வியாழன், 31 ஜூலை, 2014

இலாகா

இந்தச் சொல் எப்படி உருவாயிற்று என்று இப்போது ஆய்வு செய்வோம்.

எடுத்துக்காட்டில் தொடங்குவது எளிதாய் இருக்கும்.  ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காட்டு விலங்குகளைக்  காப்பாற்ற ஆள்வோர் எண்ணுகின்றனர்.  அதற்காகச்  சில அலுவலர்கள், காவலர்கள் ஆகியோரை நே(ர் )மித்து  ஒரு சிறு அலுவலகம் அமைக்கின்றனர்.  அஃது ஒரு :காவல்  இல்லம் என்றால் அது பொருத்தம் ஆகும்.

ஒவ்வொரு காட்டிலும்  காவல் இல்லம் ஒன்று அமைத்து  ஒரு தலைமை அகம் ஓர்  நகரில் அமைப்பதானால் அது ஒரு "துறை" என்று இப்போது நாமறிவோம்.

கொஞ்ச காலத்தின்முன் துறை என்று இதைச் சொல்லலாம் என்பது அதிகாரிகள் சிந்தனைக்கு எட்டவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அவர்கள் அதற்கு ஒரு சொல் தேடினார்கள். ஒன்று  அமைத்துவிடலாமே என்று சிலர் ஓர் உத்தி (யுக்தி) செய்தனர்.

காவல் இல்லம் என்பதையே திருப்பிப் போட்டனர்.

காவல் ஆகும் இல்லம்.
கா -  ஆ -  இல்
இல் - ஆ -- கா
 இப்போது இலாகா  என்ற அருமையான புதுச் சொல் கிட்டிற்று.

Reverse formation!

இது என்ன "பாஷை" என்றவர்க்கு எதாவது சொல்லவேண்டியதுதான்.

முன்பே மொழியில் பின்னோக்கு அமைப்புச் சொற்கள்  உண்டென்பது தெரிந்தவர்தான் இதைப்  பின் நடைப் புனைவு செய்திருக்கிறார்.

இரகசியம் என்பதும் அப்படிப் போட்ட சொல் தான். இதை நான் முன் இடுகை ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.  There are quite a few of this sort.

இது எப்படி ஆனது என்பது புரியாத போது  சமஸ்கிருதம் என்றால் என்ன? உருது என்றால் என்ன? நட்டம்தான் என்ன?





கருத்துகள் இல்லை: