திரு + ஆர் + திரை = திருவார்திரை > ( இடைக்குறைந்து) : திருவாதிரை.
இதற்குச் சமத்கிருதப் பெயர்:
மேலே ஆர் என்பதை எடுத்துக்கொள்ளவும்.
ஆர்தல் - நிறைவு என்று பொருள்படும் வினைச்சொல்.
இங்கு ஓர் உகரச் சுட்டுச் சொல்: உது என்பதைப் புகுத்தவும்:
ஆர் உது.
திரை என்பதைத் திரா என்று திரித்து இறுதியில் வைக்க:
ஆருது + திரா > ஆருத் + திரா> ஆருத்ரா.
ஆருது என்பது ஆருத் ஆனது; ஆகவே ஈற்று உகரம் கெட்டது.
திரா என்பதில் தி கெட்டது. எனவே ஆருத் + ரா ஆனது.
ஆருத்ரா என்பது சமத்கிருதச் சொல்.
உது என்பது தமிழிலும் சங்கதத்திலும் "முன் தகைமை" என்று பொருள்படும். எனவே அது திரு என்பதற்கு ஈடாக வைப்புற்றது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக