வெள்ளி, 16 டிசம்பர், 2016

பிற + ஏம் + ஐ = பிரேமை.

தன்னைத் தானே பெரிதாக எண்ணிக்கொண்டு தன் நாட்களைக் கழிக்கும் ஓர் இளைஞன், இன்னோர் ஆன்மாவை நேசித்து அவ்வான்மாவுடனும் அது குடியிருக்கும் உடலுடனும் அன்பு பூண்டு ஒழுகும் நெறிதான் பிரேமை எனப்படுகிறது. அவ்வன்பினால் அவன் அவ்வான்மாவைக் காக்க முனைகிறான்.  ஏம் = பாதுகாத்தல். ஏமம் = பாதுகாத்தல். ஏமை என்பதும் அதுவே.  அம், ஐ என்பன விகுதிகள்.

பிற + ஏம் + ஐ = பிரேமை.

இதை முன் விளக்கியுள்ளோம்.  அழிந்துவிட்டபடியால் மீண்டும்
வெளியிட்டோம். இது அதனை உறுதிசெய்யும் வெளியீடு ஆகும்.

பிற என்ற சொல்லில் உள்ள ற, ர‍~வாக மாற்றப்பட்டது. இப்படி ஒரு
மாற்றத்தை நிகழ்த்திவிட்டாலே அதனை அடையாளம் கண்டுகொள்ள‌
இயல்பாக ஒழுகுவோனால் இயலாது!  சிந்தனைக் குறைவே காரணம்.

அடுத்தவீட்டான் எப்போதும்போல் வந்தால் அவன் யார் என்று எளிதில்
தெரிந்துகொள்ளலாம். வேடமிட்டுக்கொண்டு போனால் ஒருவேளை
தெரியாமல் போனாலும் போகலாம். அதுபோலத்தான்.


ஏமம் சேமம் ஆனகதை தொரியுமோ சாமி!

அகர வருக்கத் தொடக்கச் சொற்கள்  சகர  வருக்கத் தொடக்கமாக‌
மாறுகின்றன என்று சும்மாவா சொன்னோம் சாமியே.

எடுத்துக்காட்டுகள் நூற்றுக் கணக்கில் இருக்கலாம். பட்டியல் எமக்குத்
தேவையில்லை.

கருத்துகள் இல்லை: