மனிதராயினும் மற்ற விலங்குகள் ஆயினும் சில சூழ்நிலைகளில் வசமிழந்து தம்போலும் மற்றொரு பிறவிக்குப் பணிந்துவிடுகின்றன(ர்) . இதை வசம் என்று முன் கூறும்வழியே கூறுகிறோம்.
வசம் என்ற சொல்லுக்கு வை என்பதே அடிச்சொல்.
வை - சொல்லாக்க நெறி நிற்குங்கால் வய் என்று வரும்.
வய் > வய்+ அம் > வயம்.
யகர சகரப் போலியால் வயம் > வசம் ஆகும். ( ய - ச). வாயில் - வாசல் போல.
வை என்பது மேற்குறித்தவாறு வய் என்று ஒலியொற்றுமைத் திரிபு அடையாமல் வை என்றே நின்று அம் விகுதி பெறுவதுமுண்டு. அப்போது:
வை > வை+ அம் > வையம் ஆகும். அப்போது வைக்கப்பட்டதான உலகம் என்று பொருள்படும். இறைவனால் வைக்கப்பட்டது, இயற்கையால் வைக்கப்பட்டது என இருவகையாகவும் பொருள்தெரித்துக் கொள்ளலாம். தெரிதல்> தெரித்தல் (பிறவினை). தெரித்தல் என்பது தெரியும்படி செய்தல். தெரிவித்தல் - பிறர் தெரிந்துகொள்ளுமாறு செய்தல்.
வையம் என்பது அம் விகுதி கொள்ளாமல் அகம் என்னும் விகுதி பெற்று வையகம் என்றும் வரும்.
ஒரு பொருளை ( பழத்தை ) எடுத்துக் குரங்கினிடம் வைத்தால், பழம் குரங்கின் வசமானது என்க. ஆகவே வசமென்பது ஒன்றன்பால் அல்லது ஒருவன்பால் வைக்கப்பட்ட நிலை. தானே தன்னை வைத்துக்கொள்வதும் பிற ஆற்றலால் வைப்புறுவதும் அடங்கும்.
உயிர்கள் ஓரு கவர்நிலையில் வைக்கப்பட்டுக் கிடக்கும் பருவமே வசம்+தம் ஆகும். இங்கு தம் என்பது து+ அம் கலவை விகுதி. வசம் + து + அம். வசத்ததாகி அமைதல்.. வசம் +து : வசத்தது (ஆகி) அம் - அமைதல், விகுதியும் ஆகும். து இடைநிலை எனினுமது.
மாலை நேரம் உயிர்களை வயப்படுத்துகிறது. வயந்த ( வசந்த) காலமும் வயம் செய்கிறது.
இனி வாய் என்ற சொல்லாலும் இதையே விளக்கலாம்.
வாய் - இது இடம் குறிக்கும். எ-டு: தோற்றுவாய் : தோன்றுமிடம்.
ஓரிடத்து வைப்புற்றுக் கிடத்தலே வாய் + அம் > வய் + அம் > வயம்.
சாவு + அம் என வந்து குறுகிச் சவமானதுபோல, வாய் + அம் > வயமென்றும் குறுகுதற் குரித்தேயாம்.
வை, வாய் என்பன ஏனை மொழிகளிலும் பரவியுள்ளது. இதனை இன்னோரிடுகையில் பார்ப்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக