இடைவெளி
தம்மில் கடைப்பிடி;
கடனே;
மடைதிறந்
தன்ன வருநோய் தடுப்பாய்;
உடுமுக
ஆடை தடுசளிச் சிதறல்;
நெடுசொல
வின்ன வனைத்தையும் அறிந்தோம்.
அறிந்திலர்
என்பார் எவருமிங் கிலையே.
தெரிந்தன
செய்ய மறுத்திடும் நிலையில்
நெரிசலில்
தம்மை நுழுந்திய படியாய்
வரிசையில்
நின்றார் வழக்கமே யதனால்.
நோய்க்கோர்
நுடக்கம் அரசியற்றிற் றில்லாயின்
மாய்க்குவழிச்
செல்வரோ சொல்.
சொற்பொருள்:
தம்மில் - ( மனிதர்கள் ) தம்மிடை.
கடனே - கடமையே.
மடைதிறந்தன்ன - மடை திறந்ததுபோல்,
பெருந்தொகையாய்.
உடு முக ஆடை - முகக் கவசம் அணிக.
அறிந்திலர் - அறியாதார்
நெடுசொலவு - நீண்ட உரைகள். பேச்சுகள்.
நெடுத்தல் = நீளுதல். நெடுசொலவு (வினைத்தொகை).
நெடுத்தல் = நீளுதல். நெடுசொலவு (வினைத்தொகை).
இன்ன - இந்தமாதிரி.
நுழுந்திய - உட்புகுத்திய
நுடக்கம் - முடக்கம்
அரசியற்றிற்றில்லாயின்- அரசாங்கம்
நடைமுறைப்படுத்தவில்லை என்றால்
மாய்க்குவழி - மாய்க்கும்வழி; தம்முயிரை
எடுத்துக்கொள்ளும் வழி. ம் ஒற்று - தொக்கது.
http://theindependent.sg/phase-1-report-card-seen-as-a-fail-by-netizens-as-crowds-gather-at-transportation-hubs/
Singapore – Members of the public questioned the effectiveness of the Post-Circuit Breaker’s Phase 1 wherein households are allowed only two visitors a day, yet huge crowds were spotted at various public transport hubs.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக