இச்சொல்லின் பிறப்பை அறிதல் இயல்பே.
ஓச்சர் என்போர் பூசாரிகள். இச்சொல் உவச்சர் என்றும்
வழங்கும்.
ஓச்சம் என்பது பதிற்றுப்பத்து (வெவ்வர் ஓச்சம் பெருக...41.20)
முதலிய நூல்களில் காணப்படுகின்றது. இது ஓங்குதல் என்ற
சொல்லுடன் தொடர்புடைய சொல்லே.
ஓச்சம் - உயர்வு.

செங்கோல் ஓச்சுதல் என்ற வழக்கும் உளது.
உவ என்பது முன்னிருத்தல் என்னும் பொருள் உடையதாதலின்
உவ + சு + அர் = உவச்சர் என்று அமையும். சு விகுதி. அர் என்பது
பலர்பால் விகுதி.
உவ + அச்சர் என்று பிரித்து, முன்னிருக்கும் தந்தையர் என்றும்
பொருள்கூறுதல் பொருந்துவதே ஆகும். அப்பன் - அச்சன் - அத்தன்
என்பன சொற்போலிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக