புதன், 23 ஜூலை, 2014

விலகலில் விளங்கும் வித்தியாசம்.


உங்களைப் பார்த்து யாராவது  " விலகு(ங்கள்)" என்று கேட்டுக்கொண்டால், அதற்கு நீங்களும் இசைந்து அபப்படியே நடந்துகொண்டால் நீங்கள் முன்னிருந்த இடம் வேறு. இப்போது உள்ள இடம் வேறு. காரணம் விலகி விட்டீர்கள்.

விலகலில் பல விதம். பாதையிலிருந்து  விலகல், வாழ்க்கை ஒப்பந்தத்திலிருந்து விலகல், பதவியிலிருந்து விலகல் என எத்தனையோ!


விலகு என்பதன் அடிச்சொல் வில் என்பது.

விற்றல் என்ற சொல்லும் இதிலிருந்துதான்  வருகிறது. விற்கும் போது, பணம் உங்களிடமிருந்து விலகி விற்போனிடம் போகிறது. பொருள் அவனிடமிருந்து விலகி உங்களிடம் வருகிறது.

வில்  ‍> வில் + கு  > வில் + அ + கு > விலகு.

கு என்பது வினையாக்க விகுதி.  அ உடம்படுத்தும் இடைத்தோன்றல். சுட்டெழுத்தாகிய அகரம் இடைத்தோன்றியது மிகவும் பொருத்தமே.

வில் >  விலை.
வில் > விற்றல்.

இப்போது வித்தியாசம் காண்போம்.

வில் > விற்றி + ஆயம் > விற்றியாயம் > வித்தியாசம்.

ஆயம் என்பது  "ஆயது,  ஆவது"  என்பது போன்றது. ஆதல் அடிப்படை.

விற்றி வித்தியாவது  ற்றி < த்தி பெருவரவான திரிபு.
ய > ச திரிபு எத்தனையோ சொற்களில்.

வில் + தி = விற்றி > வித்தி.

வில்+ தல் + விற்றல் போல.   ல்+த.

வித்தியாசம் எம்மொழிச் சொல் என்பதன்று இவ்விளக்கம்.  அதன் அடி "வில்" என்ற சொல் ஆகும் என்பதுதான்.

கருத்துகள் இல்லை: