இன்று வேங்கடகிரி என்ற சொல்லில் வரும் கிரி என்ற சொல்லைத் தெரிந்தின்புறுவோம்.
கிரி என்பது மலை. கிரி என்பது பெரிதும் எடுத்தொலிக்கப்படும் சொல்லாகும். பலர் Giri என்றே ஒலிப்பது வழக்கம். இஃதொரு திரிசொல் ஆகும். அதாவது மாற்றங்கள் அடைந்து வந்த சொல். இதிலேற்பட்டது சொல்லின் பலுக்குமுறை மாற்றமே. ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சொற்களை ஒப்பீடு செய்தால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்லுங்காலை ஒலிப்பு மாறுதலை நல்லபடியாக அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பாருங்கள்:
சாலமன் > சுலைமான்.
மேலும் சில குறிப்புகள்:
https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_36.html
ஏன் மாறியது?
தமிழ்முறைப்படி விளக்குவதானால் ஜூலியஸ் என்பது யூலியஸ் என்று மாறவில்லை ( சொற்போலி)? மொழிக்குள்ளேயே இருவகையாய் வந்தால் போலி என்று சொல்கிறோம். இரண்டுமொழிகட்கிடையில் இப்படி நிகழ்ந்தால் அதுவும் போலிதான். இலக்கணப்புலவன் ஒத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அது போல இருக்கும்போலியே. வேறுபெயரால் தான் சொல்லவேண்டுமென்று அடம்பிடிப்பதானால் அயற்போலி என்று ஒரு புதிய பெயரைக் கொடுக்கலாம். இவற்றைத் திரிசொல் என்றார் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமுனி. ஆனால் அவர் சொன்னது சொல்லுரு மாற்றம் அடைந்து பொருள் வேறுபடாமையும் சொல் மாறாமல் பொருள் மாறியதும், இரண்டும் மாறியமைந்ததும் என விரியும்.
[ தொல்காப்பியர் காப்பியக்குடியில் பிறந்தவர். பழஞ்சுவடிகளைக் கற்றுத் தெளிந்து, அவற்றைக் காப்பதான கடம் மேற்கொண்ட தொல்காப்பியக் குடி என்றறிக. தொல் - பரம்பரையாக அதே தொழில் என்று பொருள்.
காப்பியங்கள் "சாஸ்திரங்கள்". இக்கால முறையில் அறிந்தவர், "சாஸ்திரி" என்க. " பல்புகழ் நிறுத்தப் படிமையோனே என்று புகழ்கிறார் பனம்பாரனார். படிமையோன் - முனிவர். நன்னூலை ஐரோப்பாவுக்குக் கொண்டுபோய் மொழிபெயர்த்து அங்குள்ள புலவர் பெருமக்கள் இலக்கணம் அறிந்துகொண்டது நீங்கள் அறிந்ததே. ஓர் இடுகையில் சொல்லியிருக்கிறோம். ]
நிற்க.
மிகுதியான திரிபுகள் உண்டான காரணத்தால் மொழிகள் பல்கின.
இப்பொழுது கிரிக்கு வருவோம்.
தமிழ்ச்சொல் குன்று. ( சிறிய மலை).
எது சிறிது எது பெரிது என்பது சொல்வோன் கேட்போனின் மனத்துட் பட்டது ஆகும்.
குன்று, இது இடைக்குறைந்தால் குறு.
குறு > கிறு > கிரி. மலை. று >ரு > ரி பேதச்செருகல்.
இவையும் காண்க:
குறு > குன்று ( இடைமிகை).
குறு > குறுகு.
வினைகளாக: குன்றுதல், குறுகுதல். வெவ்வேறு வடிவங்கள், பேதம் இல்லை.
அதாவது பொருள் பெயர்ந்து வேறு நிலையை அடையவில்லை.
[பெயர் > பெயர்+ து + அம் > பெயர்தம் > பேர்தம் > பேதம்.
பெயர் என்ற தனிச்சொல்லும் பேர் என்றுமாகும்.]
கிரி பலமொழிகளிலும் வழங்குவது தமிழனின் பெருமை. தன்மொழி வளமை.
தட்டச்சுப் பிறழ்வுகள் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக