மனிதனுக்கு வீடு இருப்பதைப்போலவே, அஃறிணையாகிய பிற அணிகளுக்கும் (பிற அணி = பிராணி(கட்கும்)) தங்கும் இடம் அல்லது தங்கிடம் உள்ளது. வீட்டு விலங்குகட்கு பெரும்பாலும் இதை மனிதனே கட்டிக்கொடுக்கிறான். மாட்டுக்கொட்டகை, இலாயம், நாயுறைவு முதலியவை உதாரணங்கள்.
இப்போது இலாயம் எப்படி அமைந்த தென்பது காண்போம்.
ஆயம் என்ற சொல்லுக்குப் பல பொருள். இங்கு அதன் பொருள் வேறு.
இல் + ஆய + அம்.
அதாவது இல்லமாக ஆவது என்று பொருள்.
இந்தச் சொல்லில் பெயரெச்சம் இடைபடு சொல்லாய் நின்றது. (ஆண்டு+ இ = ஆண்டி என்பதில் வினை எச்சம் கொண்டு சொல் அமைந்தது ).
எச்சவினைகளிலிருந்து சொல் அமைதல் காட்டுவர் சமஸ்கிருத ஆய்வாளர். ஆங்குக் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக