சென்ற இரு நாட்கள் ஏதும் எழுதமுடியவில்லை. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு, நம் உலாவியும் ஓடவில்லை. எங்கோ பழுது ஏற்பட்டிருந்ததால் என்று நினைக்கிறேன்.
கோளாறு யாது என்று கண்டுகொள்வதில் நேரம் செலவாகிவிட்டது.
நிற்க, இப்போது சன்னதி சன்னிதி என்ற சொல்வடிவங்களைப் பற்றித்
தெரிந்தின்புறுவோம்.
இரு சொற்களும் நாம் ஆலயங்களில் கேள்விப்படுவனவாகும்.
சன்னிதி என்பது அகர முதலாகத் தோன்றிப் பின் சகர முதலானது,
அ + நிதி = அந்நிதி > சந்நிதி > சன்னிதி.
அ = அங்கு, முன் இருப்பது.
அவை என்ற சொல்லும் அகர முதலாக அமைந்து பின் சகர முதலானது
தான்.
நிதி என்பது:
நில் > நி. இது கடைக்குறை.
தி என்பது விகுதி. நி = நிற்பது.
பெரியோர் அல்லது தெய்வச்சிலைகள் நிற்பிடம்.
தனித்தமிழில் இது திருமுன் எனப்படும்,
இச்சொல் பின் சன்னதி என்று திரிந்தது.
சந்நிதி சன்னிதி என்பன முதல் வடிவங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக