அதிகாரம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.
இங்கு நாம் கவனிப்பது நூலதிகாரம். அதாவது நூலில்
பிரிவுகளாக வரும் அதிகாரங்கள். முன் இதை
அதி + காரம் என்று பிரித்துப் பொருள்கூறுவதுண்டு.
அத்தியாயம் என்ற சொல்லுக்கு இங்குப் பழைய
இடுகைகள் தந்துள்ள பொருளைச் சார்ந்தே இதை
விளக்கப் புகுவோம்.
அற்று > அத்து. இது பேச்சு வழக்கிலும் இயல்பான
திரிபாகும்.
இகு இது இங்கு என்பதன் ஙகர ஒற்று நீங்கிய
இடைக்குறைச் சொல். எடுத்துக்
காட்டு இன்னொன்று:
ஓங்கு > ஓகு > ஓகம் என்பது போலுமே.
ஆரம் : இது ஆர்தல் என்னும் வினையில் அம்
சேர்ந்த தொழிற்பெயர். நிறைவு என்பது
இச்சொல்லின் பொருள். இச்சொல்லுக்கு
வேறு பொருட்களும் உள. சூழ்தல் அல்லது
சுற்றி இருத்தலும் ஆகும்.
அத்து = முடிந்து,
இகு = இதே இடத்தில் அல்லது நூலில்
ஆரம் = நிறைவாகுவது.
அத்தியாயம் ஒவ்வொன்றும் முடிந்து முடிந்து
தொடங்கித் தொடங்கி நிறைவாகுவதுதான். ஆதலால்
பொருள் பொருத்தமாக உள்ளது.
அத்து இகு ஆரம் > அத்திகாரம் , மீண்டும்
இடைக்குறைந்து அதிகாரம் ஆகிறது.
தமிழ்மொழி முழுவதும் இவ்வாறு சொற்களைத்
தொகுத்தலும் குறைத்தலும் மிகுதி. விழிப்ப
நோக்கின் விரியும் அறிவு; புரியும் நிலைமை.
என்னில் - எனில், தன்னில் - தனில்;
முக்கண்ணா போற்றி - முக்கணா போற்றி.
அத்தியாயம் என்பதில் த் என்ற ஒற்று
வீழவில்லை. இதில் வீழ்ந்துள்ளது. இது
சொற்சுருக்குக்கும் இனிமைக்கும் ஆகும்.
சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்
என்பதில் த் என்னும் ஒற்று வீழ்ந்துள்ளது.
லகரம் ரகரம் ஆயிற்று. இவை பல
சொற்களில் காண்புறும் நடைமுறைகளே.
தட்டச்சு: சரிபார்க்கப்பட்டது. 23062020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக