இந்த இடுகையின் ஆய்வுப் பொருள் பல்லி என்ற சிற்றுயிரி ஆகும்.
பல்லே இல்லாத பல்லிக்கு எப்படிப் பல்லி என்று பெயரிட்டனர்?
பன்றிக்கு நல்லபடியாகப் பெயர் அமைந்துவிட்டது. பன்றிக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பல்லின் காரணமாக பல் + தி = பன்றி என்று பெயர் . பல் +தி என்பது "பற்றி" என்று வல்லெழுத்து வராமல், பன்றி என்று மெல்லேழுத்தில் போட்டது தமிழனின் சொல்லமைப்புத் திறன் எனில் அது மிகையன்று. சில வேளைகளில் இதற்கு நேர்மாறான உத்தி பின்பற்றப்படும். கன்று + ஆ = கற்றா என்பது காண்க.
எது இனிமையோ அதுவே அமைக்கப்படும்.
மீண்டும் பல்லியிடம் வருவோம்.
இந்தச் சொல் முன்னாளில் "பல்லிலி " என்று இருந்தது தெளிவு. பல் இல்லாதது என்பது பொருள். நாளடைவில் அது ஒரு லிகரத்தை இழந்து, பல்லி ஆயிற்று. "லிலி " என்று முடிவது, வாயொலிக்க நன்றாக இல்லை.
இரட்டித்த இரண்டு "லி" யில் ஒன்று மறைந்தது போலவே வேறு சில சொற்களிலும் நிகழ்ந்துள்ளது . ஒன்று எடுத்துக்காட்டுவோம்:
ஆதன் + தந்தையார் = ஆதந்தந்தையர் > ஆந்தையார்.
இங்கு "தந்தந்" என்று இரட்டித்த இரண்டில் " தந்த" மறைந்துவிட்டது.
அறிஞர் சிலர் வேறு விதமாகக் கூறியிருந்தபோதும் இதுவே சரியான முடிவாகும்.
பல்லி பற்றிய சில விடயங்களை அடுதது வரும் இடுகைகள் ஒன்றில் காண்போம்.
--------------------------------
சண்முகத்தாய் > சம்முத்தாய் > சுமுத்தாய் ;
Cited for interest.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக