முன் இடுகையில் (கத்) என்ற பிரித்தறி சொல்லினின்று கீதை என்பதும் ஏனைச் சொற்கள் சிலவும் உருப்பெற்றன என்பது கண்டோம்.
இப்போது காது என்னும் சொல்லைப் பார்ப்போம்,
கத் என்ற ஒலி குறிக்கும் சொல்லினின்று கத்> காத் > காது என்று வந்திருப்பது மிக்கப் பொருத்தமானதே. அதிலும் இறுதியில் வந்த உகரம் பாருங்கள். ஒலியானது உள் சென்று கேட்பாற்றல் பெறுவது நன்கு தோன்றும்படியாக, உகரத்தில் முடிகிறது. விகுதியாகவும், அதே சமயத்தில் உட்செலவுப் பொருண்மை தெரியவும் அமைந்துள்ளது.
இதற்காக நாம் பண்டைத் தமிழரைப் பாராட்ட வேண்டும். மொட்டையாக ஒரு விகுதியைப் போடாமல் அதற்கும் ஒரு பொருள்வரச் செய்த பெருமை அவர்களுடையது ஆகும்.
கத் நீண்டு காத் ஆகி காது அமைய,
கத் > கித் ஆகி, அதுவும் நீண்டு ஐ விகுதி பெற்று கீதைச் சொல் அமைய,
கன பொருத்தமன்றோ?
சொற்கள் நீள்வது புதிதன்று. கண் >< காண். வாய் எப்படி நீண்டதென்பது பின்பு சொல்வேன்.
இப்படிச் சொல்லாமல், கத்து > கது (இடைக்குறை அல்லது தொகுத்தல் போன்றது ) > காது ( முதனிலை நீண்டு பெயரானது ) என்று தமிழிலக்கண மரபு பற்றி உரைப்பது தமிழாசிரியர் விழைவு ஆம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக