திருவாதிரை என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். நட்சத்திரம் என்பது உடு என்றும் நக்கத்திரம் என்றும் தமிழிலே சொல்லப்பெறும். நட்ச என்பது நக்க என்று வருதலாவது, பட்சி என்பது பக்கி என்று வருதல் போலாம். இரக்க(ம்) என்ற தமிழ்ச்சொல் ரக்க > ரட்ச என்று வந்ததுபோலுமே ஆகும். ( ரட்ச ரட்ச ஜெகன்மாதா என்று பாட்டில் வருகிறதன்றோ? ) பக்கம் என்பதும் பட்ச என்று வருதலுண்டு.
[பக்கி: பகு +இ; (உகரம் கெட்டு, ககர ஒற்று இரட்டிப்பு.) பட்சி: பள்+ சி. பள் என்பது பகு என்பதன் முந்துவடிவம். இவற்றுள் தொடர்புகள் கண்டுகொள்க. மேலும் புரிந்துகொள்ளப் பின்னூட்டம் இடவும் ]
நக்கத்திரம் என்பது நகுதல் - ஒளிசெய்தல் என்ற வினையினின்று வருகிறது. நகம் என்பது உகிர் என்று இலக்கியநடையில் சொல்லப்பெறினும், நகுதல் என்ற வினையடியினதே ஆகும். அது சாயமிடப்பட்ட உகிரைக் குறித்தது. தீட்டியும் வரைந்துமுள்ள நகம் ஒளிவீசும். பின்னாளில் தன் சிறப்புப் பொருளை இழந்து பொதுவாக எல்லா நகத்தையும் குறித்தது. நக்கசாரணர் என்ற சொல்லையும் அறிந்துகொள்ளவும். இவை இங்கு பழைய இடுகைகளில் விளக்கப்பெற்றுள்ளன.
திருவாதிரை என்பது சிவபெருமானுக்குரிய நடசத்திரமென்பர். அது உண்மையில் :
திரு + ஆர் + திரை
என்பதுதான். பல உயர்வும் உடைய அல்லது நிறைந்த முகத்தை ( திரை) உடைய நட்சத்திரம் என்பது பொருள்.
இது பின் இடைக்குறைந்து,
திருவார்திரை > திருவா(ர் )திரை ஆயிற்று. ரகர ஒற்று இடைக்குறைவது, சேர்மித்தல் > சேமித்தல் என்பது போலுமே ஆகும்.
திருவாதிரை என்பது " திருவார் ~ திரை" என்பதை மறவாதீர்.
திருவெல்லாம் ஆர்ந்த திரையை ( முகத்திரையை) உடைய உடு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக