இதுகாலை நாம் மினிஸ்டர் என்ற ஆங்கிலச் சொல்லையும்
மந்திரி என்ற தமிழையும் பற்றிச் சிறிது சிந்தித்து
உரையாடுவோம்.
இப்போது கடைத்தெருவில் போய் "மினிஸ்டர்" என்ற
சொல்லை நாம் பலுக்கினால் எல்லோரும் அரசில் மிகப்
பெரிய பதவியில் இருப்பவரைப் பற்றித்தான் ஏதோ
சொல்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள்.
உண்மையும் அதுதான். ஆனால் இந்தச் சொல்
" மைனர் " " மைனஸ்"என்ற சொல்லிலிருந்துதான்
அமைந்தது என்பது, பலர் முன் படித்துஅறிந்திருந்
தாலும் அந்தச் சமயத்தில் அது நினைவுக்கு வராமல்
போய்விடலாம். மந்திரி என்ற ஒருவர் நம்
வட்டாரத்துக்குள் வருகின்றார் என்றவுடன்,
அவருக்குப் பாதுகாப்புத் தருவதற்காக எத்தனை
காவலர்கள், மேலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முன்னர்
வந்துஆங்கு நின்று பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்
கிறார்கள்? இவ்வளவும்பார்த்துவிட்ட நாம் அவரை
மைனசுடனும் மைனருடனும் ( சிறு அகவையர்) தொடர்பு
படுத்தமுடியுமா?
படிப்பு வேறு, நடப்பு வேறு. படித்ததெல்லாம்
பயன்படுவதில்லை. என்னத்தைத்தான்
படித்திருந்தாலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி
ஓடவில்லை என்றால், நாம் தாளம்போட்டுக்கொண்டு
காத்துக்கிடக்கவேண்டியுள்ளது.
1300வது ஆண்டு வாக்கில் அது கிறித்துவ மதப் பூசாரி
ஒருவரின் உதவியாளரையே குறித்தது. அப்போது இந்த
"மினிஸ்டர்" என்றசொல்லுக்கு பூசாரிக்குதவி என்றுதான்
அர்த்தமாக இருந்தது. மக்கள் அப்போது "மினிஸ்ட"ரைப்
பெரியவராகக் கருதவில்லை; உத்தரவுக்கு
உட்பட்ட கீழ்ப்பணியாளர் என்றுதான் நினைத்தனர்.
அதுவே அப்போது மினிஸ்டர் என்பதற்கு அர்த்தமாகும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் "மினிஸ்ற்றல்"
என்ற பாடகர்கள்குறிக்கப்பட்டனர். மினிஸ்டர் என்பதும்
மினிஸ்ற்றல் என்பதும் சொல்லமைப்புத் தொடர்பு உடையன
என்று இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்தக் காலங்களில் பெரும்பாலான சிறிய உதவியாளர்கள்
பூசைகளின் போது பாடிப்பாடி அருளோ மருளோ வரும்படி
செய்து வணங்கி நின்றோரை அசத்தினர் என்பதே உண்மை.
உலகெங்கும் இறைப்பாடகர்கள் வாயிலின்முன் நின்று பாடி பொருளுதவிகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழில் முன்
என்பது வேறு. மின் எனற்பாலது வேறாகும். ஆனாலும்
பேச்சு வழக்கில் முன் என்பது பலரால் மின் என்று ஒலிக்கப்
பெறுகிறது. வாழைப்பழமா? அந்தக் கடைக்குப் போங்க, அங்கே
மின்னே தொங்கும் எனப்படுதலைக் கேட்டிருக்கலாம்.
மினிஸ்டர் என்பது ஆங்கிலத்துக்கு Old French menistre என்பதிலிருந்து வருகிறது. அது இந்தோ ஐரோப்பிய
மூலத்தில் மெய் என்பதிலிருந்து புறப்பட்டதாம். இதன்
மூலப்பொருள் சிறியது, சிறுமை என்பதாம். தமிழில் மெய்
என்பது உடல் என்று பொருள்தரும். உடல் என்பதோ சிறியது.
இது சின்மெய் ( சின்னதான மெய் அல்லது உடல் ) என்பதனுடன்
உறவு கொண்டது. இரண்டு மயங்கள் உண்டு. ஒன்று அகண்ட
மயம் அல்லது மையம். இன்னொன்று சின்னதான உடல்
என்னும் மையம் அல்லது மயம். (சின்மயம் ). உடல்
சிறிதானால் அதன் அகத்துப் பெரிதாய் இலங்குவது எது?
அது அகண்ட பெருவெளியில் உள்ள பெரியோனுடன் ஒரு
தன்மையினது ஆகும். எவ்வாறாயினும், அகத்து
இருப்பது பெரிது. அகத்து மா - உள்ளில் உடலினும் பெரியது.
அகத்துமா > ஆத்துமா. ( ஒ.நோ: அகத்துக்காரி > ஆத்துக்காரி ).
இந்த அகத்துள் இருக்கும் பெரியது மிக்க அகன்றது. எல்லையற்ற அகல்வுடன் ஒருதன்மையது. ஆகவே உண்மையில் அது
அகல்+ மா = அகன்மா> ஆன்மா ஆகும். ( அகல் மரம் > ஆல் மரம் > ஆலமரம். அங்கு அமர்ந்திருப்பார் ஆலமர் கடவுள் ).
சிறிதான இம்மெய்யை சிறிதென்றே இந்தோ ஐரோப்பியம்
கூறுவது, பழுதான் மெய்யைப் பழுதென்றே தமிழ் பெயரிட்டது
போலுமே ஆகும் பழுது என்பதன் இன்னொரு பொருள் இம் மெய்.
வீட்டின் முன் நின்று பாடிப் பெறுபவர் மினிஸ்ற்றல்.
மின் நிற்றலும் ( அதாவது ) : முன் நிற்றல் > மின்நிற்றல் > : ~
மின்நிற்றலில் பாடிச் சேவை செய்பவர். சிறியவர்.
சிறியாருலகிலிருந்து பெரியவரானவர்தான் மினிஸ்டர்
என்னும் மந்திரி.
எதிலிருந்து எது வந்தது நாம் சொல்லவில்லை. பெரியது எது?
சிறியது எது?சிறியதே பெரியதானதே என்பதுதான்,
இதையும் வாசிக்க விரும்பக்கூடும்:
https://sivamaalaa.blogspot.com/2016/02/murder.html : போற்றியும் பூசாரியும்.
உடல்நலம் காக்க.
முகக்கவசம் அணிக. இடைவெளி போற்றுக.
நலமுண்டாகுக
தட்டச்சுப் பிறழ்ச்சிகள் திருத்தம் பின்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக