விநோதம் என்ற இனிய சொல் நம் தமிழ் மூலங்களிலிருந்து எப்படி அமைந்தது என்பதை இப்போது அறிந்து, ஞாயிற்றின் ஒளியை வியந்து நுகர்ந்துகொண்டிருக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் மனமிக மகிழ்வோம்.
வி = விழுமியது; வியப்புக் குரியது . இரண்டும் "வி" என்றஎழுத்தில் தொடங்குவதால் இது பொருத்தமான குறுக்கம். இங்கு முன்னொட்டாகப் பயன்படுகிறது.
நோக்கு என்ற சொல்லில் இறுதி "கு" என்பது ஒரு விகுதி. மூழ்கு, ( மூழ் ) , பெருகு (பெரு ) என்பவற்றிலும் இவ்விகுதி சேர்ந்து சொல்லமைதலைக் காணலாம்,
எனவே நோக்கு என்பதில் "கு" வை எடுத்துவிட்டால் மீதம் "நோ " இதுவே அடிச்சொல். இந்த அடிச்சொல்லுக்கும் நோக்குதலே பொருள்.
வி + நோ + து + அம் .
வியந்து (வி ) நோக்குதலுக்கு (நோ ) உரியது (து ) அம் - விகுதி. அழகு என்பதும் ஆகும் .
து என்பது ஒன்றன்பால் விகுதியும் ஆகும் .
வியந்து நோக்கற் குரித்தே வினோதம்.
என்னே இச் சொல்லினழகு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக