வியாழன், 9 டிசம்பர், 2021

பீபின்ராவத்: பயணமும் எமகண்டமும் General Bipin Rawat

 எமகண்ட நேரமென்றால்---- பயணம்    

எங்குமே போவதற்கே,   

அமையா  நேரமென்று --- சிலர் 

அறிந்தோர் சொல்வதுண்டு.    


போகும் இடமதற்கே ---  நீங்கள்     

போகா  திருந்துகொண்டே,    

ஆகும் காரியத்தை ---  முடிக்க   

அனைத்தும் செயல்நலமே.    


பீவின்  இராவத்துமே --- இதைப்       

பின்பற்றிப் போவதற்கே.   

நாவை அசைத்திடிலோ --- விபத்து     

நடந்திடும் வாய்ப்பிலதே.    


நடந்த பின்சொல்வதோ ---- நாட்டில்     

நயமிலை என்றிடுவார்,    

முடிந்த வரையிலுமே ----நன்னாள்   

முனைந்து போற்றிடுக .


பார்க்கவும் கேட்கவும் மேலே சொன்ன கருத்து  பழமை போலத்தெரிந்தாலும்,  நேரத்தை நன்கு கணக்கிட்டுக்கொண்டு, "ஐம்பான்மை" ப்  (பஞ்சாங்கப்)  பலன்களையும்"  நல்லபடி அறிந்துகொண்டு புறப்படுவதால் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை.  தொல்லைகள் இல்லாமல் ஆகவோ   குறையவோ வாய்ப்புண்டு.  அது  (ஐம்பான்மை)  பொய்யாக இருந்துவிட்டால் உங்களுக்குக் கொஞ்சம் முயற்சி வீணானது தவிர வேறு துன்பங்கள் இல்லை.  உண்மையாக இருந்துவிட்டால் நன்மைகள் பற்பல என்பதை மறவாதீர்.  அதனால்தான் கணித்துக்கொண்டு புறப்படுங்கள் என்றோம்.  என்ன பெரிய நட்டம் வந்துவிடப் போகிறது,  ஐம்பான்மைக் கணிப்பில் சிறிது ஈடுபடுவதால்....?

   


4 1/2      7

4 1/2   6  1/2

 5   5 1/2

5   5

3 1/2     61/2

4  6

 4       6 1/2

5    6 1/2


       3   6 1/2

   4 1/2     6 1/2

     4     71/2

    5     7

3 1/2   6

4      5

3 1/2    6

4 1/2    6 1/2









கருத்துகள் இல்லை: