பழங்காலத் தமிழர்கள் (பெண்டிர் ) முகத்துக்கு மஞ்சள் தேய்த்துக்கொண்டனர். மஞ்சள் என்பது நோய்நுண்மிகளைக் கொல்லும் ஆற்றல் மிக வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. எனினும் இக்காலத்தில் அம்மி குழவி முதலியவை இல்லாமலாகவே, மளிகைக் கடைகளிலிருந்து சிறு பைக்கட்டுகளில் மஞ்சள் பொடி கிடைக்கிறது. இது குழம்பு வைக்கப் பயன்படுகிறது, தவிர முகத்துக்குப் பூசப்படுகிறதா என்று தெரியவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் முகமாவு சிறு கட்டிகளாகச் சீனாவிலிருந்து வந்தன. அவற்றைத் தேய்த்தால் கையில் மாவு கிடைக்கும். வாசனை உள்ள மாவுதான். மலேசியா சிங்கப்பூர் முதலிய இடங்களில் பெண்களும் சிறு பிள்ளைகளும் இம்மாவு பூசிக்கொண்டு முகம் சற்று வெளிறிக் காணப்பட்டு அழகுநிலையை அடைந்து மகிழ்ந்தனர்.
உலோகப் புட்டிகளில் முகமாவு வேண்டுவோர்க்கு அதுவும் கிடைக்கவே செய்தது. இப்போது நெகிழிப் பெட்டிகளில் வருகிறது.
நெகிழி - பிளாஸ்டிக்.
மேற்கூறிய முகமாவுக் கட்டிகளைத் தமிழர்கள் "புட்டாமாவு" என்றனர். மாவுக் கட்டியைப் பிட்டால் ("புட்டா" ) அது மாவாகிவிடும்.
பிட்டு என்பதைப் புட்டு என்பதும் பிட்டால் என்பதைப் புட்டா என்பதும் பேச்சுத் திரிபுகள்.
பிட்டுக்காக மண்சுமக்க வந்தவரும்
வாங்கினார் முதுகுவீங்கப்
பாண்டியன் கைப் பிரம்பாலே
என்பது ஒரு சிற்றூர்ப் பாட்டு.
நம் மூத்த குடிமக்களிடம் யாம் அறிந்துகொண்டது இது. ( புட்டாமவு)
பிட்டால் மாவு > புட்டாமாவு, புட்டாமா.
இது இப்போது வழக்கில் இல்லை.
உங்களில் யாராவது முனைவர்ப் பட்டத்துக்கு வழக்கிறந்த சொற்களை ஆய்வு செய்யலாமே. சுரிநாம் முதல் உலகில் பல மூலைகளிலும் தமிழர்கள் இருந்துகொண்டுள்ளனர். அவர்களிடம் ஒருகாலத்தில் இருந்து இப்போது மறைந்துவிட்ட சொற்களை ஆய்வுசெய்தல் நன்மை பயக்கும்.
தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக