புதன், 2 ஜூலை, 2014

அரு x உரு அமைந்த விதம்



உரு என்ற சொல்லினின்றே அரு என்ற உருவின்மை குறிக்கின்ற சொல் அமைந்துள்ளது அறிந்து இன்புறற் பாலதே.

அல் என்ற சொல் அல்லாமையைக் குறிக்கும்.

இச்சொல் கடைக்குறைந்து "அ" என்றாகும். கடைக்குறையாமல் "அல்" என்றே சொல்லில் அமைதலும் காணலாம்.  எ‍-டு:  அல்வழி  (அல்வழி என்பது ஓர் இலக்கணக் குறியீடு).  வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பன காண்க.

இனி அரு என்பதில்,

அல் + உரு >  அ + உரு >  அரு.

அல் என்பது அ என்று குறைய,
உரு என்பது உகரமாய தலையிழந்து ருகரமாக நிற்க,
"அரு" என்ற அழகிய புதிய சொல் அமைவுறலாயிற்று.


அல்+உரு=  அல்லுரு =  அரு. 

ல் மற்றும் லு இரண்டையும் ஒழித்துக்கட்டிச் 
சொல் உருவானது எனினும் ஆம்,.  இதுவும் இடைக்குறையே.

இப்படிப் பாடுபட்டுத்தான் சொற்களை அமைக்கவேண்டியிருந்தது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய்  ஒளியாய் 
கருவாய் உயிராய்க்   கதியாய் விதியாய் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 

கருத்துகள் இல்லை: