ஞாயிறு, 14 அக்டோபர், 2018

tamil for word: battery.

பேட்டரி, பாட்டரி என்னும் மின்சேமி

பாட்டியுடன் ஒரு பேரன் கைப்பேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தார்  . திடீரென்று கைப்பேசி நின்று உரையாடல் அறுந்துபோயிற்று.  என்ன என்று பார்க்கும்போது  கைப்பேசியில் "பேட்டரி" என்னும் மின்சேமிப்பு (மின்சேமி ) தீர்ந்துவிட்டது.  அதில் மீண்டும் மின்னாற்றலை ஏற்ற வேண்டியதாயிற்று.

என்னைத் தொடர்பு கொண்டு, அந்தப் பாட்டியின் பேரன் கேட்டார்.(இது இலக்கணப்படி தவறு:  ஒருமை பன்மை மயக்கம்)  இந்தப் பாட்டி என் அறைக்குப் பக்கத்தில் இருந்ததால், நான் இதை அறிந்து பேரனிடம் தெரிவித்தேன்  -  ஒரு குறுஞ்செய்தி மூலமாக.

மின்சேர்வி:

என் உரையாடல் தமிழில் இருந்தது, ஆனால் நான் மின் கலம் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்தியது மின்சேர்வி என்ற சொல்.

நான் கொடுத்த தகவல்:   " பாட்டி கைப்பேசியில் மின்சேர்வி தீர்ந்துவிட்டது" என்பதுதான்.

சேர் என்ற சொல் ரகர ஒற்றை இழந்து  சிலவிடத்து சே என்று வரும்.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல் :  சேமிப்பு.

சேர்கரித்தல் -  சேகரித்தல்:  இதில் ரகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: நேர்மித்தல் ஆகும்.  நேர்மித்தல் என்றால் ஒரு பட்டியல் பெயர்களில் ஒவ்வொன்றுக்கும்
 நேர் எதிரே குறிப்பு எழுதிவைத்து நிறுவுதலைக் குறிக்கும்.

கருணாகரன் ............  தளபதி.

அதாவது கருணாகரன் தளபதியாய் நேர்மிக்கப்படுகிறார்.   இது பின்னாளில் நேமித்தல் என்று தன் ரகர ஒற்றை இழந்தது.

ஓர்மித்தல் என்ற சொல் மலையாளத்தில் வழங்குகிறது. இதன் பொருள்: நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது.  ஆனால் இச்சொல் ஓமித்தல் என்று திரியவில்லை.  ரகரம் நன்றாகவே ஒலிக்கப்படுகிறது.  சொற்களைக் கவனமாக உச்சரிப்பவர்கள் மலையாளமக்கள் ஆவர்.

மின்னடை

இவை ஒரு புறம் கிடக்கட்டும்.  மின்சேர்வி என்பதையே நான் பயன்படுத்தினேன்.  ஒரு சமயம் : மின் அடை அல்லது மின்னடை என்பதைப் பயன்படுத்தினேன்,   ஒரு பாட்டரியில் மின் ஆற்றல் அடைந்து வைக்கப்படுகின்றது.  ஆகவே இதுவும் நல்ல மொழிபெயர்ப்பே.

மின் கலம்

ஒரு மின்சேர்வி ஒரு சட்டிபோல; அதற்குள் மின் ஆற்றல் பெய்து வைக்கப்படுகிறது.  ஆகவே கலம் ஆகலாம்.

ஆற்றலடை:

ஆற்றலடை என்றும் சொல்லலாம்.  மின் ஆற்றலை அடைந்து வைத்துள்ளதே பாட்டரி-- ஆற்றலடை.  தேனீக்கள் தேன்சேகரித்து வைத்துள்ள அடைவு  தேனடை எனப்படுகிறது.  அதேபோல ஆற்றல் அடைந்து  வைத்துள்ள அடைவு ஆற்றலடை ஆகிறது.   நன்றாகவே உள்ளது.

இருதா:

இனி சந்தா,  வாய்தா முதலிய சொற்களின் அமைப்பைக் காண்பீர்களாக.  சம் - சேர்தலைக் குறிப்பது; தா = சேர்தலுக்குத் தரவேண்டிய கட்டணம்.  ஆகவே சந்தா ஆயிற்று.  சம் என்பது தம் என்பதன் திரிபு.  முன் இடுகைகள் காண்க.

இதே பாணியில் அமைந்த இன்னொரு சொல்:   நிலம் முதலியவற்றின் விளைச்சல்களிலிருந்து ஒரு பகுதியை வரியாகக் கொடுக்கவேண்டியுள்ளதைக் குறிக்கும். .  அப்படிக் கொடுக்கப்படுவது வாய்தா எனப்பட்டது   :   அதாவது வருவாயில் தா என்பது வாய்+தா = வாய்தா.
படுதா என்ற சொல்லைப் பாருங்கள்.  போர்வைபோலப் படர்வாக பிற பொருள்கள் மேல் போட்டு மூடத் தருவது படுதா.   படு= படர்வாக. அல்லது மேலே படுமாறு;   தா= போட வழி தரும் விரிப்பு.   படுதா என்பது நல்ல அமைப்பான சொல்லே.இவை எல்லாம்  மிக்க எளிமையான சொற்புனைவுகள். இவற்றைப் பின்பற்றி பாட்டரி என்பதை  இருதா என்று கூறலாம்.  இருப்பில் இருப்பதாகிய மின்னாற்றலைத் தருவது இருதா.  மின்னடைக்கு இருதா என்பதும் பொருத்தமாகத்தான் தெரிகிறது.  முன் அமைந்தவற்றை ஆராய்ந்து அதேபாணியில் அமைக்க என்ன கட்ட(கஷ்ட) மென்று கேட்கிறோம்?   ஒவ்வொரு கைப்பேசியிலும் ஓர் இருதாவாவது  தேவை.

இப்போது இங்கு தரப்பட்ட மொழிபெயர்ப்புகள்:

மின்சேமி
மின்சேர்வி
மின்னடை
ஆற்றலடை
இருதா
மின் கலம்.

ஆங்கிலத்தில் பாட்டரி என்பது அடிப்பு என்று பொருள்படும் சொல்.  மின் ஆற்றலை அது அடிக்கிறது.   அதாவது செலுத்துகிறது.   அடிக்கும் மட்டை பேட் எனப்படுகிறது.  இங்கிலாந்துச் சட்டத்தில் ஒருவனை அடித்தால் அது பேட்டரி என்னும் குற்றம்.  இது ஆங்கில ஒருமைச்சட்டத்தின்படியான குற்றவியற் குற்றம் . English common law,   criminal law.  சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில் இதை voluntarily causing hurt  என்று  சொல்கிறோம்.  பாட்டரி என்ற ஆங்கிலப் பதத்தில் மின்சார்ந்த சொல் அல்லது பொருண்மை எதுவும் இல்லை.  இதற்குச் சொல்வழக்குத் தான் காரணமாகிறது.

வேறுபட்ட வகையாக மொழிபெயர்ப்புகளை நீங்கள்  கண்டிருந்தால் இங்குப் பின்னூட்டமிட்டுத் தெரிவியுங்கள்.

திருத்தம் பின்.
( சில மாற்றங்கள் காணப்பட்டன.  கவனிக்கின்றோம்).

இலக்குவன் கோடிழுத்த தகையோன்.

நம் தொன்மங்களில் வரும் அழகிய பல பெயர்களில் சிலவற்றைத் தமிழின் மூலமாகப் பொருள் கூறிய இடுகைகளை முன்பு வாசித்திருப்பீர்கள்.

இர்  >  இர் +ஆம் + அன் =  இராமன்.  ( தமிழின்படி பொருள்: கருநிறமுடையோன்.  உலகில் மிகப் பெரியது விண்.  அந்த விண்ணின் நிறம் கருமை.  அங்கு சூரியன் (< சூடியன் ) ஒளிவீசுவதால் அது (கருமை) அவ்வளவாகத் தோன்றுவதில்லை. இரவில் பார்த்தாலே ஓரளவு புரியும்.  அந்தக் கருமையை நிலவு நட்சத்திரங்கள் முதலியவை கொஞ்சம் கலைத்துவிடக்கூடும்.  இராமர் விண்ணின் நிறத்தவர். கண்ணனும்தான். )

இர் > இரா > இரா+வண்ணன் > இராவணன் ( ஓர் ஒற்றுக் குறைந்த இடைக்குறை).  எல்லாம் என்பது எலாம் என்று கவிதையில் வருகையில் அழகாக உள்ளதன்றோ?

அனுமன்:   மனிதனுக்கு அண்மையானவன்.   அண் = அன் =அனு.   மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
கைகேயி -  கை நீட்ட முடியுடையவள். (முன் இடுகைகள் காண்க).

பீமன் = பீடுடைய மன்னன்.  பீடு+ மன் = பீடுமன் > பீஷ்மன்.

தமிழ்ச்சொற்களைக் கவினுறுத்த ஜ, ஷ, ஹ  இன்ன பிற தோன்றி இன்புறுத்தும்.  வேறு சில சொற்களும் விளக்கியுள்ளோம்.  அவற்றைப் பழைய இடுகைகளில் காண்பீராக.

இன்று இலக்குவன் அல்லது லட்சுமணன் என்ற பெயரைப் பார்ப்போம். இதுவும் இராமகாதையில் உள்ள பெயரே.  காதை = கதை.

சீதையைக் கட்டுப்படுத்தத் தரையில் ஒரு கோடு வரைந்து இதைத் தாண்டிச் செல்லாதே என்று கட்டளை இட்டவன் இலட்சுமணன்.  "இலட்சு" என்பது இலக்கு என்பதும் ஒருபொருள் குறிக்கும் திரிபுகள்.

ஒ.நோ: பட்சி >< பக்கி ;  நக்கத்திரம் > நட்சத்திரம்.  பக்கம் > பட்சம்

கோடும் இலக்கும் தொடர்புடைய கருத்துகள். கோடிழுத்த இடமே இலக்கு ஆகும்.

இழு> இலு என்றாகும். இன்னொரு எடுத்துக்காட்டு:  பழம் > பலம்.   மாம்பலம் என்ற ஊர்ப்பெயர் காண்க.  பழ ஆகாரமே பல ஆகாரமாகி, பலகாரம் என்று தோன்றி பழத்துடன் பிற ஆகாரங்களையும் குறித்ததாகத் தமிழறிஞர் கூறியுள்ளனர். 

அலங்காரம் என்பது அழகு அல்லது அழகுபடுத்துதல் என்பதே.   அடிச்சொல்: அழ.  அழ என்பதன் திரிபு  அல.   அலங்காரம் என்பதை அலம்+காரம் என்று சிலர் பிரிப்பர்.  உண்மையில் இது :  அல+ கு + ஆர் + அம் ஆகும்.   அழகுக்கு நிறைவு அல்லது அழகுசேர் நிறைவு என்பதாகும்.  ஆர்:  நிறைதல்.  அம் விகுதி.
கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் இடைநிலை. இது வேற்றுமை உருபாய் பிறவிடத்து வரும்.  அல+ கு என்பது அலங்கு என்று மெலிந்து நின்றது,  அலக்கு என்று வலிக்கவில்லை . அதாவது வல்லெழுத்து மிகவில்லை.  அலங்கு ஆர் அம் - அலங்காரம் :  அழகின் நிறைவு எனினுமாம்.  இதை இங்கு சொல்லக் காரணம்:  இழு> இலு போலத் திரிந்தது அழ>அல என்பது;  பழ > பல என்பதுமது.

இனி இலக்குவனுக்குத் திரும்புவோம்.  இலு> இலக்கு > இலக்குவன், இலக்குமணன் என்பது இன்னொரு வடிவம்.  அதைப் பின் விளக்குவோம்.

இலக்குவன் என்பது காரணப்பெயர். இயற்பெயரன்று.  தசரதன் என்பதும் காரணப்பெயரே. இயற்பெயர்களைக் காண்டல் அரிதே.  கோடிழுத்ததால் இப்பெயர் வந்தது என்பதறிக.   வால்மிகி தமிழறிந்தவர் என்பது தெளிவு. மற்றும் சங்கப்புலவருமாவார்.


இலு + கு = இலக்கு.  கோடிழுத்த இடம்.


























அடிக்குறிப்புகள்:

இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடைதெரியுமா?

வாசித்தல்: இச்சொல் எப்படி அமைந்தது?

வாசித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது?

சனி, 13 அக்டோபர், 2018

அகலியை ( அகலிகை )

அகலியையின்  வரலாறு நம்மைச் சிந்திக்க வைப்பதாகிறது,

இதைப்பற்றிச்  சில எழுதியுள்ளோம்.

கீழ்க்கண்ட இடுகையையும் படித்து இன்புறுவீராக.

https://bishyamala.wordpress.com/2018/10/13/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

வெள்ளி, 12 அக்டோபர், 2018

தம் சம்; தம் தா:> சந்தா.

சந்தா என்ற சொல் நம் பழைய நூல்களில் இருந்து கண்டால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில் இச்சொல் வழக்கிலுண்மை உணரப்பட்டது போலும். பதினெட்டாம் நூற்றாண்டுக்குமுன் இச்சொல் வழங்கிய நூல்கள் கிடைக்கவில்லை,

சம் என்பது சேர்தல் குறிக்கும் சொல்.

தான் தன் தாம் தம் என்ற தமிழ்ச் சொற்களை நினைவு கூரவேண்டும்.

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் தாம் தம் என்பவற்றைச் தற்சுட்டாகப் பயன்படுத்துவர்.  இரண்டு தான் ஒரு தாம்; இரண்டு தன் ஒரு தம். என்று சற்று நெகிழ்பாணியில் குறிக்கலாம்.

தம் என்பது பின் சொற்களைப் பிறப்பிக்க -  சம் என்று திரிந்தது,  பின் அது எச்1 என்1 காய்ச்சல்போல் அயலிடங்களையும் தாவிக் கால் பதித்தது.

ஆகவே தம் என்பது சேர்ந்திருத்தல் சேர்ந்த காலத்து உரிமையாய் இருத்தல் என்று பொருள்தரும்.  எடுத்துக்காட்டு:  தம் கொள்கைகள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாயிருக்கையில் உருவான கொள்கைகள் என்பது பொருள்.

ஒரு இயக்கித்திலோ கூட்டுறவு அமைப்பிலோ சேர்ந்துவிட்டால்  மாதம் தோறும் பணம் கேட்பர். இது உறுப்பினர் கட்டணம்.எனப்படும்.  தம் என்பது சம் என்று திரிந்தது,  தா வென்பது கொடு என்பது.  சம் தா -=  சேர்ந்ததும் தா என்பதே ஆகும். தம்மில் ஒருவர் ஆனதற்குத் தா என்பதும் சரிதான்.

தம் > சம் > சம் தா > சந்தா,

த என்பது பல சொற்களில் ச என்று மாறியுள்ளது:  எ-டு:  தங்கு > சங்கு,  மொழி இடையிலும் வரும்:  அத்தன் > அச்சன். மைத்துனன் > மைச்சுனன் > மச்சான்,

வைத்து -  வச்சு. ஐகாரம் அகரமாகவும் தகரங்கள் சகரங்களாயும் மாறின.

தம்மில் சேர்ந்தால் தா >  சம் தா > சந்தா.

தம் என்பதில் இருந்த தற்சுட்டுப் பொருண்மை  சம் என்பதில் மறைவெய்தியது சம்முக்கு நன்றாயிற்று. இம்மறைவினால் சம் முன்னிணைந்த பதங்கள் மூவிடங்களிலும் வழங்கும் விடுதலையை அடைந்தன. இஃது இவ்வாறாயினும் தமையன் தனையன் ( தனயன்) முதலிய சொற்கள் முதனிலைத் திரிபின்றியே காலவோட்டத்தில் தம் தற்சுட்டுப் பொருண்மையை இழப்பனவாயின. திரிபின்றி வழக்கில் விளைந்த பொருண்மை இதுவாகும். ஆனால் அவையும் ஐகாரக் குறுக்கத்திற்கு உட்படவேண்டியதாயின.

அடிக்குறிப்பு:

வாய்தா என்ற சொல்லும் சந்தா என்பதைப்போல் தா என்று முடிகிறது. இது அமைந்தது எப்படி?

வாய் என்பது வருவாய் அல்லது வருமானம்.  இது பணமாகவோ நெல்லாகவோ பிறவாகவோ இருக்கலாம்.   தா என்பது கட்டணமாகச் செலுத்தவேண்டியதைக் குறிக்கிறது.  இதை வாக்கியமாக்கினால் வருவாயில் ஒரு குறித்த பகுதியைத் தா என்று வந்து பொருளாகும்.  தமிழ்ப்பேராசிரியன் என்போனையும் தடுமாறச் செய்யும் இச்சொல் உணர்ந்தோர் சிலரே.  பிறமொழியாளர் இச்சொல்லை மேற்கொண்டிருப்பர்.  அதனால் அது பிறமொழிச் சொல் என்போன் "விளங்காத வெள்ளரி"  ஆவான்.  இதை உருவாக்கியவன் ஒரு சிற்றூர் ஆசிரியனாய் இருக்கவேண்டும்.  அவனுக்கு நல்ல மூளை இருந்தது தெரிகிறது.

வசந்தா என்பது பெண்பெயர்.  இது உன் மனத்தை என் வசம் தா என்று அணிவகையில் இரட்டுறலாகப் பொருள் தரலாம் எனினும் அது வசந்தம் - வசந்தி என்ற சொல்லின் விளிவடிவமே ஆகும்.  அது செலுத்தவேண்டிய கட்டணத்தைக் குறிக்கவில்லை.

அடிக்குறிப்பு:  15.10.2018ல்  சேர்க்கப்பட்டது.

புதன், 10 அக்டோபர், 2018

bhajan: பஜனை இறுதியில் அனைவரும் ட - ஜ


பஜனை என்ற சொல் மிக்க   உயர்வாக மதிக்கப்படும் சொல்லாகும்.
பக்தி மார்க்கம் எனப்படும் பற்றர்கள் நெறியில் இது ஒவ்வொரு நாளும் புழங்கும் சொல்லாகும். இறைவனின் புகழைப் பாடாத நாளில்லை என்னுமளவிற்குப் பஜன் என்ற சொல் ஓர் அன்றாடச் சொல்லாகிறது.


பஜன் என்றால் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பற்றுடையார் கூட்டம் சேர்ந்து பாடுவதே பஜன் ஆகும்.
சொல்லமைப்பில் பல சொற்கள் முதனிலை குறுகி அமைந்துள்ளன என்பதை முன்னர் இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம். இப்போது சில காண்போம்.


தோண்டு >  தொண்டை
காண்  >  கண்.
சா  >  சவம்.
கூடு > குடும்பு >  குடும்பம். (கூடிவாழ்தல்)
கூம்பு :>  கும்பம். ( அடிபருத்து நுனி சிறுத்தல் )


இப்படி அமைவது ஒரு வகை என்றால் இன்னொரு வகை இதற்கு எதிர்மாறாய் இருக்கும்:   எடுத்துக்காட்டு:

குழை >  கூழ்.
படு >  பாடு. ( படுதல் வினை)
சுடு >  சூடம்,  சூடன்.
படு > பாடை.
விடு > வீடு.  (பரனை நினைந்து மூன்றும் விடல்)



பஜன் என்பது பாடுதலே. பாடு என்பதிலிருந்தே சொல் வருகிறது. நெடில் முதலானது குறில் முதலாய் மாறுகிறது. அனைவரும் பாடுவதே பஜன்; ஆதலின் அனைவரும் என்பதிலுள்ள “அனை” இங்கு விகுதியாகியுள்ளது ஓர் அழகிய அமைவே ஆகும். வேண்டுமிடத்து  அனை என்பது அன் என்று மேலும் குறுக்கம் பெற்றுள்ளது.

அன்+ ஐ என்ற இரு விகுதிகள் கூடி அனை என்று சொல்லிறுதியாகப் பல சொற்களில் தோன்றும். எடுத்துக்காட்டு:  கண்டி + அனை = கண்டனை, இப்பதத்தில் அனை என்ற இறுதிக்குத் தனிப்பொருள் கூறுதற்கில்லை  இதுவெறும் சொல்மிகுதியே.  மிகுதி  > விகுதி.  ஆனால் பஜனை என்ற சொல்லில் அனை என்பது ஒரே காலத்தில் விகுதியாகவும் அனைவரும் என்ற பொருளீவதாகவும் உள்ளது: இஃதோர் உள்ளமைந்த சிறப்பு ஆகும்,
விழுமிது இதுவாம்.


பாடு >பாடு+அன் > படன் > பஜன்.
பாடே > பஜே.
பாடு அனைவரும் >பாடு+அனை >  பாடனை > படனை - பஜனை.


பற்றர்களுக்கு (பக்தர்களுக்கு)ப் பயன்படுத்த  அமைந்த இச்சொல் மிக்க நேரிதாய் அருமையாய் அமைந்துள்ளமை காண்க.  ஒரு சொற்றொடரிலிருந்து ஒரு சொல்லைப் படைப்பதென்பது ஒரு  நல்ல தந்திரம்..  இன்று சொற்களை உருவாக்க முனைவோரும்  இது போன்ற தந்திரத்தை மேற்கொள்வார்களாக,


பாடனை படனை படன் முதலிய சொல்வடிவங்கள் பேச்சிலும் எழுத்திலும் இல்லாமலிருத்தல் பஜன் என்னும் சொல்லிற்கு நல்லது.  அவை தாத்தா பாட்டன் பூட்டன் முப்பாட்டன் போன்றவை.  எல்லாத் தாத்தாக்களும் வேலையிலிருந்திருந்தாலும் பேரன்மாருக்கெல்லாம் வேலை ஏது?


ஜான் கே என்பவர் எழுதிய இந்திய வரலாற்றில் யானை என்று பொருள்படும் கஜம் என்ற சொல் முகம் கடையப்பட்டது போன்றது என்னும் பொருளதென்று கூறுகிறார்.   அதாவது கடை > கட > கஜ, > கஜம், பொருள்: யானை.


ஆகவே பாடு > பட > பஜ என்பதைக்,   கடை > கட > கஜ என்பதோடு ஒப்பிட்டு உணரலாம். வெவ்வேறாய் ஒலிக்கும் சொற்களை  ஒருப்பட்ட வடிவங்களாக்கி ஜ முதலிய எழுத்துக்களைப் புகுத்தி அழகுபடுத்துவதே கலைத்திறனாகும்.


தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் இரு கண்கள் என்று முன்னையத் தமிழ் நூல்கள் கூறி மகிழ்வெய்தும்.  வெள்ளைக்காரன் வந்து இந்தோ ஐரோப்பிய மொழி சமஸ்கிருதம் என்றும் அது அயல்மொழி என்றும் ஆரியர் வந்தனர் என்றும் தெரிவியல்களை(  theories ) உருவாக்கியபின்,  இருகண்களில் ஒன்று ஐரோப்பியக் கண்ணாகவும் ஒன்று தெற்காசியக் கண்ணாகவும் மாற்றுருக்களைக் கொண்டு மகிழ்வுறுத்துகின்றன.  பானை சட்டிகளை உண்டாக்குவதுபோல தெரிவியல்கள் பலவற்றைப் படைத்து வெளியிட்டுக் கொண்டிருப்பது மேலையர் வேலையாகிவிட்டது.







செவ்வாய், 9 அக்டோபர், 2018

வீடுகுறிக்கும் பல தமிழ்ச் சொற்கள்.

வீட்டைக் குறிக்கத் தமிழில் எழுந்த சொற்கள் பல.  அவற்றில் சில சொற்களை
ஆய்ந்து இன்பமடைவோமாக.

வீடு, இல்லம் என்பனவற்றை நாம் எளிதில் நினைவுக்குக் கொண்டுவரலாம். இவற்றுள் வீடு என்பது வீட்டுவழக்குச் சொல்லாக இருக்கின்றது.

வீடு என்ற பொருளுள்ள இன்னொரு சொல் அகாதம் என்பது.  இச்சொல்லைப் பார்த்தால் அயற்றன்மை கொண்டதுபோல் தோற்றமளிக்கின்றது.

ஒரு வீட்டைக் கட்டுங்கால் கட்டுமிடத்தின் அகத்து அல்லது உட்புறத்திலே நன்றாகத் தோண்டி  அதாவது  மண்ணை அழுத்திவாரித்  தூண்கள் வளர்த்து நிறுத்திச் சுவர் எழுப்பிக் கூரை வேய்வோம்.  

அழுத்திவாருதலே  அழுத்திவாரம் பின் அஸ்திவாரமென்று வழங்கப்பெற்றது. இது எப்படி இருக்கிறதென்றால் மானின் கழுத்தில் ஊறிவருவதாக ஒரு காலத்தில் நம்பப் பட்ட கழுத்தூறி மணப்பொருள் -  கஸ்தூரி என்று மாறி மக்களை மகிழ்வித்தது போலுமாம்.  

அகத்து ஆழமாய் வாரி அமைப்பது (வீடு) என்ற கருத்தி  னடிப்படையில்  அகம்+ ஆழ் + து + அம் என்ற பகுதியையும் ஒட்டுக்களையும் ஒன்று கூட்டி,  அகாழ்தம் என்ற சொல்லை உண்டாக்கி,  ழகரத்தைக் கெடுத்துச் சுருக்கி,  அகாதம்   என்ற சொல்லமைப்பை எட்டிப் பிடித்து  அதுவே " வீடு" என்ற பொருளில் வருமாறு செய்யப்பட்டது.

ஆழ மண்ணை வாரி எடுத்து   அத்திவாரம் என்னும் அடிப்படை அமைத்து, வீட்டைக்  கட்டுவது சரிதான்;  அடிப்படை குறைவானலும் வீடு நிற்கும்;  பெரும்பாலும் விழுந்துவிடுவதில்லை.   ஆனால் சூழ நிற்கும் ( சுற்றுச்) சுவர் என்பது மிக்க முன்மை வாய்ந்தது ஆகும்.  இந்த சுற்றுச்சுவரின் முக்கியம் உணர்த்த இன்னொரு சொல் உருவாக்கப்பட்டது.

அகம் + ஆர் + அம்: உட்புறத்தைச் சூழ அல்லது சுற்றி நிற்கும் சுவர்கள் உடையது என்னும் பொருளில்  அக ஆர் அம் =  அகாரம் என்ற சொல் வீடு என்னும் கட்டுமானத்தைக் குறிக்க அமைத்தனர்.

அகம், வீடு, இல் என்பவற்றிலெல்லாம் சலிப்படைந்தவர்கள் மேற்கொண்ட இரு முயற்சிகளை மேலே கண்டோம். இச்சொற்கள் சில நூல்களில் காணப்படலாம் ஆயினும் உலகவழக்குக்கு வரவில்லை.

நண்பருடன் உரையாடல். ஐயப்பர் சிலை.

ஒரு நல்லன்பர் ஐயப்ப பற்றாளர்.  எம்முடன் குறுஞ்செய்தி வழியாக உரையாடினார்.  அவர் மிகுந்த பணச் செலவில் ஓர் ஐயப்பன் உருவத்தை வீட்டின் பூசை அறையில் நிறுவிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.  (முஸ்தீபு)
.

வீட்டு விழாவுக்கு எம்மை அழைக்கையில் யாமனுப்பிய பதில்:


அம்மன் துர்க்கையல்லவோ 
அனுப்பிவைப்பாள் என்னை!
அவள் கையில் நானோர்
விளையாட்டுப் பொம்மை.


ஐயப்பர் சிலை வந்துகொண்டிருக்கிறது என்றார். யாமளித்த பதில்:

வெல்கமழ் தென்றலாய் வரட்டும்
நல்லன எல்லாம் தரட்டும்
 சாமி.

ஐயப்ப சிலை நாட்டும் அன்பருக்கு எம் உளமார்ந்த வாழ்த்துக்கள்.


வெல்கமழ் :  வெல்கம் என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஒலி அணுக்கம்
காண்க.   வெல்லும் கமழ்கின்ற தென்றலாய் என்று பொருள்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

இளியும் சிரியும்

இளி என்னும் சொல்லைச் சுட்டுச் சொற்களுடன் தொடர்புறுத்தி இதுபோழ்து ஆய்வுசெய்வோம்.

அடிக்கடி சிரித்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து என்ன இப்படி இளித்துக்கொண்டிருக்கிறான் என்று சிலர் கடிந்துகொள்வதுண்டு.

இளித்தல் என்பது சிரித்தல் என்றே பொருள்படுமேனும் அது இப்போதைய உலக வழக்கில் சற்று தாழ்நிலை அடைந்துவிட்டதென்று கருதலாம்.  இருந்தபோதும் அதன் பொருள் மறைவுற்றுவிட வில்லை.

இ என்பது அண்மைச் சுட்டு.  இடத்தாலும் காலத்தாலும் அண்மை உணரப்படும்.

இன்று:   இது காலத்தால் அண்மை.

இங்கு:    இது இடத்தால் அண்மை.

இரண்டிலும் முதலாய் இகரமே நிற்றல் அறிக.

இனி, இளித்தல் என்ற சொல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் தாழ்வு நிலையினைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு அதனை அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுசெல்வோம்.  செல்லவே,   அதனில் இரண்டு இகரங்கள் வந்திருத்தலை உணரலாம்.

இ(ள்)  + இ.

இளிக்கும்போது  (  தாழ்வான கருத்தை எடுத்துவிட்டோம், நினைவிலிருத்துக )   இங்கிருந்து இங்குவரை  உதட்டின் வெளிப்பகுதி விரிந்து சுருங்குகின்றது.   இங்கு அதாவது முதல்சொன்ன இங்கு என்பது ஓர் இறுதியையும் இரண்டாவதாய்ச் சொன்ன இங்கு  மறு இறுதியையும் குறிப்பது தெளிவு ஆகிறது.  இவ்விரு இறுதிகளையும் விரலால் சுட்டி நன் கு உணர்ந்துகொள்ளலாம்.

ஆகவே இச் சுட்டுச் சொல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணரப்படும். 

உணரவே,  இச்சொல் ஒலிசெயல் காரணமாய் அமையவில்லை என்று புலப்படும்.  இடம் காரணமாகவே அமைந்துள்ளது.  ஓர் இறுதியிலிருந்து இன்னோர் இறுதிக்குச் சென்று விரிந்திருக்கும் இதழ்கள்.  இவ்விறுதி இட இறுதியாகும்.

இரண்டையும் இறுதியென்றே குறித்தோம் -  அப்படிக் குறிப்பது விளக்கத்தை எளிதாக்கும் பொருட்டு.
ஒன்றை முதலாகவும் இன்னொன்றை இறுதியாகவும் மாறிமாறி நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எமக்கு இது வெறும் சொல்லீடே அன்றி வேறில்லை. ஆதலின் இறுதி என்ற ஒருசெல்லைக் கொண்டே விளக்கினோம்.

அகர வருக்க எழுத்துக்களில் இகரமும் ஒன்று.  இவ்வருக்கதன பின் சகர வருக்கத்தனவாய்த் திரியும் என்பதனை முன்பெய்த இடுகைகளில் விளக்கியுள்ளோம்.   எடுத்துக்காட்டு:  அமண் -  சமண் என்று திரிபு கொள்ளும்.  அடு> சடு > சட்டி என்று சொல்லமையும்.  அடுதலாவது சமைத்தல்.  சடு + இ= சட்டி.

இதனியற் படி இளி என்பது சிளி என்று திரியவேண்டும்.  ஆனால் காலப்போக்கில் இவ் ளிகரமும் ரிகரமாய்த் திரிந்தது.  ளகரம் ரகரமாய் மாறும் இடனும் உண்டு.    மாள் > மார்  >  மாரகம்.  வாள் ( நீட்சி)
>  வார்  (நீட்சி ).  வருக்க எழுத்துக்களிலும் இஃது அமையும்.  ஆகவே ளி என்பது ரி ஆயிற்று.  இச்சொல்
( சிரி )  என்பது இருமடித் திரிபுடைத்தாம்.  போதுமான ஈடுபாடின்மையால் ஐயமுடையோர் எம் பற்பல இடுகைகளையும் கண்டு தெளிவடைவீராக.

இள் இ என்பவற்றில் வந்த ளகர ஒற்று யாது?      இல் என்பது ஒரு சுட்டுச்சொல்லே.  இதுவும் இகரத் தொடக்கத்ததே.  இடப்பொருளே இதன் பொருளும்.  இதுவே இள் என்று மாறி நின்று இடம் குறித்தது. இதனை ஆங்குக் கூறாமைக்குக் காரணம் குழப்பம் தவிர்க்கவேயாகும்.  ஆகவே  இல் + இ > இலி > இளி என்று அமைந்ததன் சுவடே ளகர ஒற்று ஆகும்.  லகர ஒற்று ளகர ஒற்றாய் உருமாறி இன்றளவும் உள்ளது என்பதைக் காண்க.

தொடக்கத்தில் லகரமு ளகரமு வேறுபாடின்றி இருந்தன.  இஃது மொழியின் வரலாறு ஆகும். இவ்வரலாற்றின் சுவடாக இன்னும் நம்மிடையே சில சொற்கள் இருமாதிரிகளிலும் எழுதப்பெறும் தகையனவாய் உள.  அவற்றைச் சில இலக்கண நூல்களில் கண்டும் படிக்கும்போது அறிந்தும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.  யாம் ஓர் உதாரணம் தருவோம்.   செதில் > செதிள் என்று இருவகையிலும் வருதல் கண்டுகொள்க.  காணவே இல் என்பது பண்டை இள் என்று நின்றதன் காரணம் விளக்கம் வேண்டாமலே உணரலாம். சொற்களின் தொகை பெருகவே ளகர லகர வேறுபாடுகள் வலிவுற்றன. மிகுதியான சொற்களின் தேவைக்கு இவ்வேறுபாடுகள் அரணாகின. ஆனால் சில  முன்போல் வலம் வந்தன. இவற்றைப் போலி என்ற விளக்கத்தலைப்பில் வைத்து இலக்கணம் தத்து ஏற்றது.

அறிக இன்புறுக.

திருத்தம் பின்.





சனி, 6 அக்டோபர், 2018

ஐதீகம் என்ற சொல்.

இன்று  ஐதீகம் என்ற சொல்லை ஆய்வு செய்து  அதன் பொருளை நன் கு அறிந்துகொள்வோம்.

இதனை முன்னைப் பண்டிதன்மார் கண்டுரைத்தபடி நாம் கற்றறியலாம். நம் காலத்துக்கு முன்பே சொல்லப்பட்டவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டு மெனின் கற்றுத்தான் அறியமுடியும்.  இணையத்திலிருந்தே ஒரு நூல்நிலையத்திற்கு ஏகாமல் இதை இக்காலத்தில் அறியலாமாகையால் அதை ஈண்டு மீட்டுரை செய்யாது விடுவோம்.

தமிழினின்று இச்சொல்லை அறிய முற்படுவோம்.

ஐ என்ற அடிச்சொல்லுக்குப் பொருள் பலவாம்.  ஐயன் என்ற சொல்லில் அது தலைமை,  வழிகாட்டும் திறனுடைமை என்று உயர்பொருளைத் தருகிறது. தமையனார் என்ற சொல்லில் தம்+ஐயன் என்று பிரிவெய்தி,  " தன் தலைவன் "  (ஒருமை பன்மை மயக்கம் ) ( அடிக்குறிப்பு 1 )  என்று பொருள்பட்டு அண்ணனைக் குறிக்கிறது. அண்ணனைக் குறிப்பது வழக்குப் பொருள். தலைவனைக் குறிப்பது சொல்லமைப்புப் பொருள். எம்மொழியிலும் பொருள் அவ்வப்போது சொல்லுக்குச் சொல் சற்று வேறுபடக் கூடியவை.  ஐயனார் என்ற சொல்லில் அது கும்பிடும் சாமியைக் குறிக்கிறது.  வணக்கத்துக்குரியது , அப்பால் நின்று நம்மை ஆள்வது என்றும் பொருள்தரும்.  என்னை நீ ஏன் படைத்தாய் என் ஐயனே என்ற சிற்றூர்ப் பாட்டில் அது கடவுளை நேரடியாகக் குறிக்கும். அரசனையும் குறிக்கும். என் ஐயனே என்று அவனையும் விளிக்கலாம்.  ஒரு பூசாரியையும் குறிக்கும்.  பூசாரி என்பதற்குப் பலவாறு பொருளுரைக்கப் பட்டிருந்தாலும்  பூ சார்த்துபவர் என்றும் பொருள் கூறலாம்.  பூ = மலைர;  சார்=  சார்த்துகின்ற;  இ = இவர் என்று பொருள் அழகாக வருமே. சார்த்துதல் என்பது சார்ந்திருக்குமாறு செய்தல். பிறவினை.  சார்தல்: தன்வினை;  சார்த்துதல்: பிறவினை.   சார்த்துதல் என்பது சாத்துதல் என்று தன் ரகர ஒற்றினை இழந்து  (  பல பிறமொழிகளிலும் எழுத்திலும் பேச்சிலும் இப்படி ரகரம் காணாமற் போவதும் லகரமாக மாறிவிடுவதும் காணலாம் ) வேறுசொல் போல் தோன்றும்.  ஐ என்பது வியக்கத் தக்கது என்றும் பொருள் தரும்.  ஐ = சந்தேகம் என்பதும் ஒன்று. ஐயப்பாடு என்பதில் அது வரும்.  ஐ பிச்சை எடுத்தல் என்பதும் உண்டு:   ஐயம் இட்டுண் என்பது காண்க.  ஐ என்பதுதான் அடி; மற்றவை வெறும் விகுதிகள். விகுதிகளை எறிந்துவிட்டு ஆய்வு நடத்தினால் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் உள்ள பொருளைக் கூட அறியலாம்.  விகுதிகளாவன மிகுதிகள். சொல்லை மிகுத்துப் பொருளை வேறுபடுத்தவும் செய்பவை.

இனி ஐ என்பதிலிருந்து ஆர்ய என்பதுவரை பயணித்து வரலாம்.  ஆங்கிலத்திலுள்ள ஐடியாவரை கூடப் போய்க் கருத்துகளை முன்வைக்கலாம். நாம் இத்துடன் நிறுத்துவோம். கேட்போர் உறங்காமை போற்றுவோம்.

ஐதீகம் என்பதற்குப் பொருள்

சில ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்பட்ட ஞான்று அவை ஆட்சியும் வியப்பும் உடையவாய் இருந்தன. அதனால் அவை ஐதீகம் எனப்பட்டன.

ஐ:  வியப்பு, ஆளுமை. தலைமை,

து :  உடைமை குறிக்கும் அஃறிணை விகுதி.

ஈ:   கீழோருக்குத் தருதல். ஈதல்.

கு:   உருபு இங்கு இடைநிலையாய் வருகிறது

அம்:  சொல்லாக்க விகுதி.

முடிபு:

கீழோர் போற்றுதலும் வியத்தகு ஆளுமையும் உடையவாகத் தரப்படும்  ஒரு
கடைப்பிடிப்பு.

ஆட்சி அல்லது ஆளுமை:  கடைப்பிடித்தே தீரவேண்டுமென்னும் கட்டாயம்  மக்கள்பால் அதிகாரமுடையோரால் ( ஊரதிகாரிகள் ஆகலாம்)   திணிக்கப்படும் நிலை.

இதில் அகப்படாத அறிவாளிகளால் வியக்கப்படுதல் வியப்பு எனப்பட்டது.


அடிக்குறிப்பு:

1.  தம் ஐயன் என்பது ஒருமை பன்மை இரண்டும் தவறாகக் கலந்தனபோல் தோன்றும் சொல். தம் என்பது பன்மை.  ஐயன் என்பது ஒருமை.  தன் ஐயன் என்று வந்திருந்தால் இலக்கணியர் மகிழ்வர்.  ஆனால் தன் ஐயன் என்பது தன் - ஒருமை ஐயன் - ஒருமை ஆகவே ஒப்ப முடிந்ததென்றாலும், தனையன் என்று அமைந்து  தனயன் என்று பின் திரிந்து மகனைக் குறித்தது.  இது தமையன் என்பதிலிருந்து மாறுபாடு ஆகிறது.  இவ்வாறு சொற்கள் மாறுபாடாகி  அமைந்தவெல்லாம் தமிழில்லை என்று ஒதுக்கிவிடுதல் மடமை ஆகும்.  இது இலக்கண நெறி பின்பற்றியோர் அமைத்த சொல்லன்று.  ஊர்மக்கள் பேச்சில் உருவான சொல் என்பதே உண்மை. வழுவமைதி என்று சொல்லி ஏற்கலாம். இதற்கு இவ்வொருமை பன்மை இலக்கணம் இயைபுறாது  என்று விடுப்பதே சரி.  மொழியை ஆக்கி வாழ்விப்போர் மக்களே. மக்கள் நல்வாழ்வினால் பிற்காலத்து உருவானவர்களே புலவர். இலக்கணம் சொல்லாக்கத்தில் செல்லுவதன்று.

ஐயன் என்ற சொல் உறவு முறைகளில் அண்ணனையும் .  இங்கு தனைய னையும் குறித்துள்ளமை இதன்மூலம் தெளிவாகிறது.

தனயன் என்பதை இனித் தன்+ அயன்  என.றும் சொல்வதுண்டு.  தன்+ அ + அன். அ என்ற இடைவரவு,  சுட்டு ஆகும்.  தனையன் என்பது தனயன் என்று திரிந்தது என்பது இதனினும் நன்றான விளக்கம் ஆகும்.

அயல் என்ற சொல்லில் யகர உடம் படு  மெய் வருதல் அறிக.  இங்கு  அங்கு  அப்புறம் இங்கும் அங்கும் அல்லாத இடம் அயல் . இதை உணர்க.

திருத்தம் பின்








வெள்ளி, 5 அக்டோபர், 2018

வக்கரித்தல்

வக்கரித்தல் என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. எங்காவது வழங்கிக்கொண்டிருக்கக் கூடும். அதன் பேச்சுவழக்கு சுருங்கிவிட்டது என்பது சரியாகவிருக்கும்.

ஆனால் அது சோதிடத்தில் (கணியக் கலையில்) வழக்குப் பெற்றுள்ளது.  சனிக்கோள் வக்கிரமாய் உள்ளது என்று சோதிடர்கள் சொல்வர்.  வக்கிரம் யாதென்று அறிவோம்.

ஒவ்வொரு கோளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு ஓர் இராசி வீட்டில் தங்கும். பின் அது அடுத்த இராசி வீட்டுக்குப் போய்விடும்.  இப்படிப் போன கோள்  மீண்டும் வந்து விட்டுப்போன வீட்டில் தங்கினால் அதற்கு வக்கரித்தல் என்பர்.
வக்கரித்தலாவது திரும்பி வந்திருத்தல். வக்கரித்தல் முடிந்த பின்பு அக்கோள் மீண்டும் போய்விடும். இஃது இயற்கை நிகழ்வை ஒட்டியே சோதிடத்தில் கூறப்படுகிறது.

இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் கூறுவோம்:

வரு+ கு +  அரு + இ + தல்
=வருக்கரித்தல்
=வக்கரித்தல்.

இதில் கவனிக்க வேண்டியவை:

வரு என்பது வ என்று திரியும்.    வருவான் (  எ.கா)  :  வந்தான் ( இ.கா). ரு என்னும் எழுத்து கெடும் அல்லது வீழும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் இடைநிலை. இது தமிழில் ஒரு வேற்றுமை உருபுமாகும்.

அரு என்பது அருகு என்பதன் அடிச்சொல்.  அருகில்  என்ற சொல்லை நினைவு கூர்க.   அரு> அரி.   அருகில் வரல்,
 நெருங்குதல். 

ஒன்றன் அருகில் சென்று இழுத்து எடுத்தலும் அரித்தல் எனப்படும்.  செடிகொடிகளை அரித்தெடுத்தல் போல.

இங்கு அது அருகில்வரல் என்ற பொருளில் வருகிறது,

ஆகவே இதன் பொருள்  வந்து நெருங்குதல்.  அதாவது திரும்பிவந்து நெருங்குதல்.

இனி வக்கரி + அம் =  வக்கரம்.  இகரம் வினையாக்க விகுதி, கெட்டது.  அம் விகுதி புணர்த்தப்பட்டது. இது பின் வக்கிரம் என்று திரிந்தது.

சனி முதலியவை திரும்ப வந்து தொல்லை தருமாதலால் அரித்தல் என்ற வழக்குச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறினும் பொருந்துவதே.

வக்கரம்  என்பது பிற்காலத்து வக்ரம் என்றும் எழுதப்பெற்றது.  இது அயல் சென்றதால் ஏற்பட்ட ஒலித்திரிபு. பின் தமிழுக்குத் திரும்பி வந்த நிலையில் வக்ரம் > வக்கிரம் என்று இகரம் புகுந்து மாறிற்று.

வக்கரம் என்ற ஆதி அமைப்புச் சொல் வழக்கொழிந்தது .

இச்சொல்லுக்கு அடியாய் நின்றது வரு > வ என்பதே ஆகும்,

திருத்தம் பின்பு
இஃது 9.3.2019ல் மறுபார்வை பெற்றது. பிழைகள்
எவையும் காணப்படவில்லை.  கள்ளப்புகவர்களால்
(கள்ளத் தனமாகப் புகுந்து எழுத்து சொற்கள் முதலிய மாற்றிக்
கெடுப்போரால் ) புதிய பிழைகள் புகுத்தப்படின் பின் திருத்தப்படும்,
பின்னூட்டம் செய்து நீங்களும் தெரிவிக்கலாம் )

வியாழன், 4 அக்டோபர், 2018

வதந்திக்கு வேறு வடிவங்கள்.

வதந்தி என்ற சொல் உண்மையில் தமிழ்ச்சொல்லே என்பதை வெளிப்படுத்தினோம்.  இதை எப்படியெல்லாம் அமைத்திருக்கலாம் என்பதை இப்போது பயிற்சி செய்வோம்.

வரு+  தரு + தி =  வருதருதி.

பொருள் அதுவேதான்:   வருகின்றவர் தருகின்ற செய்தி.

இத்தகு செய்திகள் பொய்யாகவும் இருக்கலாம்; மெய்யாகவும் இருக்கலாம். அது உரிய செய்தி அறிவிப்பு நிறுவனத்தின் வழியாக வரவில்லை என்பதுதான் இதன் உட்கருத்து.

வருதருதி என்பது  இனிமையாக அமையவில்லை. அருவருப்பாக உள்ளது!  ஆனால் அருவருப்பு என்பதில் இரண்டு ருகரங்கள் இருந்தாலும் நன்றாகவே உள்ளது.  வருதருதி என்பது நீளமாகவும் உள்ளது.

இரண்டு ருகரங்களையும் எடுத்துவிட்டால்,  எப்படி இருக்கும்?

வ+   த +  தி.

இதைச் சேர்த்து ( புணர்த்தி ) எழுதினால்  :

வத்தத்தி.

வத்தச்சி என்று ஒரு சொல் வழக்கில் உள்ளது போலும்.  இது அதுபோல் ஒலிக்கிறது.  வத்தி தத்தி என்பவெல்லாம் பாட்டில் நன்றாக இருக்கும்.  இங்கு
ஒலித்தடை உண்டாவதுபோல் உள்ளது.

தகர ஒற்றுக்களை மெலித்து நோக்குவோம்:

வந்தந்தி.

இதுவும் அவ்வளவு நன்றாக இல்லை.   இன்னும் அறுவை தேவைப்படுகிறது.

வதந்தி:  இப்போது நன்றாக உள்ளது.  வழக்கில் இது  நன்றாகவே செயல்புரிகிறது.

ஐயப்பன் கோவிலும் சட்டமும்.

சட்டப்படி எல்லா வயதுப்  பெண்களும் ஐயப்பனைக் காணச் செல்லலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சட்டம் என்று மட்டும் பார்த்தால் அது சரியென்று பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருந்தாலும் நம் பெண்கள் சில வேளைகளில் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடவே செய்கின்றனர்.  எடுத்துக்காட்டாக சைவமல்லாத உணவுகளை உட்கொண்டு அதன்பின் கோவிலுக்குச் செல்லாமல் இருந்துவிடும் பல பெண்கள் இருக்கின்றனர்.  இதேபோல் உடல் தூய்மை இல்லாமல் உள்ளபொழுது போவதில்லை.

நாம் கோவிலுக்குப் போவது சட்டப் பிறச்சினை ( பிரச்சினை) களை எழுப்புவதற்காக அன்று. இறையருளைப் பெறவே செல்கிறோம்.

எப்படிச் சென்றால் அது இறைவனுக்கும் நமக்கும் ஏற்புடையது என்று  இதுநாள் வரை கடைப்பிடித்து வந்தோமோ  அப்படியே சென்று வணங்கி அருள்பெறுவதே நன்றாகும்.  சட்டத்தின் தீர்ப்பினை  நாம் எதிர்த்து நிற்கத்
தேவையில்லை.


புதன், 3 அக்டோபர், 2018

கச்சை கட்டி ஆடு.

இன்று கச்சை என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்,

கடின ஒலிகளாய் உள்ளனவற்றை விலக்கிச் சொற்களை அமைக்கும் தந்திரத்தைப் பண்டைச் சொல்லாய்வு நிபுணர்கள் அறிந்திருந்தனர்.  நிபுணர் என்போர் யார் எனில் நிலையறிந்தோரே நிபுணர் எனப்படுவர்.

எடுத்துக்காட்டு:   இடு அம் என்ற பகுதி விகுதி இணைந்து இட்டம் என்ற சொல்லானது.  ஒரே சொல்வடிவத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுமாதலால் பண்டை நாட்களில் பல்வேறு வடிவங்களைப் படைத்துக்கொண்டனர் தமிழரும் பிறரும்.

இடு + சை என்ற இரண்டில் இடு பகுதி;   சை என்பது விகுதி.  இடுச்சை ஆகும்.
இட்டம் என்பதும் இடுச்சை என்பதும் ஒன்றுதான்.  மனத்தை இடுவதே இட்டமும் இடுச்சையும் ஆகும்.   இடுச்சை என்பதில் உள்ள டுகரம் களைந்தால் இச்சை ஆகி உச்சரிக்க இன்னும் எளிதாகிவிடுகிறது. இத்தகைய தந்திரங்கள் தொல்காப்பியர் காலத்திலே கண்டுபிடித்துவிட்டனர் என்பதைக் கூறியுள்ளோம்.  புதுமை ஒன்றுமில்லை.

பீடுடைய மன்னன் : பீடு மன்:  இது சுருங்கி பீமன் ஆனது.  அப்புறம் வீமனும் ஆனது.  இதில் கவனிக்க வேண்டுவது:  டுகரம் களைதல்.  அல்லது இலக்கணப்படி இடைக்குறை.

இனிக் கச்சை அறிவோம்:

கட்டு > கட்டுச்சை > கச்சை.

கட்டு என்பது கடு என்ற சொல்லின் விரிவுதான்.

கடு+ சை :>  கடுச்சை > கச்சை.

ஆகவே கச்சை ஆனது.  அதற்குரிய வினைச்சொல்:  கட்டுதல் என்பதே.

கச்சை:  கட்டுதல்,  போட்டி போடுதல் என்பது போல.



-------------------------------------------------------------------------------------------------
நிற்பு :  இது நிலை என்னும் பொருளது.
உணர்:  உணர்வோர்.   நிற்புணர் :  நிபுணர்.  இதில் றகர ஒற்று குறைந்தது.
ஒரு கலையின் அல்லது அறிவியலின் நிலை உணர்ந்தோர் நிபுணர். இது ஆகுபெயராய் உணர்ந்த மனிதனைக் குறித்தது.

விபுலானந்தர் என்ற பெயரில் விபுலம் என்பது விழுபுலம் என்பதன்
இடைக்குறை.  ஆனந்தம் என்பதும் முன் விளக்கப்பட்டது.  ழுகரத்தை எடுத்துவிட்டு ஒரு புதுச்சொல்லைப் படைத்தது திறமைதான்.

இவை 2010ல் விளக்கி வெளியிடப்பட்டவைதாம்.

பிழைகள் புகின் திருத்தம் பின்.

செவ்வாய், 2 அக்டோபர், 2018

அடிச்சொற்கள்: புள், பிள்.

இன்று புட்டி என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

புள் பிள் என்று இரண்டு அடிச்சொற்கள் உள்ளன.  இரண்டும் ஒரு பொருளில் ஏற்படும் துளை போன்ற இடைவெளியையும் இரண்டாக வேறுபட்டு நிற்கும் நிலையும் குறிக்கவல்லவை என்பதை உணர்ந்துகொள்க.

புள் > புழை என்ற சொல்லைக் காண்க. புழை என்ற தொல் ஒரு பெரிய அல்லது சிறிய துவாரத்தைக் குறிக்கலாம்.  அந்தக் காலத்தில்  ஓர் ஆலமரத்தில் ஒரு பெரிய துளை இருந்தது.  இதன் காரணமாக அந்த ஊருக்கே " ஆலப் புழை" என்ற பெயர் வந்து நிலைத்து இன்றுவரை அது நிலவுகின்றது.

இப் புழையில் விழுப்பம் அல்லது சிறப்பு  ( விழேடம்)  என்னவென்று தெரியவில்லை.  விழேடமாவது விழுமிதாய் எடுத்துக்கொள்ளத் தக்க உள்ளீடு.

புள் என்ற அடிச்சொல்லுடன் தி என்னும் விகுதி சேர்க்க, புட்டி ஆகும்.  புள்+தி = புட்டி. துளையுள்ள ஏனம் அல்லது பாத்திரம். ளகர ஒற்றின் இறுவாய் தகர வருக்கம் வர, டகரம் இரட்டித்துச் சொல் அமையும்.

இப்போது சில எடுத்துக்காட்டுகளைக் கூறி இதனைத் தெளிவுறுத்துவாம்:

கள் + து =  கட்டு > கட்டுதல் (வினைச்சொல்).

கள் +  தி =  கட்டி.  நன் கு கட்டப்பெற்று இறுக்கமானதே கட்டி.  இங்கு கட்டப்பெறும் பொருள்:  அணுத்திரள்களாகவும் இருக்கலாம்.  தூள்களாகவும் இருக்கலாம். எதுவாயினும் கட்டும் பசையினால் அல்லது பிறவால், கட்டப்பெற்றுக் கட்டி ஆகிறது.

குள் >  குள்ளை ( நீட்டக் குறைவு, உயரக் குறைவு).

குள் + தி >  குட்டி.  ( நாய்க்குட்டி, பூனைக்குட்டி,  சின்னக்குட்டி ).

பள் + தி = பட்டி.
தாழ்வான நிலங்களில் நீர் இருக்கும். விளைச்சலுக்கு ஏற்ற இடமாக இருக்கலாம். இதன் காரணமாக,  இத்தகு தலங்களில் அமைந்த குடியிருப்புகள் பட்டி எனப்பட்டன.   பட்டு என்றும் வரும்:  எடுத்துக்காட்டு: அம்மானிப்பட்டு. (ஊர்ப்பெயர்). குளத்தூரான்பட்டு.  ( நீங்கள் வரைபடங்களில் தேடி மேற்கொண்டு ஆய்வு செய்து தெரிவியுங்கள்).

இவ்வளவும் புட்டி என்ற சொல்லை விளக்கவே சொல்கிறோம்).

பிள் என்பதிலிருந்து பிளவு, பிளத்தல் இன்னும் பல காண்க. பின் அளவளாவுவோம்.    நன்றி.

 


அடிக்குறிப்புகள்:

விழு+ எடு + அம் = விழேடம்.  இதில் விழு = சிறப்பு.  எடு+ அம் = ஏடம் என்று, முதனிலை நீண்டு பெயர்ச்சொல் ஆனது.  இது பின் அயல்திரிபுகள் கொண்டு உருமாறியதை ஈண்டு கவனிக்கவில்லை.

The Dangers lurking in soft drinks

நாம் வீட்டிலிருக்கும்போது நம்மை வீட்டில் கவனித்துக்கொள்கிறார்கள். நன்`கு கொதிக்கவைத்து ஆறிய நீரையே பலர் அருந்துகின்றனர்.  நீர்க்குழாய்களில் வரும் நீரைக் கொதிக்கவைக்கமலே குடிப்போரும் உண்டு. பலருக்கு இப்படிக் குடிப்பதும் ஒத்துப்போகிறது.

வேறு சிலர் தாகம் எடுத்தால் ( அல்லது "தாகம் தவித்தால்" )  சோஃட் ட்ரிங்ஸ்" எனப்படும் மென் தேறலையே  ( மென் பானம் )  அடிக்கடி குடித்துக்கொண்டிருக்கின்றனர்.  இதனால் தேவையற்ற சீனி உடலிற் புகுந்து உயிருக்கு உலைவைத்துவிடுகிற தென்பதை நாமறிந்துகொள்வது நலம்.  சீனி கலந்த பொருட்களைக் குறைப்பது அல்லது கைவிடுவதே சரியானது என்று மருத்துவர்கள் எங்கும் கூறிவந்தாலும்,  புட்டியில் அடைத்த மின் தேறல்கள் நல்லபடியாக விற்றுக்கொண்டிருப்பதாகக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கு சென்றாலும் நம் சொந்தக் குடிநீரை ஒரு புட்டியில் கொண்டுசெல்வதே சிறந்தது என்று பலரும் ஆலோசனை கலந்துகொள்வதைப் பலமுறை செவிமடுத்துள்ளோம்.

புட்டியில் அடைத்த சீனி மென் தேறல்களையே குடித்துவந்த ஒரு பையன் மரணம் அடைந்துவிட்டதை கீழ்க்கண்ட செய்தி தெரிவிக்கிறது.

http://www.msn.com/en-sg/news/world/our-son-didnt-gorge-himself-to-death-say-grieving-parents-of-boy-whose-downfall-was-fizzy-drinks/ar-BBNQXe0?li=AAaGkVj&ocid=ientp

மேற்கண்டதைச் சொடுக்கி வாசிக்கவும்.

A man whose overweight son died from a blood clot has warned of the danger of sugar-packed soft drinks.
Lewis Albon, 13, died in dad Stephen Platt’s arms as a clot travelled from his leg to his chest, causing cardiac arrest......................................

சில வேளைகளில் கனிம மென் தேறல்களும்கூடத் தொல்லை தரலாம்.  உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படியே பின்பற்றவும். 

--------------------------------------------








சனி தனி; தங்கு சங்கம்.

சிலர் சனி என்ற பெயரைச் சொல்லவும் அஞ்சுமளவிற்கு சனி மிகுவலிமை பெற்ற கோளாகும். இதன் நிறம் கருப்பு ஆகும். அதனால் தமிழில் இதற்குக் காரி என்றும் பெயருண்டு.  சில சோதிடப் பாடல்களில் காரி என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

எந்தக் கோளுக்கும் ஈசுவரப் பட்டமில்லை. ஒரு விதிவிலக்காக சனிக்குமட்டும் ஈசுவரன் என்பர்.  சனீசுவரன். ஏழரை நாட்டான் என்றால் எல்லோருக்கும் அச்சம்தான்.

ஒரு தனிமதிப்பு உடைய கோளாதலின் தனி என்ற சொல்லே திரிந்து சனி என்று அமைந்தது.

அத்தன் என்ற அப்பனைக் குறிக்கும் சொல், அச்சன் என்று திரிந்து தகரம் சகரம் ஆயினது காண்க.  இனி தசை > சதை என்பதும் காண்க. இதன்படியே தனி என்பதும் சனி என்று திரிந்தது. வியத்தற்கு ஒன்றுமில்லாத் திரிபு இதுவாகும்.

இதேபோல் பல புலவர்களும் வந்து தங்கி  அரசன் இட்ட உணவினையும் உண்டு பின் அவனைக் கண்டு கவிபாடிப் பரிசில் பெற்றுச் சென்ற இடம், சங்கம் ஆனது.  தங்கு > சங்கு > சங்கம்.

ஒரு நத்தைபோலும் உயிரி, தங்கிவாழும் கூட்டுக்குச் சங்கு என்ற பெயர் மிக்கப் பொருத்தமன்றோ. பின்னர் வெறும் சங்கை எடுத்து ஊதி  அவ்வொலியையும் சங்கொலி என்றனர்.  நாவு, சங்கு வாய் என எல்லாம் இணைந்து எழுப்பிய ஒலி, சங்கொலி, சங்க நாதம் எனப்பட்டது.

சிறிய சங்குகளைக் கோத்து மாலைபோல் கழுத்தில் அணிந்தனர். பிற்காலத்தில் போதுமான சங்கு கிட்டாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ சங்கு இல்லாத மாலைகள் அணிந்தனர். அது சங்கு இல்லாதது ஆகையினால் சங்கிலி  சங்கு இலி  ஆனது.  சங்கும் அம் விகுதி பெற்றுச் சங்கமானது. அப்போது ஒலி என்றும் கழகம்  என்றும் பொருள்பெறும்.

சங்கிலிக் கறுப்பனுக்கும் சங்கிலிக்கும் வந்த தொடர்பென்ன?

தாம் சேருமிடத்தில் இருப்பதைத் தங்குதல் என்றனர்.  தம்+கு.    தன் என்பது ஒருமை; தம் என்பது பன்மை ஆகும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு.

தான் தான் என்று இரு தான் கள் சேர்ந்து தாம் ஆகி,  தாம் சேர்விடம் தம்+கு  என உருவாகும்;  இது தங்கு ஆனது.  தங்கு> சங்கு > சங்கம். தான்-கள் பல தங்கிய இடம் சங்கம். இதில் என்ன அயல்மொழி? ஒன்றுமில்லை. இது இனிய சொல்லாதலின் பலரும் பயன்படுத்திக் கொண்டமை தமிழின் உயர்வையும் வழங்கலையும் உலகுக்கு உணர்த்தும்.



அழிவிற் பட்டோர்க்கு அஞ்சலி

பிறப்ப தனைத்தும் இறப்ப துளமையே
பின் என் மனமேன் தன் நிலை கலங்குதல்.
முதுநூல் பலப்பல இதனுண் மைசெலச்
சொல்லியும் பக்குவம் வெல்லத் தவறிய
பற்றாக் குறையோ முற்றாச்  சிந்தையோ?
வற்றா வளத்தின் வண்தமிழ் அறிந்தார்
உற்றார் அல்லர் இத்தகு துயரே
நிலநடுக் கத்தினில் நேரந்த அழிவொடு
பலகடு நிலையும் பட்டழி வுற்றவர்
யாவ ராயினும் கண்ணீர்
மேவத் துளக்குறும் நோவறி நெஞ்சே.

திங்கள், 1 அக்டோபர், 2018

பாஸ்கரன் என்ற சொல்.

இன்று "பாஸ்கரன்" என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

இச்சொல் பெருவழக்குடைய பெயராகத் தோன்றுகின்றது.  நாம் அடிக்கடி செல்லும் கோயிலில் ஒரு நல்ல  "பொடியன்" பாஸ்கரன் என்ற இயற்பெயர் உடையவராய் இருக்கிறார்.  ஆனால் தம் பெயர் தமிழன்று நினைத்து அப்பா அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் பாற்கரன் என்று எழுதுகிறார்.

இவர் அரனுக்கு (சிவனுக்குப்) பால் கொண்டுவந்து பூசாரிகளிடத்துக் கொடுக்கிற படியால் இவர் பெயர் ஒருவகையில் நன் கு பொருந்தியுள்ளது.
அங்குள்ள சிவன் பால் குடிப்பவர் என்பது பொருளாகிறது .  பால்+ கு+ அரன் = பாலுக்குச் சிவன் என்று விரித்து,  பாலைச் சிறப்பாக ஏற்றுக்கொள்பவர் சிவபெருமான் என்ற பொருளைத் தருகிறது.  அங்கிருக்கும் மற்ற தெயவங்களும் பாலை வேண்டாமென்று சொல்வதில்லை என்பதால் இப்பொருள் முற்றப்பொருந்தும் பொருளன்று என்று வாதிடலாம். எனினும் முழுதும் ஒழிதலின்றிப் பொருந்தும் பெயர்கள் உலகில்  சிலவே ஆதலின் அதை ஒரு பெரிய தடையாகக் கொள்ளாமலும் செயல்படலாம்.

இப்போது பாஸ்கரன் அல்லது அன் விகுதி இன்றிப் பாஸ்கர் என்ற பெயரில் அயலாகத் தெரிவது ஸகர ஒற்றே ஆகும்.  கஷ்டம் இஷ்டம் முதலிய சொற்கள் ஷ் என்ற எழுத்தை  அணிந்துகொண்டிருந்தாலும் அவை கடு, இடு என்ற தமிழ் மூலங்களை உடைய சொற்களே என்பது இதுபோழ்தில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஈண்டுள்ள  முன் இடுகைகளைக் காண்க.

சொடுக்குக:





சமஸ்கிருத மொழியில் மூன்றிலொரு பங்கு, தமிழ்த் திரிபுகள் என்பதை டாக்டர் லகோவரி என்ற மொழியாய்வறிஞர் குழுவினர் கண்டுரைத்துள்ளார்கள்.ஆனால் இவர் இப்படி முடிபு கொண்டது,   ஆரியப் புலப்பெயர்வுத் தெரிவியலாலலும் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற தெரிவியலாலும் வரலாற்று ஆசிரியர்கள் கவரப்பட்டுக் கிடந்த காலத்திலாகும். இத்தகு தெரிவியல்களுக்கு இப்போது ஆதாரங்கள் இல என்பது உணரப்பட்டுள்ளது. 

 இனிப் பாஸ்கரனைப் பார்ப்போம்.  பகலில்தான் சூரியன் என்னும் சூடியனைக் காணவியலும். இரவில் எங்கிருக்கிறதென்பதை பண்டையர் அறிந்திருக்கவில்லை.   ஆகவே பகலுடன்  திரிபிலாத் தொடர்பு உள்ளது சூடியனாம் சூரியன்.  பகல் என்ற சூரியன் காயும் நாள் என்னும் வெளிச்சப் பாதி, பால் என்று திரியும்.

பகலுக்கு அவர் என்ற சொற்றொடர்,  பால்+கு+அர் என்று சுருங்கும்.  பகல்>பால்;  கு சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்;  இற்றை உருபும் ஆகும். அர் = அவர்.   பலர் பால் விகுதியும்  ஆகுமிது.  பணிவுப் பன்மையில் ஒருமை உணர்த்தும்.  (  மரியாதைப் பன்மை).

இது பாற்கர் என்று வரும்.  கவினுறுத்து முகத்தான் பாஸ்கர் என்று அமைக்கப்பட்டது.  இதை விரித்தால்:  பால் > பகல்;  கு ( பகலுக்)கு.;   அர் > அவர்.உண்மையில் பகலவன் என்ற சொல்லின் ஒருவிதச் சுருக்கமே பாற்கர்  என்னும் பாஸ்கர் ஆகும்.

"பன்மையொருமையில்" மிளிரும் பாற்கர்,   அர் என்பது அவர் என்றாகும்  தன் பொருளை இழந்து,  மக்கள் மறந்துவிட்ட நிலையில் மீண்டும்  ஓர் ஆண்பால் ஒருமையாகிய  அன் பெற்று  பாஸ்கரன் என்று வந்தது வழுவாகும்; அது பெரிதும் வழக்கிலுள்ளபடியால் அதை வழுவென்று கூறி அடைவது யாதுமில்லையாதலின்,  வழுவமைதி என்றே ஏற்றல் அறிவுடைமையாகும்.

பாஸ்கரன் = பகலவன்.

பகற்கரசன் > பாற்கரசன் > பாற்கரன் (சகரம் கெட்ட இடைக்குறை)  எனினும் ஏற்புடைத்தே . பகல் என்பது பாலென்று திரிந்தும் அரசன் என்பது அரன் என்று இடைக்குறைந்தும், பாற்கரன் என்றாகி  ஒரு ஸ்கர ஒற்றிட்டுக் கவினுறுத்தப் பட்டு, பாஸ்கரன் என்று திரிந்ததெனும் முன்வைப்பும்  நன்றே ஆம்.  இப்படிக்கூற, பகலவன் என்பதன் படியாகவின்றி பகற்கரசன் என்ற அணிபெறுதல் காண்க. இவ்வாறு இருபொருள் மற்றும் அவற்றுக்கு மேலும் தரும் சொற்களும் புனைவுகளும் பல.

இதுவே பாஸ்கரனின் வரலாறு ஆகும்.

மறுபார்வை பின்பு.

--------------------
குறிப்புகள்

சில மொழிபெயர்ப்புகள்

‘சென்சஸ்’  ‘குடிமதிப்பு’ 
பேனா-தூவல்,
பவுண்டன் பேனா-ஊற்றுத்தூவல்,
ஸ்டூல்-மொட்டான்,
சிமெண்ட்-சுதைமா,  
ஏர்கண்டிஷன்-செந்தணப்பு, 
ஏஜெண்ட்-முகவர், 
(பாவாணர்)



ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

து விகுதி பெற்ற பல சொற்கள்.

து விகுதி பெற்று அமைந்த சொற்களை இன்று பொதுவாக நோக்குவோம்.

து என்னும் விகுதி வினைச்சொல்லிலும் வரும்:

எடுத்துக்காட்டு:    ஓது.  மோது.      (முக><மோ)

இது பெயர்ச்சொல்லிலும் வரும்:  

எடுத்துக்காட்டு:   விழுது. பழுது  கைது (கையகப்படுதல்)

இதுவே வினை எச்சங்களிலும் வரும்.

எடுத்துக்காட்டு:

அழுது    (  அழுதுகொண்டே பாடினான்).

தொழுது   (   தொழுது உண்டு பின் செல்பவர் ).

பிசைந்து   (  பிசைந்து உருண்டையாகப் பிடி  ).

பெயரெச்சத்தில் து என்பது த என்று மாறிவிடும்:

அழுத   பையன்.

இதை அழு (   த =  த் + அ ) எனலாம்.
இதை  அழு ( த =  து + அ ) என்றும் சொல்லலாம்.  இவ்வாறு கூறின்  து என்பதில் உகரம் கெடுத்து அகரமேறியதாகக் கொள்ளவேண்டும்.  இந்த அகரம் அந்த என்ற சுட்டுப் பொருளோடு தொடர்புறும்.  த்  என்பது  இறந்தகால இடைநிலை என்று கொள்ளுதல் சிறந்த விளக்கம்.

து என்பது சுட்டுச்சொல்லுடன் வரும்:

அது
ஈது

து என்பது வினாவுடனும் வரும்.

எது
ஏது.

து என்பதில் ஆகாரம் இணைந்தும் வினாவாகும்:

அதுவா.  (அது+ ஆ).

இனி, விந்து என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இதை எம்மிடம் கேள்வியாகக் கேட்டுள்ளனர்.  இச்சொல்லில் இறுதியில் நிற்பது து என்னும் விகுதி.  இது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று. இது இந்தோ ஐரோப்பிய மூலமொழிச் சொற்றொகுதியில் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்.  து விகுதி இந்தோ-ஐரோப்பியத்தில் இல்லை என்று பொதுவாகக் கருதினாலும், பார்ட் என்ற ஆங்கிலச் சொல்லும் "பாற்று" என்ற தமிழ்போலவே ஒலிப்பதைக் காணலாம்.  "உணரற் பாற்று"   "செய்தற் பாற்று" என்ற சொல்லாட்சிச் சொற்றொடர்களில் ஒலிப்பொருமையைக் காணலாம். ஆடி அல்டராம் பாற்றம் என்ற இலத்தீன் தொடரிலும் பாற்றம் பார்ட்டம் என்று வந்துள்ளது காண்க.   வீசும் காற்றைக் குறிக்கும் "விண்ட்" என்ற சொல் எடுத்தொலி பெற்று வேறுபோல் தோன்றினும் தமிழ் முறைப்படி உச்சரிப்பதானால் விந்து என்று உச்சரிக்கவே வேண்டும்.  ஆதலின் விண்ட் என்பது விந்து என்பதுபோல் ஒப்பொலிச் சொல் எனினும் வேறுபொருள் குறித்தமையின் வேறுசொல் என்றே கொள்ளவேண்டும். இப்பொருளில் விந்து என்பதுபோல் ஒலிக்கும் சொல் அங்கில்லை.

உலகில் 6912 மொழிகள் இருத்தல் சொல்லப்படுகிறது.நேரமெடுத்து இம்மொழிகளில் நீங்கள்   தேடிப்பார்கலாம்.

விந்து என்பதில் து விகுதி ஆனாலும் வின் என்பது பகுதி அன்று.  வெண் என்ற தமிழ்ச்சொல்லே இதன் பகுதியாகும்.  இது திரிசொல் ஆதலின், இது வெண்ணிறம் என்று பொருள்பட்டு, நிறத்தைக் குறிக்காமல்  அந்நிறத்தை உடைய பிற பொருளைக் குறித்தமையின்:

சொல்லும் திரிந்தது:   வெண் என்பது வின் என்று திரிந்தது;
பொருளும் திரிந்தது:   நிறம் குறிக்காமல் நிறத்தை உடைய உடற் சாற்றைக் குறித்தது.

ஆகவே தொல்காப்பியரின் கோட்பாட்டின்படி இருவகையாலும் திரிசொல் ஆகும். மூலம் தமிழாகிறது.

வெண்+து > வெண்து  > வின் து  > விந்து  ஆகும்.

பல்>பன்  ( லகர னகரத் திரிபு).  பன்+து > பந்து.  பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பெற்றவை.  தேய்வை என்னும் ரப்பர் பந்துகள் இல்லை. கயிறுகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு உருண்டை வடிவு பெற்றுப் பந்தாயின.  பல்+து = பற்று > பற்றுதல்.  பல்+து > பன்+து > பன் து > பந்து ஆகும்.

வேறு  -னகர ஒற்று  ஈற்றுச் சொற்கள்:

பின் > பின் து > பிந்து > பிந்துதல்.
முன் > முன் து > முந்து > முந்துதல்.

வினையாக்கத்தில் புணர்ச்சித் திரிபுகள்.

ஆனால் சில விடத்தில்  0ன் து என்பது  0ன்று என்று மாறிவிடுதல் காணலாம்:

ஒன் + து =  ஒன்று.  இங்கு  ஒந்து என்று வரவில்லை.

பத்து என்ற சொல்லின் அடி பன் என்பதே. பல என்பது பொருள்.  பன் இரண்டு எனபது பந்திரண்டு என்றாகும்.

பன் > ப > ப து  > பத்து.
பன் > பன் து > பந்து.> பந்து இரண்டு > பந்திரண்டு.
பன் > பன் இரண்டு > பன்னிரண்டு.

முற்கால மனிதனுக்கு ஒன்பதுக்குப் பின் பலவாகிவிட்டபடியால் பத்து என்ற சொல்லைப் பன்மை என்பதிலிருந்தே அவன் உருவாக்கிக்கொண்டான்.

பது , பத்து, பன், பான் என்பவெல்லாம்  ஒருசொல்லே வெவ்வேறு வடிவங்கள்.

ஒன்பது > ஒன்பான்.

பத்துக்கு பது இடைக்குறை என்றாலும்  து என்பது விகுதிதான். ஒன்றில் சொல் வலித்தது :  ப து > பத்து;   இன்னொன்றில் ப து > பது.  வலிக்கவில்லை (  அதாவது வல்லெழுத்து மிகவில்லை).  ப> பல் > பன் > ப து > ப த் து என்பன அமைப்புகள். ஒன்பது குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் தொண்டு; இது தொள் து ஆகும்.  தொள் : தொள்ளாயிரம்;  தொள் > தொண் > தொண்ணூறு. அல்லது தொள்+  நூறு.

மீண்டும் தமிழ் காண்போம்.

சனி, 29 செப்டம்பர், 2018

அம்மா காக்கவேண்டும்.

ஆறவைத்த நீரே அருந்தியே தாகத்தை
மீற விடுத்திடா மேலாம் கவனத்தில்
இந்நாள் வரையிருந்தேம் நேற்றோ செல்லிடத்து
உண்ணாமை போற்றி ஒருபுட்டி உண்ணீரைக்
உண்டு விடாய்கழித்தேம் வந்த தொருநாளில்;
தும்மலும் நீர்க்கோவை தானும் துவள்தர
இம்மியும் இன்பிலா நாளாய் இதுவான
தம்மையே நீங்கள்  தரவேண்டும் தேகநலம்
உம்மைப் பணிந்தேமும் சேய்.

இது இன்னிசைப் பஃறொடை வெண்பா.

அரும்பொருள்:
உண்ணாமை = விரதம்.
புட்டி - பாட்டில் (ஆங்கிலம்)
உண்ணீர் - புட்டியில் கிடைக்கும் உண்ணும் நீர்.
விடாய் - தாகம்.
துவள்தர – உடல் தளர
இன்பிலா - துன்பமான.
அம்மையே - தேவியே.
தேகம் - உடல்.

தேய்ந்து அழிதலை உடையது உடல், அதனால்
அது தேய் > தேய்+கு+அம் = தேய்கம் என்று
அமைந்து பின் தேகம் ஆனது. யகர ஒற்று மறைந்தது.
நிலையாமை பற்றி ஏற்பட்ட சொல்.

எலும்பு நரம்பு தசை உறுப்புகள் என்பவால் கட்டப்பெற்றது
அல்லது யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் : கட்டுதல்.

உள்ளுறுப்புகளைப் போர்த்தி உடுத்தி யிருப்பது உடல்; உடம்பு.
உடு என்பது அடிச்சொல்.

உறுப்புகள் பலவும் அடங்கி இருப்பது அங்கம்:  அடங்கம் என்பதன்
இடைக்குறை.  ட கெட்டது.

உடலில் நீர் பாதி;   நீரில்லாதது பாதி.  ஆகவே:  சரி+ஈரம் = சரீரம்1
ஆனது. 

மேனி -  உடலின் மேற்பகுதி.

===================
சரீரம் :

இதைச் சரிதல் + ஈர + அம் எனக்கொண்டு:

சரிவை அல்லது அழிதலை ஈர்த்துக்கொண்டு இலதாவது  என்ற பொருளிலும் கூறலாம். அவ்வாறாயின் தேகம் என்பதன் பொருட்கு ஒத்தது இதுவாகும்.








வியாழன், 27 செப்டம்பர், 2018

உற்பத்தியும் அதன் உறவுக்கருத்துகளும்.

இன்று உற்பத்தி என்ற சொல்லைக் காணச் செலவு மேற்கொள்வோம்.  

இன்று யாம் எழுதிய கவிதை ஒன்றினுக்கு உரை எழுதும்போது இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.

உறு என்பதும் உண்டாகுதல் என்ற பொருளைத் தெரிவிக்கும். உறுப்பத்தி எனினும் அதுவே.  எடுத்துக்காட்டு: தெளிவு உறுதல்:  தெளிவு உண்டாகுதல். உறுதல் என்பது ஓர் இணைப்பைக் குறித்தாலும் உண்டாகாத எதுவும் இணைப்புறுவதில்லை ஆதலால் உறுதல் உண்டாதலைத் தழுவியது ஆகும், உறுதல் ஆக்கத்தின் பின் நிலை; முன் நடைபெற்றதைக் கொணர்வது; ஆதலின் உண்டாக்கத்தை உணர்த்துவது ஆகும்.

உறுப்பத்தி -  பற்றி உறுதல். இது திரிந்து உற்பத்தி.  இனி உள் பத்தி எனினும் அது.  உள், உல், உறு என்பன தம்முள் உறவுடைய சொற்கள். ஒன்றின் பொருள் பிறவற்றில் தழுவி நிற்குமாறு பயன்படுத்தத் தக்கவை.

உரு என்பதும் தொடர்புடையதே.

காவல் உறவேண்டும் என்ற தொடரைச் சிந்தித்தால், காவல் உண்டாகவேண்டும் என்பது பொருளென்று அறியலாம்.  மிகுதல் பொருளும் உண்டாகி அதிகப்படுதல் என்பதே. அதாவது அளவில் அதிகமாய் உண்டாகுதல்.

கீழ்க்காணும் விளக்கம் அறிந்து மகிழ்க.

இது திரிசொல். (  இயற்சொல் அன்று ).

பல சொற்கள் தாம் அமைந்தபோதிருந்த பொருளில் வழங்குவதில்லை.  எடுத்துக்காட்டு: நாற்றம்.  ஆனால் அதன் அடி  நறு என்பது; அது நல் என்பதிற் பிறந்தது.  நல் என்பது நன்மை.  நறு மணம் என்பதும் இன்றும் நல்ல மணமே ஆம். அதன் விரிவாகிய நாற்றம் என்பதே இழிபொருள் குறித்தது.

நாற்றம்: திரிசொல்;  நறு : இயற்சொல். இரண்டும் உறவினவாம். பரமாத்துமா தெய்வமாகவும் அவர் மகன் அசுரனாகவும் ஆனதுபோல.

 

உற்பத்தி


உற்பத்தி என்பது மிக்க அழகாய் அமைந்த சொல்லாகும். கரு ,  கருப்பையை உள் பற்றிக்கொண்டுதான் வளர்ந்து பெரிதாகிறது.  

மரங்களின் விதைகளும் எங்காவது போய் விழுந்து மண்ணினுள்  பற்றிக்கொண்டுதாம்  வளர்ச்சி பெறுகின்றன . 


உள் பற்றுதல் என்ற கருத்திலிருந்து உண்டாகுதல் என்னும் கருத்து வளர்ச்சி பெற்றது. உண்டாகு என்பதிலும் உண்டு என்னும் சொல், உள்+து என்று அமைந்ததே. உள் என்பதே உற்பத்தி  என்பதிலும் பொதிந்துள்ளது உணரற் பாலது ஆகும்.


உற்பத்தி என்பதில் உள் > உல் என்று திரிந்துள்ளது. பற்றுதல் என்பது பற்றி >பத்தி என்று திரிந்துள்ளது. உள் என்பது பத்தி என்பதனோடு புணர,  உட்பத்தி என்று ஆனாலும், பின் உத் பத்தி எனறு திரிவது மற்றொரு வழியாகும்.


இது தமிழ் மூலச்சொற்களைக் கொண்டு அமைந்தது. இந்த விளக்கம் எல்லாம் கூறிக்கொண்டிராமல், இது தமிழன்று என்பது இன்னும் எளிதாக இருக்கும். 


உள்  என்ற  தமிழ்ச் சொல்  மலாய்  மொழியில்  உலு என்று திரிவது கவனிக்கத்தக்கது.

படிப்பறிவு இல்லாதவர்கள் "உலுப்பத்தி" என்பதும் கருதத்தக்கது.

நேரக் கழிவு.

ஆய்வொன்றும் இன்றில்லை ஆழ்ந்தசிந்  திப்பில்லை
ஓய்வின்றி  ஆனாலும் ஒன்றிரண்டு ----  போயநேரம்
என்றும் வருவதில்லை  இவ்வுலகில் நேரமொன்றே
உண்டாக்க ஒண்ணா தது.  

இதன் பொருள்:

ஆய்வொன்றும் இன்றில்லை -  இன்று யாம் எந்த ஆய்வினையும்
செய்து வெளியிடவில்லை;

ஆழ்ந்த சிந்திப்பில்லை -   உள் நுழைந்து காண்கின்ற சிந்தனை
களெதுவும் செய்யவுமில்லை;

ஓய்வின்றி-   இன்று முழுமையும் வேலைகள் பலவற்றால் ஓய்தல்
இல்லாதமல்;

ஆனாலும் -  நடைபெற்றாலும்;

ஒன்றிரண்டு -  வேலைகள் ஒன்றோ இரண்டோதாம் குறிப்பிடத்
தக்கவை; 

போய நேரம் -   இவற்றில் கழிந்த கால அளவு;

என்றும் வருவதில்லை -  திரும்பிக் கிட்டுவதோ இல்லை;

இவ்வுலகில் நேரமொன்றே -  இந்த உலகத்தில் நேரம் என்ற
ஒன்றுமட்டுமே;

உண்டாக்க ஒண்ணாதது - நம்மால் உற்பத்தி செய்ய
இயலாதது ஆகும். 

என்ற படி.

சதி என்னும் சொல்.

சொற்கள் எப்படி அமைந்தன என்று எழுத்தாளன் கவலைகொள்தல் ஆகாது. இதிற் கவனம் செலுத்தினால் அவனெழுதிக் கொண்டுள்ள கட்டுரையோ கதையோ குன்றிவிடும்.  ஆகவே சொல்லியலைத் தனிக்கலையாகப் போற்றவேண்டும்.  படைப்பாற்றலை வெளிக்கொணராத  எழுத்துவேலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள காலை சொல்லியலில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

சொற்களில் வினைகள் பெயராகுங்காலை சில முதனிலை திரிகின்றன. திரிபு வகைகளில் நீள்தல் குறுகுதல் என்பவை அடங்கும்.  இவை இடுகைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பினும் இடுகைகள் பலவாதலின் இவற்றை ஒன்று சேர்த்து நோக்க, ஈண்டு மிக்க விரிவாகவே இத்தகு திரிபுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை எளிதாக அறியலாம்.

துள் > துளை;   துள்> தொள் > தொடு;  தொடு> தோடு; தோடு > தோண்டு; தோண்டுதல். என்பவை காண்க.

தொண்டை என்பது ஒரு தோடு போன்றதே.  தோண்டியதும் போன்றதே.

தோண்டு> தொண்டை.

இங்கு முதலெழுத்துத் திரிந்தது. (குறிலானது).  ஐ விகுதி பெற்றுப் பெயரானது.

தோண்டு > தோண்டி.  இப்படி வரும். இங்கு முதலெழுத்து திரியவில்லை. இச்சொல் இ விகுதி பெற்றது,

நெடிலான சில முதலெழுத்துக்கள் சொல்லமைவில் குறுகும் என்பதை உணர்ந்தீர்கள்.

சதி என்பது ஒரு திட்டத்தையோ ஒரு மனிதனையோ சாய்ப்பதும் எழவிடாமல் செய்வதுமாகும்,

சாய் > சய்தி > சதி.

இது யகர ஒற்று இழந்து சாதி என்று வரின், குழப்பம் ஏற்படுமாதலின் மேலும் குறுக்கப்பெற்று சதியானது.

இது மிக்கத் திறமையுடனே அமைக்கப்பட்டுள்ளது.  முதலெழுத்து -  குறுகியதும் யகர ஒற்று வீழ்ந்ததும் காண்க.

பின் தேவையெனில் திருத்தம்பெறும்,


செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சித்திரம் என்பது சரியான சொல்லன்று

சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.

சித்திரச் சோலைகளே உமை நன் கு
திருத்த இப்  பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.

இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை.  யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.

சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள்.

செத்தல் என்றால் ஒத்திருத்தல்.

செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி.  இந்தத்  திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது.  திறம் > திரம்.  சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம்.  பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன.  சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன.  மிகுதி > விகுதி.  சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும்.  வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம்.  வரு> வரு+கு+ அம்= வருக்கம்.  வருகின்ற கொடிவழி.

 மி>வி:  இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.

செ + திரம் = செத்திரம்.  இதுபின் சித்திரம் என்று திரிந்தது.  அதன்பின் செத்திரம் என்ற  சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது.  இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.

ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று.  செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.

இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு.  எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர்.  ஆகவே  ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும்.  எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவ்ேண்டும்.  இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.

செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று.  சா என்பதே  ஆகும்,  சா> சாதல்.  சா - செத்தல் அன்று.   செத்து என்ற வினை எச்சம்  சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது.  தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது.  இதைக் கொண்டுபோய்  ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.

ஓவியம் என்ற சொல்லிலும்  ஒ என்பதே பகுதி அல்லது அடி.  ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம்.  ஓ+ அம் =  ஓவம்.   என்றால் சித்திரம்.  ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார்.  அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம்.  ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்).  ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால்  முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  சுடு> சூடம் என்பது போல.

புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும்  ஓவியமாய் உலவுவது புலி.

சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும்.  சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம்.  அது இப்போது மட்கிவிட்டது.

ஒப்பு நோக்குக:  செந்தூரம் > சிந்தூரம்.
                                  நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம்.  நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு.  ஊறு என்பதே  ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக.   ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.

நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன.  இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.

பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.

அறிக; மகிழ்க.

திங்கள், 24 செப்டம்பர், 2018

எசமான் ( எஜமான் ) என்ற சொல்.

இன்று எசமான் என்ற சொல் எப்படி ஆக்கப்பட்டது என்பதை அறிந்து இன்புறுவோம்.

இப்போது சில கவிதைகளும் சொல்லாய்வுமே செய்துவருகின்றோம்.
இலக்கிய ஆய்வு அல்லது நோட்டம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் சில நன் கு பிறரால் திருடப்பட்டுவிட்டன.  பல உரைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எமது மின்னஞ்சல் உள்ளும் புகுந்துவிட்டனர்.  அடிக்கடி கடவுச் சொற்களை மாற்றி இடர்விளைவிக்கின்றனர்.

தமிழில் நடத்துபவன் அல்லது தலைவனுக்கு இயவுள் என்றொரு சொல் உள்ளது.  இது கடவுள் என்ற சொல்லைப்போல உள் விகுதி பெற்ற சொல்.

இயக்கம், இயங்கு என்ற சொற்களில் இய என்ற அடிச்சொல் உள்ளது.

பெருமான் என்ற சொல் பெரு+ம்+ஆன் என்று அமைந்தது. மகர ஒற்று ஒரு சொல்லாக்க இடைநிலை ஆகும்.  மான் என்பது இறுதி என்று சிலர் சொல்வதுண்டு.  எனினும் மான் என்பது ம்+ ஆன் என்பதே.  ஆன் என்பதுஆண்பால் விகுதி.  பெண்பால் விகுதி ஆள் என்று வரும். இது நீங்கள் அறிந்ததே.

இய+ம்+ஆன் = இயமான்.  அதாவது இயக்குநன்.  இயவுள் என்ற பழைய சொல்லுமது.   யகரம் சகரமாகத் திரியும்.  வயந்தம் > வசந்தம்.  வாயில்> வாசல்.  நேயம் > நேசம்.

இருவர் நெருங்கிப் பழகுவது அன்பைப் பயக்கிறது.  பயத்தல் என்பது உண்டாக்குவதென்பதாகும்.  பய > பயன் என்பதும் காண்க.  இனிப் பய+ அம் = பாயம்.  இது பாசம் என்று திரியும்.  பசுமையான அன்பும் பசு+ அம் = பாசமாகும். இது ஓர் இருபிறப்பிச் சொல்.

இனி இயமான் என்பதற்கு வருவோம்.  இது இயமான் > இசமான் > எசமான் என்று திரிந்தது.  பின் எசமான் எஜமான் என்று மெருகு பெற்று,  மூலங்கள் வழக்கற்றுவிட்டன.

இது தான் எசமானின் கதை.  எசமான் என்பது இன்னொரு விகுதி -  அன்  பெற்று எசமானன் என்றும் சிலரிடத்துத் தவழும்.

அறிவீர் மகிழ்வீர்

பிழைகள் காணின் பின் திருத்துவோம்.

ஐயப்பன் கோவிலின் முன்

முன் இடுகையின் தொடர்ச்சி.

வனஜா அம்மையாருக்கு குருசாமி மோகனின் துணைவியார் ரஜனி
பூவைத்து விடுகிறார்.



கோலாலம்பூர் ஐயப்பன்.






சவரி  மலைசென்று சாத்தாவைக் காண
உவரியாய்ச் சூழ்ந்துள்ள நீரும் --- இவரித்து
நிற்குமோ கண்டபற்றர் நீங்குவரோ வேண்டாமே
அற்கம் செலுத்தலம் பூர்.

இது வெண்பா.

இதற்குப் பொருள்:

உவரியாய்ச் சூழ்ந்துள்ள  நீரும் --  கடல்போல் சுற்றியும்
பெருகியுள்ள நீரும்; சவரி மலை சென்று  -  சபரி மலைக்குப் போய்;
சாத்தாவைக் காண -  ஐயப்பனைத் தெரிசனம் செய்ய;  இவரித்து 
நிற்குமோ -- தடையாக  எதிர்வருமோ; 
கண்டபற்றர்  நீங்குவரோ --  இதைக்கண்ட பக்தர்கள்
ஐயப்பனைத் தொழாமல் விலகிவிடுவரோ  (  மாட்டார்கள் ) ;
வேண்டாமே -  கவலையே உங்களுக்கு வேண்டாம்;  
அற்கம் செலுத்த -  காணிக்கை   செலுத்த; 
லம்பூர் -  கோலாலம்பூர் என்னும் நகரத்திலும் ஓர்
ஐயப்பன் கோவில் உண்டு;  (ஆங்குப் போகலாம் )  என்றபடி.

அந்தக் கோவில் இங்கு படத்தில் உள்ளது. கண்டு களிக்கவும்,

இந்தப் படத்தில் பாட்டியும் பேரனும் காணிக்கை செலுத்திவிட்டு
வெளியில் வந்து மகிழ்ச்சியுடன் தோன்றுகின்றனர்.

பாட்டி: வனஜா அம்மையார்; பேரன்: ஐயப்ப குருசாமி மோகன்.

HOTMAIL given up. Hackers took over.

Please note that Sivamala has given up the HOTMAIL account which was being used previously.  I believe some virus operators have taken over that e-mail account.  Do not send any communication to that hotmail.

Hackers are waiting there for incoming mail. 

Any communication should be sent to the current email on record:  bisivamala@gmail.com.

Thank you.