மண்ணின் ஈரத்தில் தன் திண்மை இழந்து மெதுவாகிவிட்ட மரக் கட்டைகள்
கரையானுக்கு மிகவும் பிடித்தவை. நாம் குளம்பிக்கு (காபிக்கு) முறுக்கைக் கடித்துக்கொள்வதுபோல் தின்னத் தொடங்கி விடுகின்றன.
கரையான் மரத்தை அரிக்காவிட்டாலும் நாளடைவில் அந்த மரக் கட்டைகள் சிதைந்துதான் போகும். கரையான் அந்தச் சிதைவை விரைவுப் படுத்துகிறது என்கிறார்கள்.
கரையானுக்குச் சிதல் என்றும் சொல்வர் .
இப்போது சிதை(தல் ) என்ற சொல்லுக்கும் சிதல் என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வோம்.
(சித்) > (சிது ) > சிதை . : (சிது ) + ஐ .
(சித் ) > (சிது ) > சிதல் : (சிது ) + அல் .
சிதை என்பதன் "ஐ" வினைச்சொல் ஆக்க விகுதி.
சிதல் என்பதன் "அல் " தொழிற்பெயர் ( வினை பெயராவதற்குப்) பயன்படும் விகுதி.
மனிதன் குகைகளில் வாழ்ந்து திரிந்த ஆக்க அல்லது ஆதி காலத்தில் அடிச்சொல் "சித் " என்று இருந்திருக்கும். இது ஆய்வில் மீட்டுருவாக்கம்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக