கம்முநாட்டி, பொம்முநாட்டி என்பன சிலர் பயன்படுத்தும் வடிவங்கள்.
இவை எங்ஙனம் அமைந்தன என்பதை இதுகாலை உணர்ந்துகொள்வோம்
இவ்வழக்குகள் உலக வழக்கில் உண்டெனினும் இலக்கிய வழக்கில் அருகியே வந்துள்ளன . ஓர் திரைப்பாடலில்
நீ எல்லாம் தெரிஞ்ச பொம்முநாட்டி, நான்
ஒண்ணுமே தெரியாக் கம்முநாட்டி
என வருவது நீங்கள் கேட்டிருக்கலாம்.
கைம்பெண்டாட்டி என்பதே கம்முநாட்டி என்று திரிந்தது என்று சொல்வர்.
இதில் கைம்பெண்டா என்பது "கம்முநா" என்று திரிவது வியக்கத்தக்கது
ஆகும்,
கைம்பெண்டு+ ஆட்டி என்ற வடிவத்திலிருந்து புறப்படாமல், பெண்டு என்பதற்குப் பதில் பெண்ணு என்பதை மட்டும் கருதினால்,
கைம்பெண்ணு + ஆட்டி = கம்முணு + ஆட்டி = கம்முநாட்டி அல்லது
கம்முணாட்டி என்பது எளிதாகிறது.
பொம்முநாட்டி என்பது, பெண்+முன்+ ஆட்டி = பெம்முநாட்டி > பொம்முநாட்டி என்று அமைந்தது.
இச்சொல் (பொம்முநாட்டி) என்பதன் முந்து வடிவம் பெண் முன் ஆட்டி ( பெண்முன்னாட்டி) என்பது சரியானால் அது பெண்கள் ஒருகாலத்தில் முன்னணி வகித்ததைக் காட்டுகிறது. பெண்முன் என்பது பெம்மு என்றும் பின்னர் பொம்மு என்றும் திரிதல் பொருந்துகிறது. பெண்மான் என்ற கூட்டுச்சொல்லும் பெண்மா(ன்)> பெம்மா > பொம்மா என்று திரிதல் எளிது. ஆனால் இவ்வுலகவழக்குச் சொல்லில் பொம்மு-நாட்டி என்று வருவதால் மான் என்பது பொருந்தவில்லை. ஆகவே பெண்முன்னாட்டி என்பதே மூலச்சொல்லாக இருந்திருக்கவேண்டும்.
கட்டப்பொம்மன் என்ற பெயரில் மூலப்பெயர் கட்டைப்பொம்மையன் என்பதாக இருந்திருத்தல் கூடும், பொம்மை என்ற பெயர் வழக்கில் உள்ளது, பொம்மையன் என்பது பொம்மன் என்று திரிந்தது எனலாம், இந்தப் பொம்மன் பெண் என்ற சொல்லுடன் தொடர்பற்றது என்பது தெளிவு. பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று திரிவதால் கட்டைப்பெருமான் என்பதே கட்டப்பெம்மான், கட்டப்பொம்மான், கட்டப்பொம்மன் என்று திரிந்ததென்று சொன்னாலும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ஆட்டி என்பது ஆள்+தி என்று பிரிவதால், இச்சொல் பெண் குழுவினர்க்கதிகாரிகளைக் குறித்து, இப்போது பொதுப்பொருளில்
வழங்குகிறது என்பது தெளிவு. பெண்களுக்குப் பொறுப்பதிகாரி, கைம்பெண்களுக்குப் பொறுப்பதிகாரி என்று சொல்லுக்கேற்ப வரும்.
அரண்மனைகளில் வழங்கிய சொற்கள் இவை எனலாம்.
இங்கு வரும் "ஆட்டி", சீமாட்டி, பெருமாட்டி என்பன போலும் அமைந்த வழக்காம். பின் பொருள் இழிந்தன.
பெண் என்பது மட்டுமே குறித்தல் நோக்கமயின், ஆட்டி என்பது
தேவையற்றதென்பது அறிக. சொல் இழிந்தமைக்குக் காரணம், ஆடவர்
தாழ்த்தி எண்ணியதே என்க

பெண்டாட்டி என்பது பெண்+து+ ஆட்டி ஆகும். து = உரிமை குறிப்பது.
பெண்ணுக்குரிய தன்மையை ஆள்பவள் என்பது பொருள். குடும்ப நலம்
கருதுபவள் எனல். கருத்து.
இச்சொற்கள் கம்நாட்டி, கம்மநாட்டி, பொம்நாட்டி, பொம்மநாட்டி என்று
பலவாறு நாவொலிப்புப் பெறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக