இது ஓர் இடைக்குறைச் சொல்.
இடுக்கண் என்பதில் இடு+ கண் என்று இரு உறுப்புச்சொற்கள் உள்ளன.
கண் = ஏதேனும் ஒரு நிலையில் அல்லது இடத்தில்; இடு = இடப்பட்டது, அல்லது எவ்வாறோ வந்து நிற்பது என்று பொருள் கூறலாம். அதுபோலவே, இடுக்கட்டு என்ற சொல்லே டுகரம் குன்றி, இக்கட்டு என்று வந்துள்ளது.
கட்டப்பட்டதுபோல் வந்துற்ற ஒரு நிலையே இடுக்கட்டு. இடையில் உள்ள டுகர வீழ்ச்சி. இதுபோல் டுகரம் வீழ்ந்தவை:
கேடு+ து > கேது ( ஒரு நிழற்கோள்).
பீடு + மன் > பீமன் > வீமன். ( பெயர் ).
இங்கனம் வல்லினம் வீழ்ந்த இடைக்குறைகளை எம் பழைய இடுகைகளிற் காணலாம்.
கண்+ து = கட்டு என்று வல்லெழுத்து வருதல் உண்டு. என்றாலும் இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்று இடைக்குறை வரவே செய்யும்.
அறிக. மகிழ்க.
முகக் கவசம் அணிக. இடைவெளி போற்றுக.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக