ஞாயிறு, 14 ஜூன், 2020

பங்கயம் (பங்கஜம்)




இன்று பங்கயம் என்ற சொல்லினை அறிவோம்.

தாமரைப் பூவில் இதழ்கள் அடுக்கிவைத்தது போல், விரிந்து அழகாக இருக்கும். இதழ்கள் அடுத்தடுத்து இருத்தலால் அகரச் சுட்டிலிருந்து பிறந்த அயம் ( அயல் ) என்ற இறுதி வந்துள்ளது. - அடுத்தடுத்து, அம் - அமைந்தது என்பது காட்டும் விகுதி. அமைதல் என்ற வினையின் அடிச்சொல்லே அம் என்பது, இங்கு விகுதியாய் வந்துள்ளது.

அயல் ( அயம்) -  அடுத்தடுத்து அமைந்தது.  அயலென்பது அடுத்திருப்பதே. (அ அல் : அயல்; அ அம் : அயம், யகர உடம்படுமெய்.)

இவ்வாறு அடுத்தடுத்துப் பகுந்து நிற்றலால் பங்கு என்ற சொல் முன் நிற்கிறது. பகு > பங்கு. பங்கு என்பது தொழிற்பெயர். இதன் பொருள் பகுக்கப்பட்டதென்பது.

பங்கு + அயம் > பங்கயம் ( பங்கஜம் ).

பங்கயவல்லி > (பங்கஜவல்லி ) - தாமரையில் வீற்றிருப்பவள்.

இதனைப் பங்-~   + கயம் என்று பிரிப்பர் சில ஆசிரியர். குளத்தில் இருப்பது என்று பொருளுரைத்தல் ஆம்.  பங்கம் - சேறு என்பதுமொன்று. சேற்றில் மலர்வதென்பது.

இது எவ்வாறு காணினும் காரண இடுகுறிப்பெயராகும்.

அறிவீர் - மகிழ்வீர்.

தட்டச்சு மெய்ப்பு - பின்.





வியாழன், 11 ஜூன், 2020

அரசனும் அரணும்.( ராஜன் - ராணா - ராணி.)

இங்குத்   தலைப்பில் கொடுத்துள்ள  சொற்களின் முகிழ்புலங்களைக் கூடுமானவரை சுருங்கத் தெரிந்துகொள்ள முனைவோம்.

கூறியன மீண்டும் கூறப்படாதொழியுமாறு, அரசன் என்ற சொல்பற்றி அறிய
இவ்விடுகையைப் படித்தறியப் பரிந்துரைப்போம்:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html  -   அரசன்.

அரசன் என்பதன் அடிச்சொல் அர் > அர ķĺĺò
என்பதுதான். உடனிருப்பவர்களையும் நாட்டு மக்களையும் அடக்கி ஆளும் வலிமை பெற்றவனே அரசன். குடிவாழ்நரை இடர்களிலிருந்து பாதுகாக்கும் நன்மையையும் அரசனே செய்தான்.  அயலார் உட்புகுந்து மக்களைத் துன்புறுத்தாமல் அவன் பார்த்துக்கொண்டான்.  இவற்றுக்காக அவன் கோட்டைகளையும் அரண்களையும் நிறுவினான்.

அர் என்ற அடியினின்றே அரண் என்ற சொல்லும் தோன்றியது. அரண்களை உருவாக்கி  ஆட்சி இனிது செல்லுமாறு பார்த்துக்கொண்டமையின், அவன் அரணியன் (  "அரணன்"  "அரணான்" )  ஆவான். அவனுடன் இருந்த அவன் அரசி அவனின் ராணி ஆனாள்.   அரண் >( அரணி ) > ராணி > இராணி..

அயன்மொழித் திரிபு  ராணி என்பது.   அரண்களை ஆட்சி புரிந்தோர் அரசர் குலத்தோரே ஆதலின்,  அரசி ராணி எனப்பட்டதும் அவர்கள் வாழ்ந்த பெருமனை அரண்மனை எனப்பட்டதும் பொருத்தமாய் அமைந்தன.

அரங்கன் என்ற சொல் ரங்கன் என்று தலையிழந்தது. . இதுபோலவே ராணி என்ற சொல் தலையிழந்து அவ்வாறாயது..

அரசனும்  ராணா  ( அரணன் - வழக்கழிந்த சொல்வடிவம்)  என்றும் அரசி,  ராணி மகாராணி என்றும் சுட்டப்பெற்றனர்.

இற்றை ஆய்வில் திராவிட அல்லது தமிழின மக்களே அரசுகளை நிறுவினர் என்று கருதப்படுகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


( இடைவெளி கடைப்பிடித்து நோயினின்று
காத்துக்கொள்ளுங்கள் ).

மெய்ப்பு - பின்

இது  ( ķĺĺò )  என்ன குறிப்பு என்று தெரியவில்லை. கள்ளப்
புகவர்கள் இதைப் பதித்துள்ளனர். ஏன் என்பது தெரியவில்லை.
என்ன நடக்கும் என்று பார்ப்போம்.



புதன், 10 ஜூன், 2020

செது என்னும் அடிச்சொல்.

இன்று சேதம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இது தமிழில் உள்ள வழக்குச்சொல் தான்.

"சேதம் இல்லாத இந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடலில் வருகின்றது.

தான் - இடமென்றும் பொருள். தான் இருப்பது இடம். எதை எங்கு இடுகிறோமோ அது அதற்கு இடம்.   தான் > தானம்> ஸ்தானம். இந்தச் சொல் எங்கும் பரவி, துருக்கிஸ்தான் என்னும் ஊருக்குமப்பால் சென்றுள்ளது.  அது நிற்க,

ஒரு பொருளைச் செதுக்கினால் அல்லது வெட்டினால் அது செதுக்கம் அடைகின்றது.  செதுக்கு+ அம் = செதுக்கம்.  செதுக்கமென்பது ஒரு புத்துருவாக்கச் சொல். முன்னர் எவரும் கையாண்டிருக்கலாம்; எமக்குக் கிட்டவில்லை. அல்லது புதிய கருத்துக்குப் பயன்பாடு செய்யலாம்.

ஆனால் முன்பே வழக்கில் உள்ள சொல் சேதம் என்பது.   செதுக்கு என்பதில் உள்ள கு என்ற வினையாக்க விகுதியை விலக்கிவிட்டால் அடிச்சொல்லே மிஞ்சும்.  அது செது என்பது.

செது என்பது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றால் அது செது + அம் = சேதம் ஆகின்றது. ஒன்றைச் செதுக்கினால் அது உருவில் குறைவு பட்டுவிடும்.  ஏற்கெனவே இருந்த நிலை முழுமையானால் செதுக்கியபின் உள்ள நிலை சேதமாகின்றது.  நகை முதலியவற்றில் செய்யும்போது எடையில் குறைவுபடுதலைச் சேதாரம் என்பர்.   செது+ ஆரம் = சேதாரம் ஆகின்றது. புல்முதலியவற்றை மேலாக வெட்டுதலைச் செத்துவது என்பர். இந்தச் சொல்லை அகரவரிசைச் செந்நாப்புலவன்மார் விடுபாடு இழைத்து  தவறிவிட்டனர் என்று தெரிகிறது. அது அவர்கள் சேகரிப்பில் இல்லை. புல்வெட்டும் மூத்த தமிழரிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம். உங்களிடம் உள்ள அகராதியில் தேடிப்பாருங்கள். அகர முதலாகச் செல்லுக்குப் பொருள்கூறுவது  அகர + ஆ(தல்) + தி (விகுதி). > அகராதி.

செது > செத்து > செத்துதல்.

சா ( சாதல் ) என்ற வினைச்சொல் வினை எச்சமாகும்போது சத்து என்றுதான் வரவேண்டும்.   சத்து > செத்து என்று வருதல் திரிபு.  செ என்பது இதன் வினைப்பகுதி அன்று. ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகள் சத்து என்று அதனை எச்சமாக்குதல் காண்க.

செத்துதல் என்பதில் தகரம் இரட்டித்து வினை அமைந்தது.

எனவே செது என்பது ஒரு பகுதி வெட்டுப்படல்  அல்லது பகுதி அழிதலைக்
குறிக்கும் அடிச்சொல்.

தட்டச்சுச் சரிபார்ப்பு - பின்னர்.


திங்கள், 8 ஜூன், 2020

சுழல் -- சொல்லின் தோன்றுதல் எடுத்துக்காட்டுகள்

சுழல் என்னும் தமிழ்ச் சொல்லின் தோற்றத்தினை (தொடக்கத்தினை) அறிந்துகொள்வோமாயின் இதுவரை நேயர்கள் சிலருக்குப்  பிடிபடாதிருந்த
நெறிமுறைகள் சில விளக்கத்தை அடைந்துவிடும்.

ஒரு வினைச்சொல் பெயர்ச்சொல் ஆகும்போது திரிபுகளை அடைதல் நீங்கள் அறிந்ததே. விகுதி சேர்ந்தும் சேராமலும் வரும். சில சமயங்களில் முன்னொட்டுப் பெறுதலும் கூடும். பெரும்பாலன விகுதியுடன் வந்து தோன்றும்.  சொல் மிகுந்து நிற்க உதவுவதே விகுதி. விகுதி என்பதும் மிகுதி என்ற சொல்லின் திரிபு ஆதலின் , சொல் நீண்டுவிடும் நிலையே அது என்பதும் அறிக. இச்சொல், மிஞ்சு > விஞ்சு என்பது போன்ற திரிபு.

வீதி என்ற சொல்லும் அகலம் என்ற சொற்பொருளும் உடையது.  மிகு> விகு> வீ> வீதி என்பது காண்க. இங்கு தி என்பது இச்சொல்லின் விகுதி அல்லது இறுதிநிலை. தொகு> தோ> தோப்பு போலுமே.  விளக்கம் எளிதாம்பொருட்டு இங்கு தரப்பட்ட விளக்கம் சற்றே வேறுபட்டிருக்கலாம் ஆயினும் முன் (பழைய இடுகைகளில் ) கூறியவற்றுக்கும் இதற்கும் ஆழ்ந்து நோக்கின் வேறுபாடின்மை அறியலாகும். ஓர் ஒற்றடிப் பாதையினும் வீதி அகலமானது. ஓர் ஒழுங்கையினும் அது அகலமானதே. இவ்வாறு நினைத்துத்தான் செல்லும் அகன்ற பாதை என்னும் பொருளில் வீதி என்ற சொல்லும் வழங்கலாயிற்று.
இவ்வாறு நோக்க, விகுதி என்ற சொல்லும் வீதி என்ற சொல்லும் உறவின எனப் புலப்படும்.

பெயர்களில்  தொழிற்பெயர்களை அல்லது வினையினின்று பிறந்த  பெயர்களை  விகுதி அல்லது இறுதிநிலை பெற்றனவென்றும் பெறாதனவென்றும் பிரிக்கலாம். படி(தல்) என்னும் வினையிற் பிறந்த பாடி என்னும் சொல் முதனிலை அல்லது சொல்லின் முதலெழுத்து,  நீண்டு ( ஆகவே திரிந்து )  அமைந்த சொல்லாகும். ஏறத்தாழ வீடுகள் ஒரே மாதிரியாக அமைந்து (படி அமைந்து )  தொழிலும் வாழ்க்கை முறையும் அவ்வாறே படியமைந்து,  மக்கள் வாழும் ஊர் பாடி ஆகும்.  எடுத்துக்காட்டு:  ஆயர் பாடி.

ஆனால் இவ்வாறு தொழிலின் அல்லது ஒரு வினைச்சொல்லினடியாய்த் தோன்றி இடத்தின் பெயராய் முற்றி நின்றமையின் அதனைத் தொழிற்பெயர் என்னாது இடப்பெயர் என்று விளக்குவோரும் உண்டு. ஆனால் இவ்வாறு இதனை இடப்பெயர் என்று வகைப்படுத்திவிடில் அது படி என்னும் வினையினின்றே உருவெடுத்தது மறைவு படும்.  இவ்வாறு மறைவுண்டது காணார் அது தமிழோ அன்றோ என்று அலமருவர்.  ஆதலின் இலக்கணம் எழுதியோர் எவ்வாறு அதை வகைப்படுத்தினர் என்பது நமக்குத் தேவையற்றது ஆகும். மறைந்ததை வெளிப்படுத்தி அதனைத் தொழிற்பெயர் என்பதே சொல்லமைப்பியலுக்கு உதவுவதாகும். தொழிற்பெயர் என்ற பெயரும்கூட என்னவென்று கூறியபின்னரே புரியும் பெயராய் இருத்தலின் அதனை வினைத்தோன்றுபெயர் என்று புதியபாணியில் சுட்டுதல் இன்னும் நல்லது ஆகும்.  ஆனால் அஃது வினையாலணையும் பெயர் என்ற இன்னொரு பகுப்புடன் மயங்குமாதலின், இம்மயக்கு விலக்க, தொழிற்பெயர் என்பதையே ஏற்றுக்கொள்வதுதவிர வழியில்லை என்பதறிக.

அடுக்குகளாய் அல்லது மடித்து மடித்துக் கட்டப்பெற்ற கட்டடமும் மாடி என்ப்படுகிறது.  மடி > மாடி. முதனிலை திரிந்த தொழிற்பெயர். இங்கு வந்த திரிபு முதலெழுத்து நீட்சி. இதுபின்  அம் விகுதி பெற்று மாடம் என்றாகும்.மாடம் என்பதில் மாடி அல்லது மடி என்பதன் ஈற்று இகரம் வீழ்ந்து அம் விகுதி பெற்றது. மடி என்பதன் மகரம் நீண்டது காண்க. இந்த இகரம் வீழாதாயின்  மாடம் என்று வராமல் மடியம் என்று வந்துவிடும்.  இப்படி ஒரு சொல் அமையவில்லை என்று தோன்றுகிறது.  புதிய மடிப்புள்ள பொருள் எதற்கும் இன்னும் தமிழில் பெயரில்லையாயின் இந்த அமையாச் சொல்லை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள வசதி இன்னும் உள்ளது.  பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி முதனிலை நீட்சி பெறாது குறுகி அமைந்த சொற்களையே இன்று காணத் தொடங்கினோம்.  விளக்கத்தின்பொருட்டு நீட்சிபெற்றனவாகிய சில சொற்களைப் பற்றி உரையாடினோம்.

சாவு > சவம்  அல்லது சா> சவம் என்பது சில இடுகைகளில் உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது.  தோண்டு > தொண்டை என்ற முதனிலைக் குறுக்கமும் காட்டியுள்ளோம். இவைபோலுமே சுழல் என்ற சொல்லும் இவ்வாறு ஆயிற்று:-

சூழ் என்பது வினையடி. ( சூழ்தல் ).
சூழ் >  சூழ்+ அல் >  சுழல்.    இது குறுகி அமைந்தது.  நீர்ச்சுழல், காற்றுச்சுழல் முதலியன குறிக்கும்.
சூழ் + அல் = சூழல்.  இது சுற்றுச்சார்பு என்று பொருள்தருவது.  விகுதி புணர்த்தி இயல்பாய் அமைந்தது.

சூழ் > சுழி என்பதும் குறுக்கமே.  இகரம் விகுதி.

இவ்வாறு வினையைக் காட்டாமல்,  சுள்> சுழி,  சுள்> சுழல் என்று காட்டுதலும் ஆசிரியர் சிலரால் கொள்ளப்படும் முறையாகும். அஃது இன்னொரு வகை விளக்கம். எளிதின் உணரப் பயன்படும் வழி மேற்கொள்ளத் தக்கது ஆகும்.

வேறொரு சூழலில் சந்திப்போம். 


தட்டச்சுச் சரிபார்ப்பு - (மெய்ப்பு) - பின்னர். 






வெள்ளி, 5 ஜூன், 2020

அனுஜன் என்ற சொல்லில் தமிழ் மூலங்கள்.

இங்கு யாம் சொல்லப்போகின்றவை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக
யாம் சொல்லிவருபவை தாம்.  ஆராய்ச்சி என்று கடுமையாக ஒன்றிலும் ஈடுபடுவதில்லை.

அணுகுதல் என்ற வினைச் சொல்லை எடுத்துக்கொள்வோம்.  இதன்
வினைப்பகுதி   அண்> அணு > அணு(கு)> அணு(கு)(தல்) என்பதுதான். 
அண் என்ற மூலச்சொல்லுக்கு இடைவெளியின்றி  அருகிலிருப்பது
என்பதுதான் பொருள்.  இந்த அண் என்பது அன் என்றும் திரியும்.  அப்புறம்
பு என்னும் விகுதி பெற்று அன்பு என்றாகும்.  அன்பு என்றால்  -  சொல்லமைப்பில் என்ன தெரிவிக்கிறதென்றால்-   இருவர் அணுக்கம் அடைந்துவிட்டனர் என்பதைத் தெரிவிக்கிறது.  இந்தச் சொல்லை எடுத்து உங்களுக்கு மனநிறைவு உண்டாகுவண்ணம் வரையறவு செய்துகொள்ளலாம். யாம் சொல்வது சொல்லைப் பிரித்து அறிந்த அமைப்புப் பொருளை மட்டுமே.  சொற்பொருள் என்பது வேறு. சொல்லமைப்புப் பொருள் என்பது வேறு.

அண் > அன் என்று திரிகிறது.  பின் உகரச் சாரியை பெற்று அனு என்றாகும். அன்> அனு>அனுசு> அனுசன் என்று ஆகிப் பிறப்பில் ஒருவனுக்கு அடுத்து உள்ளவனைக் குறிக்கிறது.  அடுத்ததிலும் பின் உள்ளவனைக் குறிப்பது வழக்கு ஆகும். இந்த பின்மைப் பொருள் சொல்லின் உடைசல்களில் இல்லை. பயன்பாட்டில் உண்டாவதாகும்.  ஆனால்  தம்பி என்ற சொல் தம்+பின் என்ற இரண்டு துணுக்குகளின் திரிபாக இருப்பதால், பிறப்பால் பின்மை என்பது சொல்லிலேயே வந்துவிட்டது.   அனுசன் என்பதில் இப்பின்மைக் கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகின்றமையின், காரண இடுகுறி ஆகின்றது.  தம்பி என்பதிலும் இப்பிறப்புப்பின்மை முழுமையாக வந்துவிட்டதா என்றால்,  இல்லை; அது இடத்தால் பின்மை அன்று. அதாவது காலத்தால் பின்மை. இன்னும் வரிசையில் பின்னால் நிற்பவனைக் குறிக்காது; அடுத்துப் பேருந்தில் ஏறப்போவோனைக் குறிக்காது( காலம், இடம் இரண்டும்). அது ஒருதாயிலிருந்து முன் பிறந்தோனுக்கு அடுத்துப் பிறந்தோனைக் குறிக்கிறது.  ஆகவே அனுசன் என்பதில் இப்பொருண்மை இல்லையாதலால், வழக்கிலுளமை கருதி, காரண இடுகுறியே ஆகும்.

அனுசன் என்பதில் சு இடைநிலை; அன் ஆண்பால் விகுதி.

இது பின் அனுசன்> அனுஜன் என்று மாறிவிட்டது. வடவெழுத்து ஒரீஇ நோக்கின், அனுசன் என்பதே அதன் வடிவம் ஆகும்.

இராமனுக்கு அனுசன், இராம+ அனுசன் > இராமானுசன்> ~ஜன் ஆகும்.

ஜன் என்பதைப் பிறப்பு என்று கொண்டாலும், அடுத்து என்பது வழக்கினால்
பெறப்படுவதே ஆகும். அடுத்து அல்லது பின் என்பதைக் கல்லி எடுத்தற்கு
இப்படிச் செல்லலாம்:

இராம +
அன் +
உ +
ஜன்.

உ என்ற சுட்டு, பின்மையும் காட்டும். எடுத்துக்காட்டு: உப்பக்கம் என்ற
சொல்.

இதிலுள்ள பிற சிறப்புக்களைப் பின் அறிவோம்.

தட்டச்சுப் பிறழ்வு காணப்படின் பின் சரிசெய்யப்படும். 

வியாழன், 4 ஜூன், 2020

கொரனா அறிவுரைகள் மறந்தனரோ?



இடைவெளி தம்மில் கடைப்பிடி; கடனே;
மடைதிறந் தன்ன வருநோய் தடுப்பாய்;
உடுமுக ஆடை தடுசளிச் சிதறல்;
நெடுசொல வின்ன வனைத்தையும் அறிந்தோம்.

அறிந்திலர் என்பார் எவருமிங் கிலையே.
தெரிந்தன செய்ய மறுத்திடும் நிலையில்
நெரிசலில் தம்மை நுழுந்திய படியாய்
வரிசையில் நின்றார் வழக்கமே யதனால்.

நோய்க்கோர் நுடக்கம் அரசியற்றிற் றில்லாயின்
மாய்க்குவழிச் செல்வரோ சொல்.

சொற்பொருள்:


தம்மில் -  ( மனிதர்கள் ) தம்மிடை.
கடனே - கடமையே.
மடைதிறந்தன்ன - மடை திறந்ததுபோல், 
பெருந்தொகையாய்.
உடு முக ஆடை - முகக் கவசம் அணிக.
அறிந்திலர் - அறியாதார்
நெடுசொலவு -  நீண்ட உரைகள். பேச்சுகள்.
நெடுத்தல் = நீளுதல். நெடுசொலவு (வினைத்தொகை).
இன்ன - இந்தமாதிரி.
நுழுந்திய - உட்புகுத்திய

நுடக்கம் - முடக்கம்
அரசியற்றிற்றில்லாயின்- அரசாங்கம்
நடைமுறைப்படுத்தவில்லை என்றால்
மாய்க்குவழி - மாய்க்கும்வழி; தம்முயிரை
எடுத்துக்கொள்ளும் வழி. ம் ஒற்று - தொக்கது.



http://theindependent.sg/phase-1-report-card-seen-as-a-fail-by-netizens-as-crowds-gather-at-transportation-hubs/

Singapore – Members of the public questioned the effectiveness of the Post-Circuit Breaker’s Phase 1 wherein households are allowed only two visitors a day, yet huge crowds were spotted at various public transport hubs.

புதன், 3 ஜூன், 2020

பொய் சொன்னால் பிழைக்கலாம்

மெய்யொன்றே சொன்னான் இயற்கையோ தண்டித்தாள்
பொய்சொல்லிப் போனாலே வாழ்விங்கு ---- உய்வுறவே
பூமியிலே  வேண்டும் புளுகிடவே நாட்டுக்கே
நாமும் புளுகுதலே நன்று.



உண்ணாமலே இருந்துவிட்டால்.......

உண்ணாமல் இருந்துவிடில்  விண்ணாகும் வீடெமதே,
உடலங்குப் போகாது நிழல்வடிவில் அங்கிருப்போம்.

தண்ணீரைக் குடிக்காமல் முந்நாளில் முடிவாழ்வாம்
தாரணியின் பொய்வாழ்வில் காரணமாய் மகுடமுகி!

தலைமுன் புறம்மூடு தள்ளிநில்லு கைகழுவே
இலைகூடத் தரைதனிலே இருந்துவிடும் விழுந்தபின்பு

மனிதவுடல் ஆறடிக்கீழ் மரத்திலையோ மேல்தரையில்,
புனிதமிந்த வாழ்வென்று புகல்வதெலாம் பொய்தானே.

வாய்வயிறே ஒன்றாகும் மனிதருக்கும் விலங்குக்கும்
மாயும்வரை திரிந்துவிட்டு ஓய்ந்தபின்னே ஒழிந்திடுவாய்.


பொருள்


மகுடமுகி -  கொரனாவைரஸ். 

மூதாதையர் - சொல்வடிவம்.

எந்த மொழியிலும் ஒன்றைத் தவறான 
சொல், சரியான சொல் என்று வகைப்
படுத்துவதினும் 
புரியும் சொல்,
புரியாத சொல் என்று வகைப் 
படுத்துவதே ஏற்புடைத்தாகும். புரியாத 
சொற்களால் பயன்பாடு இல்லை. ஓட்டைச்
சட்டியாய் 
இருப்பினும் கொழுக்கட்டை
வெந்து எல்லோரும் உண்பதற்கு உதவுவது
 போன்றதே  சரியான சொல் 
எனலாகும்.
 புரியாத சொற்கள் எனப்படுபவையும்
ஒருசார் மக்கட்குப் புரிந்து இன்னொருசார்
குழுவினர்க்குப் புரியவில்லை எனில்,  

புரிந்தோர் புரியாதோருக்கு சொல்லிக்
கொடுத்து உதவலாம்.இதன்மூலம் 
புரிதல் விரிதல் அடைந்து பயன்
 ஆழ்ந்துசெல்லுதல் கூடும். இவ்வலைப்
பூவின் நோக்கங்களில் இதுவும் ஒன்று 
என்று கொள்க.

தாத்தா என்பது விளிவடிவம். அதாவது
கூப்பிடும்போது சொல் மேற்கொள்ளும்
வடிவம். அதன் இயல்பான வடிவம் 
தாதை என்பதுதான். இதை எழுவாய்
வடிவம் என்பர்.  எழு - சொல் எழுந்த
முதல் நிலையில்,  வாய் - அவ்விடத்து,
வடிவம் - அமைப்பு. (வடிதல் என்பது
அமைத்தல். ( எ-டு:  வேல்வடித்தல், 
செய்யுள் வடித்தல்,  இன்னிசை வடித்தல்
என்று எதை எதையெல்லாம் அமைக்க
இயலுமோ அதையெல்லாம் நன்றாகவே
வடிக்கலாம்,    சோறுவடித்தல் உள்பட.)
வடிக்கை > வாடிக்கை: எப்போதும் வந்து
வாங்கிக்கொள்ளுபடி வணிகர்கள் 
ஏற்படுத்திக்கொள்வது .  

நம் தாத்தாவுக்கு முன் பல தாத்தாக்கள்
இருந்தனர்.  தாத்தாவுக்குத் தாத்தாக்கள்
அவர்கள்.  அவர்களை எண்ணித்தான்
பார்க்கமுடிகிறது. அவர்களை நாம் அறியோம்.
அவர்களும் நம்மை அறியார். அவர்களை

அழைத்துப் பேசும் சில முறைகளை அறிந்த
ஆன்மிக ஆசிரியர்கள்
உள்ளனர் என்று
கேள்விப்படுகிறோம். யாம் சந்தித்ததில்லை.


இந்த முன்னிருந்த தாத்தாக்களைத் தாம் 
நாம் "மூதாதையர்" என் கின்றோம்.  மூ = 
மூத்த அல்லது முன்னிருந்த;  தாதை - தாத்தா'
அர் - அவர்கள்.

இப்போது சங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.
இது ஓர் உயிர்வாழ் பொருளை அல்லது 
உயிரியைக் குறிக்கிறது.  அது குடியிருக்கும்
கூட்டுக்கும் சங்கு என்றுதான் பெயர். இந்தச் 
சொல் தங்கு என்ற சொல்லிலிருந்து திரிந்தது.
தங்கு என்பதோ  தம்+ கு என்பதிலிருந்து 
உருவாயிற்று.

தான் > தன் ( இது ஒரு மனிதனைக் குறிப்பது)
இரண்டு தான் கள் சேர்ந்துகொண்டால் அவர்கள்
தம்  ஆகிறார்கள். அதாவது தாம் > தம்.

இவ்வாறு இரண்டு தம் ஒன்றானால்
அது தம் + கு
= தங்கு. இவ்வாறே ஒரு
கூட்டில் ஓர் உயிர் இருந்தால்

அது தம்+கு = தங்குகிறது.  தகரம்
சகரமாகவும்
திரியும்.   ஆகவே தம் > சம்
என்று திரிந்து " இணைந்தமை" காட்டுகின்றது.
 ஆங்கில மொழியில் இருக்கும் சம்
(கணக்குக் கூட்டுதல் ) 

என்னும் சொல்லும்  இதன் வடிப்பே ஆகும்.

தம் > சம் > சங்கு.
தம் > சம் > சங்கு >  ~+ அம் = சங்கம்.

தன் என்பதில்  0ன் என்னும் ஒற்று ( மெய்) 
ஒருமை. அது பன்மை ஆகும்போது தம்
என்று மாறுகிறது. இந்த "ம்" இருக்கிறதே,
அது தொல்பழங்காலத்தில்
பன்மை
விகுதியாய்,  "கள்" விகுதிபோல் இருந்தது.

இந்த "ம்", உம் என்பதன் முதற்குறை ஆகும். 
அவனும் இவனும் என்பதில் உம் சேர்க்கை
அல்லது இரண்டு ஒன்றாதல் குறிக்கிறது.
தான் > தம் ஆனதிலும் பன்மையே
காட்டுகிறதே. இந்த ம்-மும்

உம்-மும் மொழியில் இன்னுமிருப்பது
நமது
நற்காலமே ஆகும். அம் என்னும்
விகுதி அமைதல்
என்பதன் அடிச்சொல்
லாகவும்  சொல்லமைப்பு விகுதியாகவுமாய்
விளங்குகின்றது.


தந்தை என்பதில் அப்பனைக் குறிக்கும்
 சொல்
"தை" என்பதுதான்.  விளியில்
தா என்றாகும்.
தாத்தா அல்லது தாதை =
 தந்தையின் தந்தை ஆகும்.


சந்திப்போம். ( இதில் சம் - தம்மிலிருந்து 
திரிந்த சம் - ;  தி என்பது வினையாக்க 
விகுதி;  இதில் அடிப்படை வினையாக்க
விகுதி இ என்பதுதான்.  இங்கு, இப்போது
என்றெல்லாம் பொருள். த்  என்பது ஓர்
இடைநிலைதான். பின் விளக்குவோம்.




செவ்வாய், 2 ஜூன், 2020

பள்ளிக்குச் செல்வதோ துள்ளும் சிறுகிளிகள்?


நேரிசைவெண்பா.

துள்ளிக் குதித்தோடும் துய்ய சிறுகிளியைப்
 பள்ளிக் கனுப்புவதோ பண்ணாமோ------உள்ளந்தான்
நோய்க்கடவை தாண்டா நுடங்கு நிலையினால்
தாய்க்கப் பனுக்குச் சுழல்.




அருஞ்சொற்கள்

துய்ய -  தூய்மையான ( நோயில்லாத )
சிறுகிளி -  சின்னப்பிள்ளை, பள்ளிப்பிள்ளை.
பண்ணாமோ - பொருந்துமோ, தகுமோ-  முறையோ
கடவை - வாயிலில் உள்ள தாண்டவேண்டிய தரைத்தடை.
நுடங்கு  -  முடக்கம். நோய் ஏற்படுத்தியுள்ள தடை(நிலை.)
தாய்க்கப்பனுக்கு -  தாய்தந்தையர்க்கு
சுழல் -  (  மனச்) சுழற்சி. தீர்மானிக்க இயலாமை.


இது சிங்கப்பூரின் நிலை.  நோய்த்தொற்று வருமோ
மிகுமோ என்ற அச்சம்.இதைப் பற்றிய செய்திக்குறிப்புக்கு
இங்கே சொடுக்கவும்:-

http://theindependent.sg/ong-ye-kung-urges-parents-against-keeping-their-kids-out-of-school-as-circuit-breaker-ends/

While some parents are keeping their children home despite the reopening of schools, due to fears over the risk of COVID-19 transmission, Education Minister Ong Ye Kung has asserted that keeping students home for long will impact their development.


வாழ்க்கை என்பதில்  அச்சம் ஏற்படுவது இயற்கைதான்.
ஆனால் அச்சமே வாழ்க்கை ஆகிவிட்டாலும்  
எப்படி வாழ்வோம் இனிமேல் இப்புவியில்?
ஏதாவது ஓர் எல்லையில் அச்சம் தவிர்க்கவேண்டியதுதான்.



திங்கள், 1 ஜூன், 2020

பதுங்கிடுக வீட்டில்


பரவிவிட்ட இடங்களிலே குறைவுபட்ட தென்று
பலரும்விட்ட குளறுபடிக் கூற்றுசெவி ஏற்றி
உறவினரை உறுதோழர் தமைத்தேடிச் சென்றே
ஒளிந்திருந்த நோயணுவைச்  சுமந்துவிரி கூட்டித்
திறமுணர மாட்டாத தேய்மதியால் தன்னைத்
தேறுவழி இல்லாத நோய்வாய்க்குள் தள்ளிப்
பரமனடி போய்ச்சேரும் வரம்வரவே வீழ்ந்து
பாழ்படவும் துணிவீரோ பதுங்கிடுக வீட்டில்.

( ஒரு தோழிக்குப்  புத்திமதி )


பொருள்:

பரவிவிட்ட இடங்களிலே - ( மகுடமுகி என்னும் நோய்நுண்மி (வைரஸ்) த் தொற்று விரிந்துள்ள தலங்களில், குறைவு பட்ட தென்று - அதன் தாக்கம் குன்றி விட்டது என்று,

பலரும் விட்ட குளறுபடிக் கூற்று - வதந்திகள் பரப்புவோர் வெளியிட்ட குழப்படியான பேச்சு,

செவி ஏற்றி - காதில் வர, அதை மனத்துள் மேற்கொண்டு,

உறவினரை உறுதோழர் தமைத்தேடிச் சென்றே-  சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும்
இருக்குமிடம் கண்டு போய்ப்பார்த்து,

ஒளிந்திருந்த நோயணுவை சுமந்துவிரி கூட்டித் - தன் அறிகுறிகளை வெளியிற் காட்டாமல் உடலுக்குள் மறைவாக இருந்த கிருமிகளைப் போய் தன்னுடலில் ஏற்றிக்கொண்டு நோயின் பரவலை விரிவாக்கி,

திறமுணர மாட்டாத தேய்மதியால் - நிலைமையை ப் புரிந்துகொள்ளாமல்அறிவுக்கூர்மை இன்மையால்,

தன்னைத் தேறுவழி இல்லாத நோய்வாய்க்குள் தள்ளி- 
தன்னை, மீளமுடியாத நோய்த்தொற்றில் மாட்டிவிட்டுக்கொண்டு,

பரமனடி போய்ச்சேரும் வரம்வரவே- நோய் முற்றி மரண இடர் நெருங்கவே,
வீழ்ந்து பாழ்படவும் துணிவீரோ பதுங்கிடுக வீட்டில். - இறக்கவும் துணிச்சல் கொள்ள முனைவீரோ, வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே இருந்துவிடுங்கள்.

ஞாயிறு, 31 மே, 2020

18ம் பெற்றுச் சிங்கப்பூர் வாழ்க!


கொரனா நோய் குறைந்து நலம் சிறந்தமைக்கு வாழ்த்து.

ஏறு  முகம்கண்  டிருப்போர்  வதைத்த 
வீறு மிகுநோய் முடியுரு  நுண்மி
சீறு விரைவைச் சிதைத்தசிங் கப்பூர்
ஆறு உறழ்மூன் றனைத்தும் பெறுமே.


ஏறுமுகம் கண்டு ---  எண்ணிக்கையில் கூடிவந்து,
இருப்போர் வதைத்த --- குடிவாழ்நரைத் துன்புறுத்திய,
வீறு மிகுநோய் ---  உறுதியுடன்  பற்றுதிறமும் மிக்க நோயான
முடியுரு நுண்மி ---  கொரனா வைரஸ் நுண்மி,
சீறு விரைவை  ---- எதிர்த்துக் கிளம்பும் வேகத்தை,
சிதைத்த சிங்கப்பூர் --- தடுத்து மாற்றிய சிங்கப்பூர்,
ஆறு உறழ்மூன்று --- பதினெட்டுப் பேறுகளையும் (பாக்கியங்கள்),
அனைத்தும் பெறுமே --- எல்லாவற்றையும் பெற்று உயரும்.
முன் கூறிய 16 செல்வங்கள் ஒரு நாட்டுக்கு ஏற்ற
மாற்றங்களுடன் அமைவதுடன், நிலையான ஆட்சியையும்
ஊழலற்ற அமைச்சர் பெருமக்களையும் அடைந்து
ஓங்குக என்றவாறு.
என்று சிங்கையை வாழ்த்துகிறது இக்கவியின் வரிகள்.
வாசித்து மகிழ்வீர்.



சனி, 30 மே, 2020

மந்திரியும் மினிஸ்டரும்.

இதுகாலை நாம் மினிஸ்டர் என்ற ஆங்கிலச் சொல்லையும்
 மந்திரி என்ற தமிழையும் பற்றிச் சிறிது சிந்தித்து 
உரையாடுவோம்.

இப்போது கடைத்தெருவில் போய் "மினிஸ்டர்" என்ற 
சொல்லை நாம் பலுக்கினால் எல்லோரும் அரசில் மிகப்
பெரிய பதவியில் இருப்பவரைப் பற்றித்தான்  ஏதோ
சொல்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். 
உண்மையும் அதுதான். ஆனால் இந்தச் சொல்
 " மைனர் " " மைனஸ்"என்ற சொல்லிலிருந்துதான்
 அமைந்தது என்பது, பலர் முன் படித்துஅறிந்திருந்
தாலும் அந்தச் சமயத்தில் அது நினைவுக்கு வராமல் 
போய்விடலாம்.   மந்திரி என்ற ஒருவர் நம் 
வட்டாரத்துக்குள் வருகின்றார் என்றவுடன், 
 அவருக்குப் பாதுகாப்புத் தருவதற்காக எத்தனை
காவலர்கள், மேலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முன்னர்
 வந்துஆங்கு நின்று பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்
கிறார்கள்? இவ்வளவும்பார்த்துவிட்ட நாம் அவரை 
மைனசுடனும் மைனருடனும் ( சிறு அகவையர்) தொடர்பு 
படுத்தமுடியுமா?

படிப்பு வேறு, நடப்பு வேறு. படித்ததெல்லாம் 
பயன்படுவதில்லை. என்னத்தைத்தான் 
படித்திருந்தாலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி
ஓடவில்லை என்றால், நாம் தாளம்போட்டுக்கொண்டு 
காத்துக்கிடக்கவேண்டியுள்ளது.

1300வது ஆண்டு வாக்கில் அது கிறித்துவ மதப் பூசாரி
 ஒருவரின் உதவியாளரையே குறித்தது.  அப்போது இந்த
 "மினிஸ்டர்" என்றசொல்லுக்கு  பூசாரிக்குதவி என்றுதான் 
அர்த்தமாக இருந்தது. மக்கள் அப்போது "மினிஸ்ட"ரைப் 
பெரியவராகக் கருதவில்லை; உத்தரவுக்கு
உட்பட்ட கீழ்ப்பணியாளர் என்றுதான் நினைத்தனர். 
அதுவே அப்போது மினிஸ்டர் என்பதற்கு அர்த்தமாகும்.


பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் "மினிஸ்ற்றல்" 
என்ற பாடகர்கள்குறிக்கப்பட்டனர். மினிஸ்டர் என்பதும்  
மினிஸ்ற்றல் என்பதும் சொல்லமைப்புத் தொடர்பு உடையன 
என்று இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  
அந்தக் காலங்களில் பெரும்பாலான சிறிய உதவியாளர்கள்
 பூசைகளின் போது பாடிப்பாடி அருளோ மருளோ வரும்படி
 செய்து வணங்கி நின்றோரை அசத்தினர் என்பதே உண்மை.

உலகெங்கும் இறைப்பாடகர்கள் வாயிலின்முன் நின்று பாடி பொருளுதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.  தமிழில் முன்
 என்பது வேறு. மின் எனற்பாலது வேறாகும்.  ஆனாலும்
 பேச்சு வழக்கில் முன் என்பது பலரால் மின் என்று ஒலிக்கப்
பெறுகிறது.  வாழைப்பழமா? அந்தக் கடைக்குப் போங்க, அங்கே 
மின்னே தொங்கும் எனப்படுதலைக் கேட்டிருக்கலாம். 

மினிஸ்டர் என்பது ஆங்கிலத்துக்கு   Old French menistre என்பதிலிருந்து  வருகிறது.  அது இந்தோ ஐரோப்பிய
 மூலத்தில் மெய் என்பதிலிருந்து புறப்பட்டதாம். இதன் 
மூலப்பொருள் சிறியது,  சிறுமை என்பதாம்.  தமிழில் மெய்
 என்பது உடல் என்று பொருள்தரும்.  உடல் என்பதோ சிறியது.
   இது சின்மெய் ( சின்னதான மெய் அல்லது உடல் ) என்பதனுடன்
 உறவு கொண்டது.  இரண்டு மயங்கள் உண்டு. ஒன்று  அகண்ட 
மயம் அல்லது மையம். இன்னொன்று சின்னதான உடல்
 என்னும் மையம் அல்லது மயம். (சின்மயம் ). உடல் 
சிறிதானால் அதன் அகத்துப் பெரிதாய் இலங்குவது  எது?
  அது அகண்ட பெருவெளியில் உள்ள பெரியோனுடன் ஒரு 
தன்மையினது ஆகும்.  எவ்வாறாயினும், அகத்து
இருப்பது பெரிது.  அகத்து மா - உள்ளில் உடலினும் பெரியது.  
 அகத்துமா > ஆத்துமா. ( ஒ.நோ:  அகத்துக்காரி > ஆத்துக்காரி ). 
 இந்த அகத்துள் இருக்கும்  பெரியது மிக்க அகன்றது.  எல்லையற்ற அகல்வுடன் ஒருதன்மையது. ஆகவே உண்மையில் அது 
அகல்+ மா = அகன்மா>  ஆன்மா ஆகும்.  (  அகல் மரம் > ஆல் மரம் >  ஆலமரம்.  அங்கு அமர்ந்திருப்பார் ஆலமர் கடவுள் ).

சிறிதான இம்மெய்யை சிறிதென்றே இந்தோ ஐரோப்பியம் 
கூறுவது,  பழுதான் மெய்யைப் பழுதென்றே தமிழ் பெயரிட்டது
 போலுமே ஆகும்  பழுது என்பதன் இன்னொரு பொருள் இம் மெய்.

வீட்டின் முன் நின்று பாடிப் பெறுபவர் மினிஸ்ற்றல்.   
மின் நிற்றலும் (  அதாவது ) :  முன் நிற்றல் > மின்நிற்றல் > : ~  
மின்நிற்றலில் பாடிச் சேவை செய்பவர்.  சிறியவர்.

சிறியாருலகிலிருந்து பெரியவரானவர்தான் மினிஸ்டர் 
என்னும் மந்திரி.

எதிலிருந்து எது வந்தது நாம் சொல்லவில்லை.  பெரியது எது? 
சிறியது எது?சிறியதே பெரியதானதே என்பதுதான்,


இதையும் வாசிக்க விரும்பக்கூடும்:

https://sivamaalaa.blogspot.com/2016/02/murder.html    : போற்றியும் பூசாரியும்.


உடல்நலம் காக்க.
முகக்கவசம் அணிக. இடைவெளி போற்றுக.

நலமுண்டாகுக


தட்டச்சுப் பிறழ்ச்சிகள் திருத்தம் பின்..

வெள்ளி, 29 மே, 2020

ஓச்சர் என்ற சாதிப்பெயர்

இச்சொல்லின் பிறப்பை அறிதல் இயல்பே.

ஓச்சர் என்போர் பூசாரிகள். இச்சொல் உவச்சர் என்றும்
வழங்கும்.


ஓச்சம் என்பது பதிற்றுப்பத்து  (வெவ்வர் ஓச்சம் பெருக...41.20)
 முதலிய நூல்களில் காணப்படுகின்றது. இது ஓங்குதல் என்ற
சொல்லுடன் தொடர்புடைய சொல்லே.

ஓச்சம் - உயர்வு.

செங்கோல் ஓச்சுதல் என்ற வழக்கும் உளது.


உவ என்பது முன்னிருத்தல் என்னும் பொருள் உடையதாதலின்
உவ + சு + அர் = உவச்சர் என்று அமையும்.  சு விகுதி.  அர் என்பது
பலர்பால் விகுதி.

உவ + அச்சர்  என்று பிரித்து,   முன்னிருக்கும் தந்தையர் என்றும்
பொருள்கூறுதல் பொருந்துவதே ஆகும். அப்பன் - அச்சன் - அத்தன்
என்பன சொற்போலிகள்.

புதன், 27 மே, 2020

இன்று ஐந்நூற்று முப்பத்து மூன்று.

சிங்கப்பூர் நிலையை உன்னிப்
பாடிய எண்சீர் விருத்தம்.




இன்றுமட்டும் ஐந்நூற்று முப்பத்து மூன்றாம்
இணையற்ற நல்லோர்க்கு முடியுருவித் தொற்று.

என்றுமுற்றும்  பின்மீண்டிங் கில்லையென வாகும்
இனிதான நன்னிலையாம் தனியின்ப முற்று.

கொன்றுகுவித் துப்புவியின் மக்கள்பெரு வாழ்வைக்
கூழாக்கி மாய்த்திட்ட பாழான கொல்லி

என்றுமிருந்  திட்டதிலை என்பேனே வேண்டாம்
எளியோர்க்கே இதுதந்த எய்த்துழல்வை உள்ளி.




பதப்பொருள்

சொல்லில்தான் பொருளானது பதிந்துள்ளது.
அதனால் அது பதமெனப் பட்டது.

பதி  + அம் = பதம்.
தி  என்பதில் உள்ள இகரம் கெட்டது ( மறைந்தது).
அம் என்பது அமைவு, அமைப்பு என்பன குறிக்கும் விகுதி.
மிகுந்து பொருள்கூட்டுவது விகுதி.  மிகுதி> விகுதி.
மிஞ்சு > விஞ்சு என்பது போலும் திரிபு.

முடியுருவி( னி ) -  முடியின் உருவில் அமைந்த கொரனா
(கோவிட்19) நோய்நுண்மி, (வைரஸ்)

முற்றும் -  தீரும்.

பின்மீண்டிங்கு - இனிமேல் இங்கு

கூழாக்கி - திடத்தன்மை நீக்கிக் குழைவு  ஆக்கி

கொல்லி -  கொன்றிடுதலை நோக்கமாகக் கொண்டது.

என்றுமிருந்  திட்டதிலை - முன் அறியாத ஒன்று.

எய்த்துழல்வு -  துன்பநிலை.


நோயிலிருந்து தப்பும் வழிகளை விடாப்பிடியாகப்
பின்பற்றுங்கள். அரசு ஓரளவுதான் உதவமுடியும்.

இதோ இன்னொரு கவி உங்களுக்கு:

விடுதிகள் தங்குவோர் விட்டிலர் தாம்தமக்குள்
இடைவெளி  அன்னதால் இத்துணை நோய்ச்சீற்றம்
படுதுயர் கேட்டவர் பாகினைப்  போலுருகக்
கடினமே நாட்டிலிக் காலம் செயலறியோம்.


இது அடிதோறும் வெண்டளையாகவும் அல்லாதவிடத்து
வேற்றுத்தளையாலும்  அளவடிகளால்  புனையப்பெற்ற பாடல்.


பதப்பொருள்

விட்டிலர் - விடவில்லை.
அன்னதால் - அதனைப்போல் காரணங்களால்
படுதுயர் - படும்துயர்.
செயலறியோம் - என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.
கடினமே - கடுமையான நிலையே.

தட்டச்சுப் பிறழ்ச்சிகள் பின் சரிசெய்யப்படும்
இப்போது எதுவும் காணப்படவில்லை.
இன்று இடுகை புதுமுகத்துடன் வருகிறது
என்று அறிகிறோம். மென்பொருட் பின்னடைவுகள்
இருந்தால் பின்னூட்டம் இடுக, அல்லது
மின்னஞ்சல் அனுப்புக.

நன்றி. வணக்கம்.






செவ்வாய், 26 மே, 2020

நீண்ட கருத்தைக் குறுக்கிச் சொல்லாக்கும் தந்திரம்.

பல சொற்கள் பல நீண்ட கருத்துகளை உள்ளடக்கியவை.
இவை போல்வனவற்றைக்  குறுக்கி ஒரு சொன்னீர்மை அவை 
பெறும்போது சில தொல்லைகள் விளைவதுண்டு என்பர். 
வகுப்புகளில் வாத்தியார்கள் மணாக்கருக்கு எளித்தாக்கி 
விளக்கும்போது "நாற்காலி" என்ற சொல்லை முன்வைப்பது
வழக்கம்.  "நாய்க்கும்தான் நாலு கால்கள்;  அது நாற்காலி 
ஆகுமா?"என்று வினா எழும். இதுபோன்ற சொற்களுக்கு  
அமைப்புக் காரணம் உண்டெனினும் காரணங்கள் ஓர் 
எல்லைக்குட்  பட்டவை. நாற்காலி நாயைப்போல் குரைக்காது.

நாய்க்குப் புதுப்பெயர்.

குரைத்தல்தான் மிக்க முன்மை வாய்ந்த கருத்து என்பதால்
அதைத் தவிர்த்து ஒரு புதுப்பெயரைச் சொல்லாக்கம் செய்ய 
இயலாது என்று ஒரு முடிவை எட்டிவிட்டால் நாயைக் 
குரைக்காலி என்றுதான் சுட்டவேண்டும்.ஆனால் பட்டினப்பாலை
பாடிய சங்கப் பெரும்புலவர் அதன் கூரிய நகமே முன்மைத்
தன்மை உடையது என்று சொல்வார் போலும்.

குரைக்காலி:   ஒரு புலவர் இங்கு "க்" மெய்
வரக்கூடாது என்பார்.  வினைத்தொகை வடிவில் "குரைகாலி"
என்றுதான் சுட்டவேண்டும் என்பார்.  சொல் அமைத்தவர் இது
வினைத்தொகை அன்று; முதனிலைத் தொழிற்பெயர் என்பார்.
தொழிற்பெயர் இன்னொரு சொல்லுடன் புணரும் பொழுது க்
வரலாம்.  இப்போதெல்லாம் இலக்கணம் என்பது ஒரு தனிப்
பாடமாக இல்லையென்பதால் பலருக்கு இது தொல்லையாவ
தில்லை..

நாய்க்குப் பின் உள்ள கருத்து

நாய் என்ற சொல்லில் காரணம் தெளிவாய் இருக்கிறது. 
நாயில் புறவுறுத்து* ஆவது கால் அல்ல.  அது நாவுதான். 
அது நாவைத் தொங்கவிட்டுத் திரியும் விலங்கு. நா > நாய். 
 அதனால் பெயர் சரியானது என்று வாதிடலாம். 
பழைய பெயர் ஞமலி. மலையாள
மொழியில் பட்டி. இதுவும் தமிழில் முன் வழங்கிய 
சொல்லாதலால் நிகண்டு அகரவரிசைகள் முதலியவற்றில்
 உள. இன்னும் தமிழில் குக்கல் (போலி : குக்கர்), 
தெலுங்கு: குக்கா. தமிழன் நாய் 
லொள்லொள் என்று குரைக்கிறதென்பான். சீனன் 
அது காவ்காவ் என்று குரைக்கிறது என்று நினைத்து
நாய்க்குக் காவ் என்று சொல்கிறான். அது 
பௌவௌ என்று குரைப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
நாம் சொல்லவருவது என்னவென்றால், நாய் என்பது 
ஒரு நீண்ட கருத்தை உள்ளடக்கி அமைந்த ஒரு சுருக்கமான
 சொல். நாவு > நாய்.இது மொழிநூலார் கருத்தாகும்.


கருத்தைக் குறுக்கி அமைத்த சொற்கள்

ப்போது இவ்வுலகில் இருந்த பலர் கொரனாவால்
இறந்துவிட்டனர். அத்துடன் கொசுக்கடிக் காய்ச்சலும் 
பன்றிக் காய்ச்சலும் ஆங்காங்கு  கலந்து உலவுகிறது.
கடைக்குப் போன இடத்தில் தொற்று ஏற்பட்டு எமக்கு
ஒருகண்ணில் வலியும் கொஞ்சம் ஏற்பட்டுள்ளது.  
மருத்துவரைப் போய்ப் பார்க்கவேண்டியதாயிற்று.
நோயில் வானுலகு சென்றோரை எண்ணி மனம் வருந்துகிறது.
இங்கிருந்து நீங்கியவர்கள் என்ற பொருளில் ஒரு சொல்லை 
அமைக்கவேண்டும் என்று எண்ணினேம். அதற்குமுன் அதே
காரணத்திற்காக முன் நம் மூதாதையர் அமைத்த ஒரு சொல்
நினைவுக்கு வந்தது.  அப்படியாகவே, அந்தச் சொல்லை இங்கு
வழங்கி மனத்தா  னினிது அமையலாகுமென்ற  ஒரு முடிவை
எட்டி அமைகின்றனம்.

சொல்: இலேகர்.
தமிழ்ச்சொல் தான்.  எப்படி?
இல் =  இடம்.  (கண்ணில், மண்ணில் :   இல் இடம் 
குறிக்கும்). ஏகு = எங்கோ  போதல்,  நீங்குதல்.
அர் =  அவர்கள்.  (படர்க்கைச் சொல்.  அ+ அர் = அவர், வ்
என்பது வகர உடம்படு மெய், அவர் என்பதில் இரண்டு 
அகரச் சுட்டுகள் உள்ளன. அத்தனை தேவை
இல்லை என்றாலும் சொல்லமைப்பில் இன்னொரு
 சொல்லை அமைக்கச் சேர்த்துக்கொண்டு " அவர் " 
என்பதில் தவறில்லை. மொழிவளர்ச்சிக்குச் சில 
விலக்குகள் வேண்டும்.

இலேகர் என்ற சொல் இங்கிருந்து போய் விட்டவர்கள் 
என்ற கருத்தைச் சுருக்கி  ஒரு சொல்லாக அமைகிறது,
என்னே மொழியழகு.

எ ( எங்கு) + கு ( சேர்விடம்)  = ஏகு (வினையாக்கம்) > ஏகுதல்.
எங்காவது போய்ச் சேர்வது அர்த்தம்,   எ என்னும் வினாச்
சுட்டின்'  முன் வடிவம் ஏ தான்.


ஒரு திரைக்கவியாவது ஏகுதல் என்ற சொல்லைப் பயன்
படுத்தியுள்ளார்.  அவர் கம்பதாசன்,  "மோகினியே காதல்
ராகினியே ஏகாதே " என்றும்  " மன(த்)தில் மெய்க் காதல்
......கொண்டேகுவேன்" என்றும் எழுதி இச்சொல்லை
வழக்கில் வளரவிட்டுள்ளார். 


இங்கிருந்து எங்கோ போய்விட்டவர்கள்தாம்  இலேகர்.

வானிற் புகுந்திருக்கலாம்.
தவறு இல்லை. இது நீட்சி குறுக்கி அமைந்த சொல்.

தமிழ் மொழியமைப்பில் உலக மொழியாதலால்,
தமிழில் ஒன்றைச் சீனமொழி போலவும் சொல்லலாம்.
" நாய் வாய் தேய், போய் மாய்!"  என்பது சீனமொழிபோல்
இருக்கிறது. சில சொற்களும் அயல் ஒலி போல் 
ஒலி பெறலாம். இப்படி ஒலியில் இலேகர் என்பது 
போலி அயல் ஒலி உடைய சொல். ஒரு சொல்லில்
சில பொருள்கள் எடுபடுவது சில+ எடு + ஐ = சிலேடை
ஆகும்.  எடு+ ஐ = ஏடை என்பது முதனிலை நீண்ட
தொழிற்பெயர்.  சில என்பது சில் ஆகும், சில்+ நாள் 
= சின்னாள். சில்+ஏடை = சிலேடை. 

சின்னேரத்தில் வந்து சொல்லாடுவோம்.


எழுத்து தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்

* இது திருத்தம் பெற்றது. 07012021











ஞாயிறு, 24 மே, 2020

ஒரு கேள்வி: சொக்கட்டான் என்ற சொல் எப்படி வந்தது?

இவ்விடுகையின் பின் சொக்கட்டான் என்ற சொல் எப்படி
வந்தது என்பதைத் தெரிவியுங்கள். (பின்னூட்டம் இடவும்)

வீரியம் என்பது ( மற்ற விளக்கத்துடன்.)

விர் என்ற சொல் விய் என்று திரியும். இதனை மனப்பாடம் 
வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அடிப்படைகள்
சிலவற்றை மனனம் செய்து கொள்ளுதல் இன்றி-
யமையாதது ஆகும்.

விர் விய் என்று மாறுவதற்கு இன்னோர் உதாரணம்
தருக என்றால், நாம்   அர் - ஐ என்பதை மேலுறுத்தலாம்.
 அர் என்பது ஆர் என்று நீளவும் செய்யும். இஃது
முதனிலைத் திரிபு.

அர் எப்படி ஆர் என்று நீளும் என்பவருக்கு, இனி
 ஓர் எடுத்துக்காட்டினைத் தரவேண்டும்.  அப்போதே
அவருக்குப் புரிதல் உண்டாகும்.

அர் >  ஆர்.    வந்தனர் ( அர் ) >  வந்தார் (ஆர்).
இர் > ஈர்.       இரு முறை  >  ஈரடி.   இங்கு உயிர்
முதலாய் வந்த சொல்முன் ( அடி )   திரிந்தாலும், (இரு
ஈர்  என்று .....)
அதுவன்று காணத்தக்கது;   சந்தித்  திரிபு என்று ஒதுக்க
வேண்டாம். 

இர் > ஈர் எனத் திரியும்.

கவிதையில் ஏற்றவிடத்து உயிர்முன் திரியாமலும்
 உடம்படுமெய் பெற்று வரும்.  எ-டு:    ஒரு +  அந்தம் >
ஒருவந்தம்.  ( ஓரந்தம் என்று வரவில்லை). கவிதையில், சொல்லமைப்பில்போல ஏற்றவிடத்துத் திரியாமல்
போற்றப்படும்.  பெரு + அளவு  = பேரளவு,
அப்படியானால் பெருமளவு என்பது அமைந்த
தெங்ஙனம்? பெருமளவு என்பதும் வழக்கில் உள்ளது.

பெரு என்ற சொல்லும் பேர் என்று திரிய,
பெயர் என்ற சொல்லும் பேர் என்று திரிவதால்,
பேரளவு என்பதைச் சிலர் விரும்பவில்லை போலும்.

பெருமை + அளவு >  பெரு + அளவு > பேர் +
அளவு > பேரளவு. பெருமை + அளவு >
 பெரும் + அளவு > பெருமளவு.
( மை விகுதியில் ஈற்று ஐ வீழ்ந்தது.)

பெய் > {பெயர்}.
பெய் > பெர் >{ பேர்.} ( இடுதற்கருத்து )
விய்  >  விர்>{  விரி }  ( விரிவுக்கருத்து. )

பெயர் என்பது ஒரு வினையினின்று தோன்றி,
அர் ஈறு பெற்றபின், மீண்டும் வினையாகும்.
பெயர் > பெயர்தல்.  [அதாவது பெருண்மையைப்
பொருந்தியவகையில்,  பெயர்தல் என்பது  ஒன்று
மாறிப்போதல்/மாற்றி இடுதலைக் குறிக்கின்றது.
 இன்னொருமுறை நகர்தல்-இடுதலே பெயர்தல் >
பெயர்த்தல். தன்வினை பிறவினை -
தானமர்தல் அன்றிப் பிறனால் அமர்த்த~ல்  / ~ப்படுதல்;
மற்றபடி பொருள் தரையில் இருத்தலை அடைதலில்
வேறுபாடின்மை அறிக. திரிபு ஆய்வுக்கு இதன் விளக்கம்
தேவையில்லை ]

( மேலே சுருங்கச் சொல்லியிருப்பதால் கவனித்து
உணரவும். )

சரி, இனி வீரியம் என்ற சொல்லை ஆய்வோம்,.
விர் என்பது விரிவுக்கருத்து ஆதலின்,  விரி + இயம் =
வீரியம் என்பது முதனிலை திரிந்த தொழிற்பெயரே
ஆகும்.  அதாவது, ஒன்று விரிவு படுதல். அது மன
 உணர்ச்சியாகவும் இருக்கலாம். உடலுரமாகவும்
இருக்கலாம்.  அடிப்படைக் கருத்து விரிவு.

ஒன்று விரியும்காலை, அவ்விரிவில் உள்ளுறைவுகள்
மிகுதியாய் வேண்டப்படலாம். எ-டு: சாலை
விரிவாக்கத்தில் மண், கல் முதலிய தேவைப்படுதல்
போல். கல்வி விரிகையில் மிகுந்த நூல்களை
வாயிக்க (வாசிக்க) நேரலாம், குருவிடம் பாடம்
கேட்க நேரலாம்.

வீரியம்போல் திரிந்த இன்னொரு சொல்:
காரியம் என்பது.

கரு + வி = கருவி.
கரு + இயம் = காரியம்.

கர் என்பது கையைக் குறிக்கும் அடிச்சொல்.
கர்  > கரம்.
கர் > கரு > கார்
ஓ.நோ: வர் - வர்றாள், வருவாள். வாராய்.
இலக்கிய வடிவம்:  நீ வரினே, யாம் செல்வோம்.  வர்>
வரின். (வர்+ இன்).

அடிச்சொற்கள் மட்டும் பட்டியல் , விளக்கத்துடன்.

கர் > கை அல்லது கை > கர். ( கை > (கைர்) > கர்.)
அல்லது :  கர் >< கய் ( கை )
ஒப்பு நோக்குக: :
விர் > விய்
அர் > ஐ
மர் >< மை ( மரித்தாரைக் கிடத்தும் இடம் மையம், )
மர் > மரி; மை> மையம்.  மை <> மாய்.

இவற்றின் திரிபு வகை அறிக.
குறிப்பு: மையம் என்பதற்கு வேறு பொருளும் உள.

கை; கைக்கு உதவும் பொருள் கருவி.  தொடர்பு அறிக.
கர் > கரு > கருவி.
கை செய்வது காரியம்.
கர் > கார் > காரியம்.

 இரண்டும் இணைந்தால் ("கைக்காரியம்"
என்றால் " ) சிறு காரியம் என்பது.

அர்  > ஐ.
வந்தனர் > வந்தனை.  (படர்க்கைப் பன்மை, முன்னிலை ஒருமை.)
உறவு அறிக. நுண்பொருள் வேறுபாடு).


விரைவுக் கருத்தும் விர் அடியினதே. பின் விளக்குவோம்.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் திருத்தம்.


சனி, 23 மே, 2020

அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட கொரனா நோய்நுண்மிச் (CNA ) செய்தி


ஒரு தட்டச்சுத் தவறும் விளைவுகளும்


சில வேளைகளில் ஒரு தட்டச்சுத் தவறுகூட பெரிய பொருட்
பிறழ்ச்சிகளையும் உரைமுரண்பாடுகளையும் ஏற்படுத்தக்
கூடும் என்பதற்கு "ஆசியச் செய்தி ஒளிவழி" ( சேனல் நியூஸ்
ஏசிய ) ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி எடுத்துக் காட்டாக
அமைந்துவிட்டது.

இதைச் சிங்கப்பூர் இணைய தள வெளியீடான " சார்பின்மைச்
செய்தி இதழ்" ( The Independent Sg )  நன்கு தெரிவிக்கிறது.

இதனை இங்கே சென்று வாசித்துப் பாருங்கள்: நல்ல நகைச்
சுவையும் இங்குக் கிட்டும்:

சொடுக்கவும்:
http://theindependent.sg/its-definitely-not-shits-cna-broadcast-gets-people-talking/


அதிபர் டிரம்ப் என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

வியாழன், 21 மே, 2020

வீட்டுக்குள் இருப்பீர் இடைவெளி போற்றி நோய் தடுப்பீர்.


(கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வீட்டுக்குள் இருந்திடுங்கள் வேதம் ஈதாம்
விலகி இடை வெளிவிட்டால் நலமே மீதம்
கோட்டுக்குள் இருந்திருந்தால் சீதா அன்னை
கொல்வினைசேர் இராவணன்பேர் சொல்லும் இன்னல்
ஏட்டுக்குள் ஏறிடாதே  கூட்டுள் ஆவி
இந்நாளில் தீமைதவிர்த் தாலே மேவும்
பாட்டுக்குள் பதிந்திருங்கள் படிப்பில் ஆழ்வீர்
பாரியைப்போல் சீர்மிகுத்துச் சிறக்க வாழ்வீர்.



பதவிளக்கம்:

வேதம் -  கடைப்பிடிக்க வேண்டிய  விதிமுறை
 ஈதாம் - இதுவாம்
மீதம் -  உண்டாகுமென்பது
கோட்டுக்குள்:  கட்டுப்பாட்டுக்குள்.
ஏட்டுக்குள் ஏறிடாதே - இலக்கியமாகி இருக்காது.
மேவும் -  வந்து சேரும்.
கூட்டுள் - உடம்பில்
ஆவி - உயிர்

ஓரே எழுத்துச் சொல் - பொருள் ஒன்றாதல்.

ஒன்று சேர்தல் என்பதற்கு ஒரே எழுத்தால் தமிழில் ஒரு சொல்லைத் தருக என்று யாரேனும் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

அந்தச் சொல் "கு" என்பதுதான்.

இந்தக் கு என்ற சொல்லைத் தமிழன் கண்டுபிடித்துப் பேசிய காலம், மனிதன் காட்டுவாசியாகவோ குகைவாசியாகவோ இருந்த தொல்பழங்காலம் ஆகும். காரணம், "ஓரெழுத்து ஒருசொற்கள்" தமிழில் இன்னும் சிலவே உள்ளன.

எடுத்துக்காட்டு:-

ஆ.  இந்த ஆவென்னும் சொல் பசு என்று பொருள்படுகிறது.  தமிழனுக்குப் பசுவுடன் அல்லது ஆவுடன் உள்ள தொடர்பு, தமிழ் உருவாகத் தொடங்கிய நெடுமுற் காலமே ஆகும்.  அக்காலத்தினைப் பற்றி நம் அறிவினால் ஒன்றிரண்டை அறிந்துகூறலாம். அந்நிலை கடந்து மிகுதியாக ஒன்றும் நாம் கூறுதற்கில்லை. ஏன் பசுவை ஆவென்று சொன்னான் என்பது அறிய இயலாமல் இருக்குமானால் அச்சொல்லை  இடுகுறிப் பெயர் என்றே இலக்கணம் கூறும்.

பூ என்ற சொல்லும் ஒரே எழுத்தால் ஆன சொல்தான். ஆகவே தொல்பழந்தமிழன் பூவை அறிந்த காலம் நினைக்கவும் இயலாத பழங்காலமே. பூத்துக் குலுங்குங்கால் அதை நோக்கி  " இவ்வளவு அழகா?" என்று வியந்து பாராட்டிக்கொண்டு "பூ!" என்றுஓசையிட்டிருந்தால், அது வியப்புக் காரணமாக வந்த பெயர் என்று சொல்லலாம்.  ஆனால் இக்காரணம் பலரும் ஒப்பமுடிந்த காரணமாக இருக்கவேண்டும். தமிழில் பூத்தல் என்பது வினைச்சொல்லாகவும் இருக்கிறது. இந்நிலையில்  இது பல்பொருளொரு சொல்.  மலர் பூத்தது என்று வாக்கியமாவது மட்டுமன்று; தோன்றுதல் என்றும் பொருளாகும்:  நிலவு பூத்த இரவு,  கண் பூத்துப் போயிற்று என்றெல்லாம் வழக்குண்மையால், இச்சொல்  பல்வேறு வகைகளில் பயன்பாடு காணும் சொல்லாகும். பாருங்கள்:

காத்திருந்து கண்கள்
பூத்துப் போனதடி,
கையினில் வேலேந்தி
மயிலினில் வருவானென்று   (காத்.)

என்று தமிழிசையில் பாடல் வருகிறது.

பூமியும் தோன்றிய ஒன்றே என்ற பொருளில்  "பூ+ம்+இ" என்று  வந்து தோன்றுதற் பொருளும் தருகிறது.   ம் - எழுத்திடைநிலை; இ என்பது விகுதி ஆகும். நெஞ்சில் பூத்த எண்ணம்,  வானில் பூத்த நிலா ---- என்பவெல்லாம் தோன்றுதல் கருத்தே.

கு என்பதற்கு வருவோம்.  கு என்பது ஒன்றுசேர்தல் பொருள் உடையது. இப்பொருளில் அது வேற்றுமை உருபாகவும் வருகிறது.

மதுரைக்குச் சென்றான்.  ( மதுரை சேர்தல் பொருள்)
கண்ணுக்கு மருந்து இட்டான்.  ( கண்ணிற் சேர்தல் பொருள்).
முகத்துக்குக் கவசம் ( இதுவும் அது).

பொருளில் இஃதே அவற்றோ ரன்ன  என்று  நூற்பா ( சூத்திரம்) செய்திருப்பார் தொல்காப்பியனார்.

இந்தக் கு என்பது சொற்களிலும் பதிவுகண்டு இலங்குவதாகும். இவற்றை நோக்குக.

குவிந்த நெல் -----    குவி என்பது நெல் ஒன்றுசேர்ந்திருத்தல் குறிக்கிறது. இங்கு கு என்பதே சொல்.  வி என்பது வினையாக்க விகுதி.  அவி, தவி என்பனபோல். அன்றி வி என்பது பிறவினை விகுதியுமாகும்.  அறிவி(த்தல்)  காண்க.

குப்பை.  (கு + பு+ ஐ).  இங்கு பு, ஐ என்பன விகுதிகள். வேண்டாதவை, வீசப்பட்டவை ஒன்றுசேர்தல் கருத்து.

குப்பம் (கு + பு+ அம் ).  ஒன்று சேர்தல் குறிப்பு.  மக்கள் சேர்ந்து வாழிடம்.

குவை . (கு + வை).  குவியல்.  இங்கு வை என்பது விகுதி.

கு  > குடு.அடிச்சொல்.

குடு > குடி. (  நீரை வயிற்றுள் சேர்த்தல்)
குடு > குடும்பம். குடும்பு. குடும்பி.
குடு > கூடு>  கூடுதல் ( ஒன்று சேர்தல்)
குடு > குடாப்பு. கோழிக்குடாப்பு.
குடு > கூடு > கூடை (பொருளை ஒன்றுசேர்த்தெடுக்கும் முடைவு).
குடு > கூடம் : மக்கள் அல்லது பிற சேர்ந்திருக்கும் இடம்).
கூ+ இடம் > கூடம் எனினும் ஆகும்.  (பகவொட்டு எனவும் தகும்.)
குட்டை: நீர்சேர் இடம். டகர இரட்டிப்பு.

டு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதி.

கூடு> குடும்பம்,  இது சா(வு) > சவம் போலும் குறுகி அமைந்த பெயர் எனினும் ஆகும்.

இதுகாறுங்கூறியவற்றால்,  ஒன்றுசேர்தலுக்குக்  கு என்பது ஓரெழுத்து ஒருமொழியாம் அறிந்து மகிழ்க.

ஓய்ந்து சந்திப்போம்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் கவனம்.



செவ்வாய், 19 மே, 2020

வாய் என்ற சொற்பெருமை வாயால் அளவிடமுடியாதது.

வாய் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளில் பரவியுள்ளது. ஆனால் ஒவ்வொரு மொழிக்குள்ளும் அது புகும்போது, சற்று மாறுதலுறும்.  மாறுதல் இல்லாமல் புகுதல் அரிது.  எடுத்துக்காட்டாக இங்கு என்ற சொல்லைச் சீன மொழிக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால் அது இங்கு என்ற வடிவத்திலிருந்து சீனமக்கள் ஒலித்தற்கியலும் வழியில் எளிமையாக்கப் படவேண்டும்.  அம்மொழிக்கு ஏற்ப அது  " இங்" ஆகிவிடும்.  சீனமொழியில் முன்னரே இங் என்றொரு சொல் இருப்பதால்,  மேலும் திரிபுறக்கூடும். அல்லது தள்ளுபடியாக்கப் படுதலும் கூடும். திரிபின்றி ஏற்கப்படுதலும் கூடும்.

Subcuntaneous என்ற ஆங்கிலச் சொல் இன்னொரு ஐரோப்பிய மொழியில் sous cutanee  என்று மாறிவிடுகிறது.மொழிக்கு மொழி மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது ஆகும்.

இவைபோலவே வாய் (பொருள்: வாய் என்னும் உறுப்பு,  மற்றும் வழி)   என்பது வய via என்று இலத்தீனில் மாறுகிறது./ வாய் -  வழியென்பது வாய்ப்பு என்ற பொருளிலும் வழங்கும்  "ஓல்லும்வா யெல்லாம் செயல்"(பொருள்: இடம்) ( (குறள்) என்பது காண்க.

உருவமில்லாத வாய்:

உலகத்தில் யாம் சொல்லப்போகும் வாய் இரண்டு.  ஒன்று முடிந்த வாய். இன்னொன்று முடியாத வாய்.  அதாவது ஒல்லும் வாய், ஒல்லாத வாய். ஒல்லுதல் என்பது வள்ளுவனார் பயன்படுத்திய சொல்.

ஏதேனும் ஒரு திட்டத்தில் முடிந்த வழி முடியாத வழி இருக்கலாம்.  இந்த வாய் உருவமில்லாத வாய் அல்லது இடம். இதனைத்தான் வாய்ப்பு என்று சொல்கிறோம்.

வாய் என்ற உறுப்பினின்று வருவது:

வாய் > வாய் இ >  வாயி+த்தல் >  வாசித்தல்.   பொருள்: வாயிலிருந்து
வெளிப்படுத்துதல்.

வாய்நீர் -  உமிழ்நீர். பேச்சில் இது வானி, வாணி என்று இடைக்குறைந்து
வழங்கும்.

வாய்மலர்தல் -  (பெரியோர்) சொல்லுதல்.

வாய்வது - உண்மை.

வாய்மை - உண்மை.

வாய்வாளாமை - மவுனம். பேசாமை.

வாயுறை -  உறுதிமொழி  மற்றும்....

வாசி+ அகம் (விகுதி) >  வாசகம். (  திருவாசகம்).

வாத்தியார்: வாய்ப்பாடம் சொல்பவர்.  ( உபாத்தியாயி வேறு)  உப அத்தியாயி.
வாய் > வாய்த்தியார் > வாத்தியார். யகர ஒற்று இடைக்குறை.

வாய்+ உ = வாயு..  வாயிலிருந்து ,முன்வருங்காற்று.   பொதுவாகக் காற்று.
ஓர் இடத்திலிருந்து வெளிப்படும் காற்று என்பதுமாம்.   உ - முன். சுட்டுச்சொல்

வாய் - நீட்சிக்கருத்து.

கால்வாய்.

வாய்க்கால்

வீட்டின் பகுதி

வாய் > வாயில் > வாசல்.

இடமிருப்பது

வாய் > வயம்.  ஒருவனிடம் இருப்பது.

இடத்தில் கிடத்துவது:

வாய் > வய் > வை.

இவற்றைக் காண்க:  பை > பய் > பயல்.  பை > பையன்.

பை > boy  எப்படி? ஆய்வு  செய்க.

இவற்றில் சில,  ---  அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிந்து மகிழ்க.



இன்னும் பல. பின் காண்போம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம்.

இதில் ஓரிடத்தில் "  இதனைத்தான்" என்பது
" இதனைததான" என்று மாறிவிட்டிருந்தது. கண்டுபிடித்து
த என்பதற்கு த் என்று ஒரு புள்ளிவைக்க உடனே
"ன " என்பது  "ன்" என்று தானே மாறிவிட்டது..
இவற்றின் தொடர்பு புரியவில்லை.  மென்பொருள்
வல்லுநராயின் அன்புகூர்ந்து ஏன் என்பதைத்  தெரி-
விக்கவும். 5.51 21.5.2020 சில திருத்தங்கள் செய்யப்பட்டன.






திங்கள், 18 மே, 2020

பண் - பலபொருளுள் நிந்தை

பண் என்ற சொல் தமிழறிந்தோரிடையில் அறியப்பட்ட இனிய சொல்லே ஆகும். இதற்குப் பல பொருள். என்றாலும் பெரும்பாலும் பண் என்றால் பாட்டு என்ற பொருளில் அது மக்களிடை  வழக்குப் பெற்றுள்ளது. இஃதன்றி பண்பாடு, பண்பட்ட, பண்படுத்துதல் என்பன போலும் சொல்லாட்சிகளிலும் அது உணரப்படுகிறது.


பண் என்பதற்குப் பல பொருள் இருத்தலால்,  பயன்படுத்துதற்குக் கடினமான சொல்லானாலும்,  அதன் பல்வேறு பொருள்களில் ஒன்றிரண்டு மட்டுமே நினைவில் அல்லது பொருண்மையறிவில் வைத்துக்கொண்டுள்ளபடியினால் , நடைமுறையில் இச்சொல்லால் நமக்குத் தொல்லையொன்றுமில்லை என்பதே உண்மை. மறதியும் சிலவேளைகளில் நம் கடினத்தை நீக்கிவிடுதல் கூடும்.

பண் என்பது நிந்தனை என்ற பொருளுடையதாகவும் உள்ளது. இப்பொருளின் இதைப் பயன்படுத்திய  இந்நாளைய  ஆசிரியர் யாரும் நம் நினைவில் இல்லை.

இப்பொருள் எவ்வாறு ஏற்பட்டது எனக் காண்போம்:

பள் >  பள்ளம், தாழ்வு.
பள் > படுகை, தாழ்வு.
பள் > பண்> பணிதல் ( தாழ்நிலை மேற்கொள்ளுதல் அல்லது அடைதல்)


நிந்தனை செய்யப்படும் ஒருவன்,, பிறர் காட்சியில் தாழ்நிலையில் எண்ணப்படுகிறான். பணிதலுறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பள் > பண் ஆவதனால், பண் எனற்பாலது நிந்தனை என்றும் பொருல் படும்.

பள் ( அடிச்சொல் ) > பண் > பணிதல், பணிவு.

ள் என்ற ளகர ஒற்று உடைய சொற்கள் ணகர ஒற்றாக மாறுவது சொல்லியல் விதிப்படியாகும்.

சந்தி என்னும் சொல்புணார்ச்சியிலும் மற்றும் ஏனை இடைச்சொற்களின் சேர்க்கையாலும்  ள் என்பது ண் ஆகிவிடும்.  எ-டு:

மாள் > மாண்டார்.


ஆள் எனற்பால பெண்பால் விகுதியும் ஆண் என்ற வடிவத்தையடைந்து  பின் ஆண்பால் விகுதியுமாகும்.

 ஆள் > ஆண்
ஆண் >  ஆன்.  ( எ-டு: வந்தான் ).

புணர்ச்சியில்:  ஆள் - ஆண்ட, ஆண்டு. ( எச்ச வினைகள்)
இங்கு வினைப்பகுதுயுடன் சேர்ந்தவை இடைச்சொற்கள்.

ஆள் என்ற சொல்லே  ஆட்சியுடைமை அல்லது ஆளுகையைக் காட்டும். அதனின்று திரிபுற்ற ஆண் என்ற சொல்லில் இப்பொருள் சிறக்கவில்லை.


ஆண்மை என்ற சொல்:

இது இருவகையிலும் பெறப்படும்.  எ-டு:

ஆள் + மை =  ஆண்மை.
ஆண் + மை = ஆண்மை.

சொல்லாண்மை, நகராண்மை என்று வரும் சொற்களை  ஆள்+மை = ஆண்மை என்றும்   ,  ஆண்தன்மை என்று குறிக்கும்போது  ஆண்+மை என்றும்  பிரித்தலே சரி.

சொல்லமைப்பில்:  ஆள் - ஆண்டவன்.

பிளவுக் கருத்து:  பாள் > பாண்டம்.

                                    பாள் > பாளம் என்பதும் பிளவுக் கருத்தே.

இதுகாறுங் கூறிய சிலவற்றால்,  பண் என்பது ஏன் நிந்தை என்ற பொருளிலும் நிகண்டு மற்றும் அகரவரிசைகளிலும் காணப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிழைகள் பின் கவனிப்பு.

5.30 மாலை 19.5.2020 -  சில தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வெள்ளி, 15 மே, 2020

நுண்ணுயிர் கொரனாவிடம் மனிதன் தோற்பானோ?

முன்னூ  றாயிரத் தின்மேல் அழிந்தனர்
இந்நாள் இதுவே உலகப் பெரும்போர்
எந்நாள் இருள்முகில் நீங்குமோ அறியோம்
நன்னாள் புவிமேல் நண்ணுதல் அரிதே.

அறிந்ததும் இலையே முன்னிது வகிலம்
தெரிந்து விலகிடப் பட்டறி விலதே
பரிந்து பேசிடும் தாயொடு தந்தையர்
இழந்து தவிப்பவர் எல்லை மிகுந்தனர்

தமிழறிந்  திலங்கிய தகைசால் பெரியோர்
இமிழ்கடற் கப்பால் இருந்தனர் பலபேர்
குமிழ்பல முளைத்த மகுட  முகிப்புழு
உமிழ்நஞ்   சூடுரு வியதோ அறியோம்.

வழக்கம் போல வந்திலர்  அன்னவர்
இளக்கம் அடைந்தது என்மனம் இவணே
துலக்கம் பெற்றிவ் வுலகினைப் பேண
கலக்கம் விலக்கும் கரைகண் காணுமோ?

கண்ணுறக் காணா நுண்ணுயிர் தன்னொடு
மண்ணர  சன்மனி தன் தொடுத் திடுபோர்
விண்ணவர் நகைக்க வியன்புவி திகைக்க
மன்னவன் மனிதன் தன்னிலை தாழ்வனோ?


பதப்பொருள்:

முந்நூறாயிரம் -  3 இலட்சம்
இருள்முகில் - கார்முகில், கருமேகம்.
(முன்னர் காரிருள் என்பதில் மாற்றம்)
நண்ணுதல் - வருதல். நெருங்குதல்
அறிந்ததும் இலையே முன்னிது வகிலம் -அகிலம்
முன் இது அறிந்தது இல்லை.
பட்டறிவு - அனுபவம்
எல்லை மிகுந்தனர் - தாங்கும் எல்லையைக்
கடந்துவிட்டனர்
இலங்கிய - விளங்கிய
தகைசால் - நற்பண்பு நிறைந்த.
இமிழ்கடல் - அலையோசைக் கடல்
மகிடமுகி - கொரனாவைரஸ் (நோய்நுண்மி)
இளக்கம் - வலிமை இழந்த நிலை, நெகிழ்வு
புழு - இங்கு நோய்நுண்மி.
துலக்கம் - தெளிவு. ஒளி
மண்ணரசன் -  பூமியை ஆளும் மனித வருக்கம்.
(ஓருமை பன்மைக்கு நின்று பொருள் உணர்த்தல்)
விண்ணவர் - உயர்ந்தோர்.  விண் - உயர்வு.
வியன் - விரிந்த
மன்னவன் மனிதன் -  நிலைபேறு உடையவனான
இம் மனிதன்.
தன் நிலைபேற்றினை இழந்து வீழ்வானோ?
(போர் தொடுப்பவன் மனிதன், அவனே வீழ்வானோ?
நோய்நுண்மி வீழாதோ? என்பது ).

மண்ணரசன் தொடுத்த போரில் தன் ஆட்சி இழந்து
வீழ்வானோ என்று முடிக்க.

மன் என்பது நிலைபேறு குறிக்கும்.  அரசன் என்ற
சொல்லின் இக்கருத்து இல்லை. அதனால் மன்னன்
என்ற சொல் பெய்து முடிக்கப்பட்டது.





வியாழன், 14 மே, 2020

தொல்காப்பியர் இன்னொரு பெயர் திரணமாதக்நி?

தொல்காப்பியருக்கு திரணமாதுக்கினி  என்ற ஒரு பெயரும் சொல்லப்படும்.

இவர் தம் நூலை அரங்கேற்றிய போது  பேராசானாக விளங்கிய
அதங்கோடு ஆசான்  தொல்காப்பியரை அரசவையில் தமக்குச் சமமானவராகவும்  தக்கவராகவும் ஏற்றுக்கொண்டார். அப்படி இல்லாவிட்டால் இருவரும் எப்படி ஒன்றாக அவையில் அமர்ந்து  ஒருவர் இலக்கணத்தைச் சொல்ல இன்னொருவர் கேட்பது? அரசன் தந்த வேலை ஆதலால் இருவரும் ஒத்துப்போனால்தான் காரியம் நடைபெறும்.  ஒருவர் இக்காலத்தில்போல் இணையதளத்தில் சொல்லி இன்னொருவர் வீட்டிலமர்ந்து படித்துக்கொள்வதானால் இந்த ஏற்பாடு தேவையில்லை அன்றோ?  இருவருக்கும் அரசன் தரும் சம்பளமும் தேவை. அவை பெரும்பாலும் பொன்னும் மணியுமாய் இருந்திருக்கும்.

இது நடைபெற்றது இடைச்சங்கத்தின் இறுதி என்பதே சரியான கொள்கை.


ஆசான், தொல்காப்பியரை திறனில் மாதக்க நீர் என்று போற்றிக்கொண்டாடினார்  என்று அவையில் உள்ளவர்கள் நினைத்தனர். அதுவே உண்மையும் ஆகும்.

இதிலிருந்து திறனில் மா + தக்க + நீ  என்ற பெயர் அமைந்து, பின் அயல் நாவுகளும் அறிந்து போற்றியதால் திரணமாதக்கநி என்று பேதமுற்றுச் சுருக்கம்பெற்றுப் பெயராயிற்று.

திரணமாதக்கனி என்பதும் காரணப்பெயர்தான்.

சீனி என்பது சில தமிழின மொழிகளில் ஜீனி என்று வருதல் காண்க

பழம் + நீ  = பழநி என்பதும் நீ  என்பதில் முடிந்தது  காண்க, பின் குறுகிற்று.


 அந்தக் காலத்துப் பெரும்புலவர்கள் தங்கள் இயற்பெயர்களால் அறியப்படவில்லை என்பர் ஆய்வாளர் சிலர். எடுத்துக்காட்டு:


வள்ளுவர் >  வள்ளுவக்குடி
தொல்காப்பியர் >  காப்பியக்குடி
பாணினி > பாணர் குடி  (பாண்+ இன் + இ)
வால்மிகி > வால்மிகக் குடி.  வான்மிகி என்ற வடிவமும் வழங்கும்.

இப்பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிலும் வழங்கியிருக்கக்கூடும்.
அதாவது : பாணினி என்பது பாண் குடியினர் என்றும் பாட்டில் வல்லவர் என்றும் இருபொருளில் அந்தக்காலத்தில் வழங்கியிருக்கலாம். இதை அறிய வழியில்லை,

பாணினி என்ற பெயரின் அமைப்பைப் போலவே பாடினி என்ற சொல்லும் அமைதல் காண்க. எடுத்துக்காட்டு:  காக்கை-பாடினியார். பாணர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்கள். பாட்டு எழுதிப்  பாடிப்  பிழைப்போர்.

பாண் இன்  இ
பாடு  இன் இ


அவர்களில் ஒருவரே சங்கதத்துக்கு  Sanskrit  இலக்கணம் வரைந்தார் .Sanskrit was then known by a different name. Does not matter here.

காப்பியக் குடியினர் பலர் புலவர்களாய் இருந்தனர். எடுத்துக்காட்டு: பல்காப்பியனார் ,  இவர்களுள் தொன்மையானவர் தொல்காப்பியனார்,

பழம் பண்டிதர்களை அறிக  மகிழ்க 

தட்டச்சுப் பிறழ்வு - பார்வை பின்.

( தமிழ் எழுத்துருவாக்கி வேலை செய்யவில்லை )


மகுடமுகி  ( கொரநாவால்  ) இவை குறைவான தொகையினரால் இயக்கப் படுகின்றன  போலும் .

உங்களைப்  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.




மூர்க்கமும் முறுக்கும்

கடுமை என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம்.   "கடு"  என்பது தொட்டுப்பார்க்கும்போது ஒரு பொருள் நெகிழாமலும் அமுங்காமலும்  திடமாக இருப்பதையே குறிப்பதாகிறது.  பொருளில் கடினம் அல்லது கடுமை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.  அதனால்தான் உண்பொருளாகிய கடலைக்கு அப்பெயர் ஏற்பட்டது. இச்சொல் ஏற்பட்ட விதம்:

கடு >  கடு + அல் + ஐ >  கடலை

என்பதுதான்.

கடு என்ற உரிச்சொல்லில் அல் விகுதியும் ஐ விகுதியும் இணையவே, கடலை என்ற சொல் தோன்றுகிறது.  கடு என்பது  கடு அல் என்று இணைக்கப்படும்போது சொல் நீட்டமாகிறது. இவ்வாறு மிகுவதால் அல் என்பதை விகுதி என் கின்றோம்.  மிகுதிதான் விகுதி.  இது சொல்லின் மிகுதி.
மிஞ்சு என்பது விஞ்சு என்றாவது போல் மிகுதி என்பது விகுதி என்று திரிவதால் அல் என்பதை விகுதி எனலாம்.  ஆனால் இங்கு இன்னொரு விகுதியான ஐ என்பது இணைக்கப்படாதாயின் வேறுபொருள் ஆகிவிடும். ஆதலின் ஐ வரவேண்டும். அப்போதுதான் கடலை ஆகும். இல்லாவிட்டால் கடல் என்று நின்று வேறுபொருள் ஆகிறது.  வேறுபொருள் ஆயினும் ஆகவில்லை எனினும் இடையில் நிற்கும் விகுதியை  இடைநிலை என்ற இன்னொரு பெயரால் வழங்குவது நன்று என்று தோன்றுகிறது. நினைத்த எல்லையை அடையாதவரை இடைவரவுகளை இடைநிலை என்று கொள்வது நல்ல கொள்கையாகும். இதில் சரி-தவறு என்பதினும் வசதியே குறிக்கோள் ஆகும்.

கடு என்பதில் கடினம் அல்லது திடத்தன்மை மட்டுமே பொருளன்று.  கடு என்பது வேகத்தையும் குறிக்கும். இன்னும் பல்வேறு பொருள் உள்ளன. அவற்றை நீங்கள் அகரவரிசைகளில் கண்டுகொள்ளலாம்.  வேகமாக அல்லது விரைவாக ஓடும் விலங்காகிய குதிரைக்குக் கடுமா என்ற பெயரில்லை. அது புலி, யானை, அரிமா என்னும் சிங்கம் முதலியவற்றைக் குறிக்கும். மான் என்னும் மென்மை விலங்குக்கு முரணாக அரிமாவிற்குக் கடுமான் என்ற பெயருள்ளது அறிக. ஆனால் கடுக என்பது விரைய என்றே பொருள்தரும்.

சொற்களில் பலபொருள்  இருக்கக்கூடும் என்பதை மனத்திலிருத்தவே இதைக் கூறினோம்.  இப்போது மூர்க்கம் என்ற சொல்லுக்கு வருவோம்.

மூர்க்கம் என்பது  எதையும் விடாமல் நின்று மிகுதி காட்டும் தன்மையையே குறிக்கிறது. விட்டுக்கொடுத்துப் போவதே சாலச்சிறந்த தந்திரமான தன்மை என்று பிறர் நினைக்கையில், விடாமைபற்றும் தன்மையையும் மூர்க்கம் என்று சொல்லலாம்; சிலர் அத்தன்மையை மடமை என்றும் கொள்ளலாம் ஆதலின், இதற்கு மடமை என்ற பொருளும் ஏற்பட்டது. மிகுசினம், கடுங்கோபம் என்பவும் இச்சொல்லுக்கும் பொருளாகக் கூறப்படும்.

முறுகுதல் என்ற சொல்லுக்கும் விரைவு, முதிர்தல், மிகுதல், செருக்குதல் என்னும் பொருள்கள் உள்ளன. முறுக்குதல் என்பதற்கும் இதை ஒட்டிய பொருள் வரும். இவற்றின் பகுதி அல்லது முதனிலை "முறு" என்பதாகும்.

முறு எனற அடியே மூர் என்று திரிந்தது.  ஆனால் மூர்த்தி என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பில்லை.  அந்த மூர் வேறு. இந்த மூர் வேறு.

முறு மூர் என்ற இவ்வலைக்குள் அகப்பட்ட பகுதிகள் விரைவு, மிகுதி, சினமிகை,  செருக்குதல் என்ற பொதுப்பொருள் உடையன.  ஆகவே முறு, மூர் என்பன நுண்பொருள் வேறுபாடு உடையனவே.  இவற்றின் முந்திய மூலவடி முல் என்பது. அதனை ஈண்டு விளக்கவில்லை.

அடிப்படையில் இப்பகுதிகள் கடுமை அல்லது கடினம் காட்டுபவை.

எனவே, இதன் முடிபு  முறு என்பதே மூர் என்று திரிந்தது. என்னும்போது முல் என்பதும் மூர் என்று திரியும்.  அப்பன், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் உறவுகள் போல்வன. ஆதலின் இன்னொருவர் முல் மூல் என்பதே மூலமெனினும் பேதமின்மை அறிக.

-------------------------------------------------------------------

அடிக்குறிப்புகள்


பெயர்தல் :  பெயர் > பேர் > (பே{ர்})+ து+ அம்) > பேதம்.
மிகு> விகு+ஆர்+அம் > விகாரம்.  மிகுந்து வேறுபடல், வேறுபாடு. ஆர் - நிறை(வு.) சொற்பொருள் மிகுதியினால் வேறுபடல். வழக்கில் பொதுவாக
வேறுபடுதல்.

தட்டச்சுப்பிறழ்வுகள்: மறுபார்வை பின்
  

ஞாயிறு, 10 மே, 2020

எறும்பை விலக்கிவைத்த மனிதன்

இடியுடன் கூடிய அடியல் மழையே
விடியலை அடுத்து விழைவுறு வண்ணம்

நல்ல துளிகளாய்ப் பெய்வதிம் மழையே
வானி   லிருந்து வழிதல் நோக்கினென்

மேனி குளிர்ந்திட அழகு காட்டிடும்
நல்லது நமக்கெனில் எறும்புக் கெப்படி?

அவற்றின் வீடுகள் அனைத்திலும் வெள்ளம்
வைத்திருந்   திட்ட வத்துகள் எல்லாம்

வெற்று முயற்சியாய் வீணா கிற்றே!
எறும்புகட் கென்றே இரங்குவர் யாரோ?

சுவர்சூழ் கூரையுள்   இவர்வாழ் மனிதன்
நவைதீர் இரங்குதல் நாட்டினில் இல்லை.

எரிமலை வெடித்து நரன்தலை வீழ்ந்தால்
ஒருகுலை நடுக்கில் உழல்வர் மாந்தர்.

மனிதரை மனிதரே உகப்பர்,
தனித்துயர் எறும்பினைத் தாங்குவர் யாரே?


சுவர்சூழ் கூரை - வீடு.
இவர்வாழ் - இவர்வுஆழ் - ஏறுதல் அல்லது
ஆசையில் மிகுந்த.
அடியல் -  சொரிதல்.
நரன் - மனிதன்
நவை - கெடுதல். தீர் - இல்லாத

மறுபார்வை பின்.

ஆந்திரா ஆலை ஆவிக்கசிவு


இன்னிசை வெண்பா:

ஆலைக்குள் நின்றகன்ற ஆவிநஞ்- சைப்பரப்பி
ஓலைக் குடிலுக்குள் உள்ளாரைக் கொன்றவர்தாம்
தீவிர வாதியரோ ஏவும் எதிர்தரப்போ
யாவர்? அறிந்தார் இலர்.

இன்னிசை வெண்பா

இருந்தார் நடந்தார் இடங்களில் நின்றார்
சரிந்தார்கள் ஆங்காங்கு சாவொத்த தன்மை
பெருந்துயரே இன்னோர் இழந்தார்  உயிரைப்
பரந்துகொல் துன்பத் தொடர்.

நேரிசை வெண்பா:

அண்டைநாட்  டாரும்  அடைவிப்பார் இத்துன்பம்
உண்டநன்றி இல்லாரும் உள்ளாரே ---- மண்டையிடி
காவல் துறையோர்க்கே காத்திருப்போம் செய்திக்கு
சேவல் பலகூம் வரை.


அரும்பதவுரை:

ஆவிநஞ்சு  -  நச்சு ஆவி. ( கியாஸ்)
அடைவிப்பார் - உண்டாக்குவார்
மண்டையிடி -  சான்றுகளுடன் வழக்கை மெய்ப்பிக்கும் தலைப்பாரம் அல்லது பொறுப்பு.  ( ஐகாரக் குறுக்கம்)
கூம் - கூவும். ( தொகுத்தல் விகாரம்.)

இது ஆந்திராவில் நடந்த ஆலை ஆவிக்கசிவு பற்றிப்
பாடியது.

இவற்றை அலகிட்டுத் தளைதட்டியிருந்தால்
பின்னூட்டம் இடவும். நன்றி.  தளைதட்டின்
வெண்பாவின் இனப்பாடலாகிவிடும். துறை, விருத்தம் இன்னும்.

துன்பத்திலும் பங்குகொள்வோம்.

மறுபார்வை பின்.


There was server error at the time of writing. Post options were
not generated in direct handling. Not the usual method was used
to obtain this post. Typos will be looked into later.

சனி, 9 மே, 2020

அழிச்சாட்டியம் மற்றும் இனாம்.

அழிச்சாட்டியம்: அழி > அழித்து (வினை எச்சம்) > அழிச்சு ( பேச்சுத் திரிபு). ஆடு > ஆட்டு (பிறவினை). அழிச்சு+ஆட்டு+இ+அம் = அழிச்சாட்டியம். அழி + சாட்டு = அழிச்சாட்டு, இ, அம் என்று முடித்தலும் ஆம்

2008

இனாம் என்ற சொல்:

https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_4.html

இனாம் எனில் இன் ஆவது: இன் = உரிமை. அதாவது
விலையின்றி உரிமை. இது இன்றைப் பொருள்.
ஆம் என்பது ஆகும் என்பதன் இடைக்குறை அல்லது
தொகுப்பு. (பகுபதம் பகாப்பதம் என்று வேறுபடுத்தல்
இப்போது வேண்டாம்.)

முன் காலத்தில் இனாம் கொடுப்பதானால், உரிமையான
மக்களுக்குக் கொடுப்பது.

ஒருவர் அமைச்சர். தம் இனத்தாருக்குக் கொடுப்பது இனாம்.

இன்+ அம் = இனம் (  உரியோர்).
இன் + ஆம் = இனாம் ( உரிமை ஆவது அல்லது ஆக்கப்படுவது).
-வர்களுக்குக் கொடுப்பது.

செல்வியின் வீடு.  ( செல்வி  இன்).


மறுபார்வை பின்.