கைலாசம் சிவனாரின் இருப்பிடமே --- அது
சீனத்தின் அரசின்கைப் பொறுப்பிடமே!---எந்த
நாட்டவர்க்கும் இறைவன் நம் சிவனாரே, ---அவர்
சீனாவுள் குந்தினதால் முனிவாரோ?
பாதுகாப்புக் குறைவான பாரதமோ--- விட்டுப்
பறந்துவிட்டார் சீனரிடம் சீரிதமே! --- இடர்
ஏதுமின்றி இருக்கின்றார் சீனரிடம் ---நின்றே
இரங்கிடுவார் பத்தியில்லாக் கூனரிடம்.
எங்கிருந்தால் என்னவெங்கள் சிவனாரே---- அவர்
எங்களுக்கே எந்த நாளும் பரிவாரே
அங்கிங்கே எனாதபடி உறைவாரே---- இன்பம்
ஆதலினால் யாவருக்கும் தருவாரே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக