சி;

எங்கணும் பரந்த ஒளிச் சிவம் = எங்கும் உள்ள ஒளியாகிய சிவம்;

ஓதி .... விடார் = வழிபடுதல் விடமாட்டார் அறிந்தோர்;

யாது பொங்கி ‍==  எது எது பொங்கினாலும், பனி, மழை, வெள்ளம், என எது மிகுந்தாலும்;

மந்தாகினி ஆற்றின் கரை,

புனல் அடாக் கீழுதலால் = வெள்ளம்  கொடிய ஆற்று உடைப்பால்;

கரை மோதிச் சாய்க ‍-- கரையே மட்டமாகிவிட்டாலும்;

பற்றாளர் அடி தொடாமல் அமைந்திலர் ‍---- பற்றர் அவனடி வணங்காமல் இரார் என்பது

கருத்துகள் இல்லை: