தாயம் என்ற சொல்லுக்கு பன்னிரண்டுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இப்போது ஆதாயம் என்ற சொல்லைக் கவனிப்போம்
இதைப் பிரித்தால், ஆ+தாயம் என்று வரும்.
ஆ = ஆகும் வழி. ஆதல். நடைபெறுதல். ஆவதென்பது வரவு, போவதென்பது செலவு என்பதும் கொள்க.
தாயம் : தா + அம் ,இவற்றில் தா : தருதல். அம் : விகுதி.
பொருள் இலாப மாகின்ற வழி, அதாவது இலாபம். பொருள் ஆக்கம், தன வரவு.
யகரம் உடம்படு மெய் எனப்படும். சொற்புணர்ச்சிக்கு உதவுவது.
அழகாக அமைந்த சொல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக