சனி, 26 ஜூலை, 2014

சிதறுதல் சித்தன் connected words?

சிதறுதல் என்பதும்  முன் இடுகையில் கூறிய "சித்" என்னும் அடியினின்று தோன்றியதே ஆகும்.

முன் இடுகை :-
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_26.html

சிதறுவதும் சிதைவதும் தொடர்புடைய கருத்துக்கள்..

இனிச் சித்தன் - சித்து என்பனவற்றைச்  சற்று சிந்திப்பதில் தவறில்லை.

சித்தன் என்பவன் இல்லற வாழ்வின் அமைப்பினைச் சிதைத்து,  குடும்பக் கட்டமைப்பிலிருந்து சிதறி வெளியில் சுற்றி அலைந்து,  பிச்சையும் புகுந்து , வெறுக்கத்தக்க சூழ் நிலையைத் தனக்கு உருவாக்கிக் கொள்வோன்  என்று ஒரு காலத்தில்  கருதியிருக்கலாம்.   அதனால் சித் என்ற அடியிலிருந்து  "சித்தன்" அமைந்திருக்கலாம்.  இது  ஆய்வுக்குரியது.

இதற்கு(சித்தன்)  முன்பு யாம் தந்த சொல்லாய்வு வேறென்பதை பழைய இடுகைகளில் கண்டுகொள்க.  No harm toying with this connection.  நிற்க:

சிதடன் - சிதடி  என்ற சொல் சித் என்பதில்  தோன்றீயது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.  இதற்கு, முட்டாள், பைத்தியக்காரன் .என்றேல்லாம்  பொருள் உண்டு. "புத்தி சிதறிப் போனவன்(/ள் )" என்று கொள்க.  சிதடு  என்பது அறியாதவனை.

சிதடி என்றொரு பூச்சியும் உண்டு.

கந்தைக்கு (கிழிசல் பழந்துணி / ஆடை) யை   "சிதர்வை " எனறு சொல்வர்.

சிதவல் - கிழிந்த துண்டுத் துணி,  வெட்டுத் துண்டு,   தேரில் உள்ள கொடித்துணி,  புரையோடிய புண்,  மட்பாண்ட உடைசல்  .

இவற்றின் கயிறுபோன்ற தொடர்பினைக் கண்டு மகிழவும். 

கருத்துகள் இல்லை: